விடியங்காலையே எழுந்து
மேய்த்த ஆட்டின் கழுத்தறுத்து
மேனி உரிக்க தொங்கவிட்டு
அது அதுவாய் அறுக்க
ஆட்கள் வந்துவிட்டனர்..
தூக்குசட்டியை கணம்பிடித்து
வாங்கிப் போன கரித்துண்டுகளில்
ஈரலும்,தலைக்கறியும்
ஆடிப்பெருக்குக்கு இணாமாம்...
ஆட்டுரலில் வளையலிசையோடு
நசுங்கிய அந்தந்த சில்லுகளை
கொட்டிக் கவுத்தி உலைச்சந்தில்
ஒடித்த விறகு திணித்து
மிதக்கும் கொலுப்பை கிழறிவிட்டு
மொக்கை தோட்டத்து வாழைஇலையில்
குமித்து வைத்த ரேசன் சோறில்
ஊற்றிய கறிக்குழம்பை தவிர
வேறென்ன வேண்டும் ஜென்மத்தில்...
2024 - இல் நான் மிகப்பெரிய கெஜ புழு..தியாக இருந்தேன். வரும் வருடத்தில் இன்னும் மிகப்பெரிய கெஜ புழு..தியாக மாற போகிறேன். நான் அவ்வொரு ஆண்டு முடியும் போதும் போன வருடத்தை விட இந்த வருடம் சிறப்பாக புழு..தி இருப்பதாக நினைத்து கொள்வதுண்டு. இல்லையென்றால் சில நேரம் என் கீழ்மை குணங்களை அளவிடுவதுண்டு. நான் போன ஆண்டை விட இந்த ஆண்டு எவ்வளவு கீழ்மை குணம் உள்ளவனாக மாறியிருக்கிறேன். எந்த அளவுக்கு என் அல்ப புத்திகள் அரங்கேறியிருக்கிறது என கணக்கிட்டு பார்ப்பேன். நான் ஒரு மகா சோம்பேறி . இலையை போல் தூக்கி ஆற்றில் போட்டால் மிதந்து மிதந்து போவேன். பாறையில் மோதாமல் போகும் சூட்சமும் தெரியும்.என்னை பெரிய பிடுங்கியாக எப்போதும் நினைப்பதில்லை. ஒரு நல்ல இயக்குனரிடம் பணிபுரிய வாய்ப்பு கிடைத்தது . நிறைய கற்றுக் கொள்ள முடிந்தது. நாம் சாதாரண கடன் கார குடும்பம் என்பதால் சூ..தை கிழிக்கும் சுமை வேறு நம்மை வேட்டையாடுகிறது. எல்லோரையும் போல் நமக்கு எல்லாம் அவ்வளவு இலகுவாக கிடைப்பதில்லை. ஏதோ நெஞ்சில் உரமிருக்க ஓடுகிறோம். உடல் ரீதியாக நிறைய கோளாறுகள் இருக்கிறது. அப்படி பயந்து கொள்ளும் அளவுக்கு ஒன்றுமில்லை தான் பா...
கருத்துகள்
கருத்துரையிடுக