செப்டம்பர் 17 தமிழக வரலாற்றில் மிக முக்கியமான நாள் என சொல்லலாம். திராவிட சித்தாந்தம் தமிழகத்தில் கோலூன்றிக் கொண்டிருந்த காலமது. பெரியாரின் நீதிக் கட்சியில் சேர்ந்து பணியாற்றிய அண்ணாவிற்கும், பெரியாருக்கும் இடையே உண்டான கருத்து முரணுக்கு மணியம்மையை பெரியார் திருமணம் செய்து கொண்டது தான் காரணமா? என பலராலும் பலவிதமான கேள்விகள் முன்வைக்கப்படுகிறது. உண்மையில் இவை இரண்டுக்கும் இடையில் நிறைய பின்புலக்காரணங்கள் இருக்கின்றன.. மணியம்மையை மணந்த பெரியார் பெரியார் தனது காலத்திற்கு பின்பு தனது சொத்துகளை பாதுகாக்க வாரிசு தேவைப்பட்டது. அப்போது அவர் அண்ணனின் மகனான ஈவிகே சம்பத்தை வாரிசாக தேர்ந்தெடுக்க நினைத்தார். ஆனால் அவர் அண்ணாவின் ஆதராவாளராக இருந்ததால் அந்த திட்டத்தை கைவிட்டார். பெரியார் என்ன தான் சுயமரியாதை கொள்கையை கடைபிடித்தாலும் இந்துத்துவ சட்டதிட்டங்களை ஏற்றார். அதற்குள்ளிருந்தே அதனை சீர் செய்ய முடியும் என நம்பினார். மேலும் பெரியாரின் சொத்தென்பதும், திராவிடகழகத்தின் சொத்தென்பதும் வேறில்லை. அதனால் தான் இல்லாத காலத்தில் அந்த சொத்து மக்களின் சீர்திருத்ததிற்கு சர...
writter அஞர் நாவல் - வர டீ பதிப்பகம் வெளியீடு https://www.commonfolks.in/books/d/angar