முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

அக்டோபர், 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கல் மோதிரமும், தந்தட்டியும் -சிறுகதை

                  ஊ ருக்கு ஒதுக்கு புறமாக , இருக்கும் ஒத்த வீட்டில் பயங்கரமான சம்பவம் ஒன்று நடந்து விட்டதாக கேள்விப்பட்ட மக்கள் கூட்டம் , மொத்தமும் , ஒத்த வீட்டின் முன்பாக குழுமியிருந்தனர் . சுற்றி திராட்சை தோட்டங்களுக்கு மத்தியில் , கோடு கிழித்தார் போல் , நெளிந்து ஓடும் ஒரு பாலடைந்த ஓடையை ஒட்டித்தான் ராமுத்தாயி கிழவியின் வீடு . அவரது கணவர் பேய்காமனுக்கு , ஓடையை ஒட்டி , ஒரு 5 ஏக்கர் நிலம் இருந்தது . அதில் ஒரு பாதி தென்னையும் , மற்ற இடங்களில் , வாழையும் , ஆங்காங்கே தரை வெள்ளாமைகளும் பயிரப்பட்டிருந்தன . ராமுத்தாயிக்கு , சிங்கமுத்து , கட்டையன் என இரண்டு மகன்களும் , காமாட்சி என்ற ஒரு மகளும் உண்டு .  இவர்கள் இருவருக்கும் வேறு ஒரு ஊரிலிருந்த நிலத்தை பங்கு பிரித்து கொடுத்து விட்டு , மீதம் இருக்கும் நிலம் மனைவி ராமுத்தாயிக்கு தான் சொந்தம் எனவும் , அவள் இல்லாத காலத்தில் , மகள் காமாட்சிக்கு பங்குண்டு என எழுதி வைத்துவிட்டு , ஒரு சிறிய விபத்தில் அவர் போய் சேர்ந்துவிட்டார் . இன்ஸ்பெக்டரும் , கான்ஸ்டபிளும் , ஒரு பைக்கில் வர , அவர்களை மரித்து...