முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

கட்டுரைகள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

“நான் இறப்பது நிச்சயம். இறந்ததும் வானத்திலிருந்து நமது இலட்சியத்திற்காக உழைப்பேன் ”என்ற தீலிபன் வைத்த கோரிக்கைகள்!!

  தமிழீழத்தின் விடுதலைக்காக ஒரு தலைவன் உண்ணா நோன்பிருந்து உயிர் துறந்தான் . அவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் பார்த்திபன் . இயக்கம் தந்த பெயர் திலீபன் . ஆம் , பெயரின் மூலம் சாதி , மதம் , பிராந்தியம் அறிந்து அதன் மூலம் சிறு பிரிவு ஏற்படா வண்ணம் , தமிழ்ப்பெயர் சூட்டிக்கொள்ளும் கட்டுப்பாடும் ஒழுக்கமும் நிறைந்ததொரு இயக்கத்தின் , பிராந்திய அரசியல்துறை பொறுப்பாளன் . உண்ணா நோன்பு என்றாலே நகைப்புக்குரிய ஒன்றாக மாறிவிட்ட இக்காலச் சூழலில் , கொண்ட கொள்கைக்காக சொட்டு நீர் அருந்தாமல் உயிர் துறந்து , உலகத்தின் செவிப்பறைகளில் உண்ணா நோன்பின் மகத்துவத்தை ஓங்கி ஒலிக்க செய்த போராளி . 1980 களில் இலங்கை மகாணத்தில் தமிழ் இனத்தவர் தங்களது விடுதலைக்காக அகிம்சை வழியை துறந்து போராட்டத்தை கையிலெடுத்த காலமது. அப்போது சிங்களர்களுக்கும் , தமிழர்களுக்கும் அமைதி உடன்படிக்கை செய்து வைக்கிறேன் என இந்திய அரசு இலங்கைக்குள் அமைதிபடையை அனுப்பியது. அப்போது இலங்கை வந்த இந்திய ராணுவம் தமிழர்களை ஒவ்வொன்றாக அடக்குமுறைக்கு ஆட்படுத்தியது . இதனை எதிர்த்து திலிபன் காந்தியின் தே...