![]()
பெரியாரை வெறும் கடவுள் எதிர்பாளாராகத்தான்
இங்கு பெரும்பாலானோர் தெரிந்து வைத்திருக்கிறார்கள்.அதனால் சில மதவாதிகள் அவரை ஏளனமாக பேசுகிறார்கள்.அதற்கெல்லாம் அவர் அஞ்சியவரும் இல்லை.ஈரோட்டில் நல்ல குலத்தில் பிறந்து தன் பால்யத்தில் நடந்த சில சாதிய தீண்டாமை கொடுமைகளை எதிர்த்து
போராட துவங்கிய நீள்தாடி காரர் அவர்.உலக தத்துவாதிகளை படித்த பகுத்தறிவு பெற்ற
எவன் என்ன சொன்னாலும் தான் செய்வதை செய்து கொண்டிருந்தவர்.அவரின் பெண் ஏன் அடிமையானாள் எனும் நூலை வாசித்திருந்தால்
பெண்களின் மீதான ஆண்களின் புரிதலை உணர முடியும்.அந்த நூல் தமிழுக்கு பெரும் வர பிரசாதம் எனக்கூட சொல்லலாம்.வைக்கம் போராட்டத்தில்
தனக்கான தீண்டாமை கொள்கையை முன்னிறுத்தி செயல்பட்டவர்.அவர் பேசும் போதும்
"வெங்காயம்" என்ற வார்த்தையும்,எழுதும் போதும் "நிற்க" என்ற வார்த்தையும் அதிகம் உபயோகிப்பதுண்டு.தாழ்த்தப்பட்ட மனுதனுக்காக தன் சிந்தனையை உழைப்பை தூவியதால் மனிதனை உயர்த்தும் ஜென்மமாக இருப்பதால்
அவரை பெரியார் என்கிறோம்.தான் வாழ்வின் கடைசி காலத்தில் மூத்திர பையை சுமந்து மேடையில் பேசி பாவப்பட்ட ஜீவன்களுக்காக போராடியவர்.நான் நல்ல குலத்தில் பிறந்தாலும்
என் நண்பனோடு பேசும் போது என் தாத்தா அவனிடம் பேசாதே அவன் கீழ்சாதி என்பார்.அதற்காகவே நான் பேசுவேன் என்பேன்.
என்னை அடிப்பார்.இதில் பெரிய கொடுமை என்னவென்றால் அவரே திமுக கட்சி உறுப்பினர்.
இந்த அளவில் தான் சிலருக்கு பெரியார் மீதான புரிதல் இருக்கிறது. திராவிட கட்சியின் அறிவும் இருக்கிறது.
கருத்துகள்
கருத்துரையிடுக