விவசாயத்தின் வரலாறு "உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் தொழுதுண்டு பின்செல் பவர்’ விவசாயம் மனித ஜீவிகள் மொத்தமும் இதனை சார்ந்து வாழவேண்டிய கட்டாயத்தில் தான் இருக்கிறது.உயிரினம் பிறந்த முதலில் இருந்தே ஏதோ ஒரு விளைச்சல்களை நம்பி தான் இருந்திருக்கிறது.இதை இந்த காலத்தவர் உணர்ந்தார்கள் என்பது தான் கேள்வி குறியாகவே உள்ளது. மனிதன் பூமியில் தோன்றிய காலத்திலிருந்தே உணவு,உடை,இருப்பிடம் ஏதோ ஒன்றை சார்ந்து வாழ வேண்டிய கட்டாயத்தில் தான் இருந்தது.அதை வைத்து தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் மூன்று பிரிவாக பிரிக்கிறார்கள். கற்காலம் இந்த காலத்தில் ஆதி மனிதன் காடும்,அதன் சார்ந்த வாழ்வொன்றை வாழ்ந்து வந்தான்.அவனின் அன்றாட தேவைக்கான உணவை வேட்டையாடியோ அல்லது காடுகளிலிருந்தோ எடுத்து கொண்டான்.அந்த கால கட்டத்தில் இயற்கையே கதியென பசுமையோடு கொஞ்சு குத்தாட்டம் போட்டுகொண்டான்.அவனுக்கென எந்த வித மனப்பாகுபாடுமில்லை.நீ உயர்ந்தவன் நான் உயர்ந்தவன் எனும் பேசிக...
writter அஞர் நாவல் - வர டீ பதிப்பகம் வெளியீடு https://www.commonfolks.in/books/d/angar