விடியங்காலையே எழுந்து மேய்த்த ஆட்டின் கழுத்தறுத்து மேனி உரிக்க தொங்கவிட்டு அது அதுவாய் அறுக்க ஆட்கள் வந்துவிட்டனர்.. தூக்குசட்டியை கணம்பிடித்து வாங்கிப் போன கரித்துண்டுகளில் ஈரலும்,தலைக்கறியும் ஆடிப்பெருக்குக்கு இணாமாம்... ஆட்டுரலில் வளையலிசையோடு நசுங்கிய அந்தந்த சில்லுகளை கொட்டிக் கவுத்தி உலைச்சந்தில் ஒடித்த விறகு திணித்து மிதக்கும் கொலுப்பை கிழறிவிட்டு மொக்கை தோட்டத்து வாழைஇலையில் குமித்து வைத்த ரேசன் சோறில் ஊற்றிய கறிக்குழம்பை தவிர வேறென்ன வேண்டும் ஜென்மத்தில்...
writter அஞர் நாவல் - வர டீ பதிப்பகம் வெளியீடு https://www.commonfolks.in/books/d/angar