உங்களை போல
எனக்கும் இன்னொரு
என் உண்டு..
கோர வதனம்
அதனின் இயல்பு…
சரீரத்தின் அசைவுகளை
வழி மாற்றும் உத்தி
அதற்குண்டு…
விழிகளின் 180 யை
360 ஆக சுழற்றிவிட்டு
சிலாகிக்கும் ..
தர்மம் மொழிபெயர்ப்பில்
கூட விழுந்துவிடாமல்
அடை காக்கும்...
எச்சிலை எதற்கென்றே
தெரியாமல் என்னைமீறி
உமிழ்ந்து தள்ளும்..
வேசியின் தூய்மையில்
அழுக்கை விற்க்கவும் தயங்காது...
அதனிடம் வாளோன்றும்
இல்லை …
புத்தயுக்தியும் தான்…
இருந்தும் என்
என் நடிக்கத் தெரியாத
என்னை
திரைசீலையாக்கும்…
கருத்துகள்
கருத்துரையிடுக