விவசாயத்தின் வரலாறு

"உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்’
விவசாயம் மனித ஜீவிகள் மொத்தமும் இதனை சார்ந்து வாழவேண்டிய கட்டாயத்தில்
தான் இருக்கிறது.உயிரினம் பிறந்த முதலில் இருந்தே ஏதோ ஒரு விளைச்சல்களை நம்பி தான்
இருந்திருக்கிறது.இதை இந்த காலத்தவர் உணர்ந்தார்கள் என்பது தான் கேள்வி குறியாகவே உள்ளது.
மனிதன் பூமியில் தோன்றிய காலத்திலிருந்தே உணவு,உடை,இருப்பிடம் ஏதோ ஒன்றை சார்ந்து வாழ வேண்டிய கட்டாயத்தில் தான் இருந்தது.அதை வைத்து தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் மூன்று பிரிவாக பிரிக்கிறார்கள்.
கற்காலம்
இந்த காலத்தில் ஆதி மனிதன் காடும்,அதன் சார்ந்த வாழ்வொன்றை வாழ்ந்து வந்தான்.அவனின் அன்றாட தேவைக்கான உணவை வேட்டையாடியோ அல்லது காடுகளிலிருந்தோ எடுத்து கொண்டான்.அந்த கால கட்டத்தில் இயற்கையே கதியென பசுமையோடு கொஞ்சு குத்தாட்டம் போட்டுகொண்டான்.அவனுக்கென எந்த வித மனப்பாகுபாடுமில்லை.நீ உயர்ந்தவன் நான் உயர்ந்தவன் எனும் பேசிக்கொள்ளும் எச்சை குணமும் இல்லை.கிடைப்பதை உண்டு தனது வாழ்வை அனுபவித்தான்.இந்த காலத்தில் தான்
கற்கள் மூலம் தீயை உருவாக்கி அதன் மூலம்
உணவு வகைகளை சுட்டு தின்றார்கள்.
புதிய காலம்
இக்காலகட்டத்தை வேளாண்மையின் தொடக்க காலம் எனக் கூறலாம். இக்கால மனிதன் காட்டு ரக நெல், கோதுமை, பார்லி போன்ற பயிர்களை பயிரிட்டும், ஆடு, மாடு, கோழி, பன்றி போன்ற விலங்குகளை உடன் வளர்க்கவும் ஆரம்பித்தான். மேலும் இக்கால கட்டத்தில் இடம் விட்டு இடம் பெயரும் நாடோடி வாழ்க்கை மற்றும் உணவு சேமித்தலை நிறுத்தி, தனக்குத் தேவையான உணவைத் தானே தயாரித்ததுடன், வேளாண்மை சார்ந்த நிரந்தர குடியிருப்புக்களையும் ஏற்படுத்திக் கொண்டான். புதிய கற்காலத்திலும் மனிதன் தொடர்ந்து கற்களால் ஆன ஆயுதங்களையே பயன்படுத்தி வந்தான். எனினும், அவற்றின் அமைப்பு, வடிவம், கூர்மை மற்றும் மெருகு ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை ஏற்படுத்தியிருந்தான். இக்காலகட்டத்தில் மனிதன் சக்கரங்களைக் கண்டுபிடித்தான். அது, மனிதன் மற்றும் அவனைச் சார்ந்த பொருட்களின் போக்குவரத்திற்கு வழிவகை செய்தது. சக்கரங்கள் கண்டுபிடிப்பு மனிதகுல வரலாற்றின் முக்கிய மைல்கல்’ ஆக கருதப்படுகிறது. புதிய கற்கால மனிதன் தனது உணவுப் பழக்கவழக்கத்தை மாற்றிக்கொண்டதுடன் பருத்தி, பஞ்சு மற்றும் கம்பளியாலான ஆடைகளை உடுத்தவும் அறிந்திருந்தான்.
உலோக காலம்
இந்த காலத்தில் நிறைய உலோகங்கள் கண்டறியப்பட்டு அதிலிருந்து நிறைய கருவிகள்
உருவாக்கப்பட்டது.இரும்பு,செம்பு, தாமிரம் போன்ற உலோகங்கள் பயன்படுத்தபட்டன.
உலவு செய்தல், விதை விதைத்தல் போன்ற பல வித்யாசமான முன்னேற்றம் இந்த கால கட்டத்தில் தொடங்கியிருக்கிறது.குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் மற்றும் பாலை என பண்டைய தமிழகத்தின் நிலவகைப்பாட்டையும், வருடத்தின் ஆறு பருவங்களையும், அக்காலத்தில் பயிரிடப்பட்ட பயிர்களையும் தொல்காப்பியம் எனும் நூல் விளக்குகிறது. கந்தபுராணத்தில், தானிய வயலுக்கு பறவை விரட்ட சென்ற மன்னன் மகள் வள்ளியை முருகக்கடவுள் மணந்த கதையிலும் வேளாண்மை பற்றிய குறிப்பு உள்ளது. தமிழகத்தில் சோழர் ஆட்சிக்காலத்தில் பாசன மேம்பாட்டிற்காக காவிரியின் கரைகளை கரிகால்சோழன் எனும் மன்னன் உயர்த்தியதுடன், காவிரி ஆற்றின் குறுக்கே கல்லணையைக் கட்டி வேளாண் தொழிலுக்கு முக்கியத்துவம் அளித்தான்.
பசுமை புரட்சி
உணவுப் பொருட்களின் உற்பத்தியை அதிகப்படுத்த ஏற்படுத்தப்பட்ட திட்டம் பசுமைப் புரட்சியாகும். 1943-ஆம் வருடத்தில் வங்காளத்தில் ஏற்பட்ட உணவுப் பஞ்சம் பசுமைப் புரட்சி ஏற்பட காரணமாய் அமைந்தது. மேம்படுத்தப்பட்ட வேளாண் தொழில்நுட்பங்கள், உயர் விளைச்சல் தரும் இரகங்கள், புதிய வீரிய ஒட்டு இரகங்களின் கண்டுபிடிப்பு ஆகியவற்றின் மூலமாக மக்களின் உணவுத் தேவையைபூர்த்தி செய்து தன்னிறைவு அடைவதே பசுமைப் புரட்சியின் நோக்கமாகும். இதனால் குறிப்பாக நெல் மற்றும் கோதுமையின் உற்பத்தி பன்மடங்கு உயர்த்தப்பட்டது. வேளாண் விளைநிலங்களை அதிகரித்தல், தீவிர சாகுபடித்திட்டம், வேளாண்மை மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கி போன்றவை பசுமைப்புரட்சியின் வெற்றிக்குத் துணைபுரிந்தன.
மேலும் சில வெண்மை புரட்சி என்ற வகையில் நடந்த பால் மற்றும் அதன் உற்பத்தியை அதிகரிக்க சில திட்டங்கள் வகுக்கப்பட்டது.அதன் பின் நடந்த நீலப்புரட்சி கடல் வாழ் உயிரினங்களின் உற்பத்தியை ஏற்படுத்தபட்ட
திட்டமே ஆகும்.
மஞ்சள் புரட்சி
எண்ணெய் வித்துப் பயிர்களின் உற்பத்தியை அதிகரிக்கச் செய்தலே இத்திட்டத்தின் நோக்கம் ஆகும். வீரிய ஒட்டு இரக விதைகள் மற்றும் திருந்திய சாகுபடி முறைகள் மூலமாக எண்ணெய் வித்துப் பயிர்களின் சாகுபடி ஐந்து மடங்கு வரை அதிகரிக்கப்பட்டது.
மேலும் காய்கறி மற்றும் பழங்களின் உற்பத்தியை அதிகரிக்க தங்கப் புரட்சி என்ற திட்டம் வகுக்கப்பட்டது. இந்திய வேளாண் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் பசி, வறுமை மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டினை அகற்றி, சுற்றுச்சூழல் பாதுகாப்பை மேம்படுத்த வானவில் புரட்சி என்ற தொலைநோக்குத்திட்டத்தை அறிமுகப்படுத்தியது.இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் நம்நாடு உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைவதுடன், தேவைக்கு அதிக அளவு உற்பத்தி செய்து ஏற்றுமதிக்கும் வழிவகை செய்வதாகும். இந்நிறுவனம் நாடெங்கிலும் 45 பல்கலைக்கழகங்கள் மற்றும் 97 கல்வி நிறுவனங்களுடன் தோட்டக்கலை, கால்நடை அறிவியல், மீன் வளர்ப்பு உள்ளிட்ட வேளாண் அறிவியலின் கல்வி மற்றும் ஆராய்ச்சியை ஒருங்கிணைத்து, வழிநடத்தி, கட்டுப்படுத்தும் தலைமைப் பொறுப்பை வகிக்கிறது. இந்நிறுவனம் உலகில் மிகப்பெரிய அமைப்பாகும். இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி நாட்டின் உணவுப் பொருள் உற்பத்திக்கு வழிவகுத்தது. அதனால் 1950 - 51க்கு பிறகு உணவுப் பொருள் உற்பத்தி நான்கு மடங்கும், தோட்டக்கலைப் பயிர் உற்பத்தி ஆறு மடங்கும், மீன் உற்பத்தி ஒன்பது மடங்கும், பால் மற்று பால் பொருட்களின் உற்பத்தி ஆறுமடங்கும் மற்றும் முட்டை உற்பத்தி 14 மடங்கும் அதிகரித்துள்ளது.
இப்படி காலம் காலமாக முன்னேறிக்கொண்டிருந்த இந்த வேளாண்மை வளர்ச்சியை அடுத்தகட்டத்திற்கு நமது நாடு எடுத்து சென்றதா என்பதே இங்கு கேள்விக்குறியாக உள்ளது.2000 ஆண்டுக்கு பின் ஏற்பட்ட பல காலாச்சார மாற்றத்தால் விவசாயிகளின் நிலையை ரொம்ப அபாயகரமான நிலையில் உள்ளது.அடுத்த தலைமுறை அதை பற்றி கவலைபடுகிறதே மண்ணில் இறங்கி வேலை செய்ய இங்கே யாருக்கும் தைரியமும் இல்லை.மேலும் கால நிலை மாற்றம் வேறு அவர்கள் சொல்லி தப்பிக்க ஏதுவாக அமைந்துள்ளது.
கருத்துகள்
கருத்துரையிடுக