முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

எழுதிய புத்தகங்கள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அஞர் நாவல்

  அணிந்துரை இலக்கிய வகைமையில் எனக்குப் பிடித்ததாக நான் நம்பியது கவிதைகளை தான் பிறகு அது எனக்கேற்ற வகைமையில்லை என்றுணரவே பத்தாண்டுகள் தேவைப்பட்டது. புதிதாக ஒரு புதினத்தை கண்டால் எனக்கு ஒரு புதிய உலகுகினுள் நுழைகிற உணர்வே ஏற்படுகிறது. ஒரு நல்ல புதினம் நம் மேல் ஒரு பிடித்த உடை போல உடலோடு ஒன்றிணைந்துவிடுகிறது. சில புதினங்கள் மனதோடு…அந்த வகையில் “அஞர்” என்னை கலங்க வைத்துவிட்டது. தமிழில் புதினமென்ற வடிவில் நிறைய எழுதப்பட்டிருக்கிறது ஆனால் அவையெல்லாம் புதினங்களா என்று கேட்டால் நான் நிச்சயம் சில கணங்களாவது பதிலற்று திகைத்து நிற்பேன். “அஞர்” ஒரு சிறந்த புதினம் இதை சாதித்த சிபி சரவணனுக்கு நம் வாழ்த்துக்கள். தென்மேற்கின் வட்டார மொழியுடன் அந்த நிலத்தின் அழகை கதையோடு பேசுவது உணர்ச்சிமிக்க இந்த நாவலின் மிகப்பெரிய பலம். இந்த புதினத்தை வாசித்து முடித்தவுடன் துயரில் நெஞ்சு அடைத்துக்கொண்டு கண் கலங்கிய பொழுதில் இப்படி தோன்றியது. “பிறகு அங்கிருந்து அத்தனையும் காணாமல் போயிருந்தது. ஆனால் அங்கு கொஞ்சம் வெதுவெதுப்பான தூய காதல் மட்டும் தேங்கியிருந்தது. அது இன்னும் ஆவியாகமலும், அழிந்...

திமில்-கவிதை தொகுப்பு

திமில் கவிதை தொகுப்பில் எழுதப்பட்டிருக்கும் கவிதைகள் அனைத்தும், தன் நிலத்தை தேடி அலையும், பண்பாட்டு அசைவுகளை தூண்டும் பின் நவினத்துவ கவிதைகள் இடம்பெற்றுள்ளன. தொடர்புக்கு  தமிழ்வெளி கலாபன்: 9094005600

எச்சிலை -சிறுகதை தொகுப்பு

கரிசல் மண் வாழ் மக்களின் வாழ்க்கையை அவர்களின் அன்றாடப்பாடுகளின் விவரணைகளை கதாபாத்திரங்களுக்கு உருவகம் கொடுத்து , கதை மாந்தர்களாக்கு எழுதப்பட்ட கதைகளே இந்த எச்சிலை சிறுகதை தொகுப்பு. 2021 சென்னை புத்தக கண்காட்சியில் ஏ எம் புக் ஹவுஸ் பதிப்பகத்தின் மூலம் இந்த நூல் வெளியாகியிருக்கிறது. நூலைப் பெற தொடர்புக்கு : 6379165176

செம்மண் - குறுநாவல்

ஒரு கிராமத்து பட்டதாரி இளைஞர்கள் தங்கள் வாழ்வில் சந்திக்கும் அவலங்களை, அவர்களின் அன்றாட மனக்குமுறல்களை இங்கே பதிவு செய்திருக்கிறேன். எந்த ஒரு படைப்பாக இருந்தாலும் சரி நம்மை அறியாமலே நம் வாழ்வில் சந்தித்த கதாப்பாத்திரங்கள் நம் படைப்பில் வந்து விழுந்துவிடும். அப்படி நான் பார்த்து பழகிய சில கதாபாத்திரங்களை இங்கே சேர்த்திருக்கிறேன். நூலைப் பெற தொடர்புக்கு :  padaippu publication : 9790821981 / 7871357579 A/C NUMBER: 6650568504 A/C NAME: ILAKKIYA PADAIPPU KUZHUMAM BANK NAME: INDIAN BANK BRANCH: VILLIVAKKAM, CHENNAI IFSC CODE: IDIB000V023.

பணியாரம் - கவிதை நூல்

கணியம் வெளியாடக எனது கல்லூரி கால கவிதைகள் இணையத்தில் வெளியாகியுள்ளன. பணியாரம் நூலை வாசிக்க கீழே உள்ள லிங்கே சொடுகவும். https://freetamilebooks.com/ebooks/paniyaram/

பொட்டல் கனவு -சிறுகதை நூல்

 எனது சிறுகதை" பொட்டல் கனவு " ஒன்று அமேசான் கிண்டிலில் வெளியாகியிருக்கிறது. #Pentopublish4  போட்டிக்காக எழுதப்பட்ட சிறுகதை .  //வறியவர்களின் வாழ்வை பிரதிபலிப்பதே இக்கதை. கரிசல் நிலங்களின் வாழும் தாழ்த்தப்பட்டவர்களின் நிறைவேறாத ஆசைகள், சொல்ல முடியாத வடுக்கள் இவையை ஒரு ஆலமரத்தின் வேர்களினூடே பயணித்து அம்மனிதர்களின் பிரச்சனைகளை விவரிக்கிறது . இன்னும் எத்தனை மாரிகள் இந்த நிலத்தில் கடைசி வரை அடிமைகளாக வீழப்போகிறார்களோ ?//  வாசிக்க : https://www.amazon.in/dp/B08R9MXKP3/ref=sr_1_1?dchild=1&keywords=pottal+kanavu&qid=1608910301&s=digital-text&sr=1-1

சகி

  நூலின் பெயர் : சகி            பெண்மை என்பது இந்த உலகின் உன்னத உயிரி .ஆண்களின் பார்வையில் அவை வெவ்வேறு விதமாக யுகிக்கபடுகிறது. சிலர் பெண்களை உடலாகவும் சிலர் வேலை செய்யும் இயந்திரமாகும்,சிலர் தெய்வமாகவும் சித்தரிக்கிறார்கள். ஒவ்வொரு ஆணும் அவன் வளர்ந்த விதத்தை பொறுத்து இவை மாறுபடுகிறது. கரிசல் காட்டில் வேலை செய்யும் பெண்கள் முதல் கம்யூட்டரில் வேலைசெய்யும் பெண்கள் வரை உடையில் வேண்டுமானாலும் மாறுதல் ஏற்பட்டிருக்கலாம் ஆனால் ஆண்கள் அவர்களை பார்க்கும் விதத்தில் எந்தவித மாறுதலும் ஏற்படவில்லை. பெண்கள் உள்ளுணர்வை புரிந்து கொள்ளும் ஆண்கள் மிகக் குறைவாகவே உள்ளனர் . அப்படியான ஆண்கள் அறிந்த, அறிந்திராத சில பெண்களின் வலிகளை கவிதை மொழியில் கதை ஆக்குவதே இந்தப் படைப்பின் முயற்சி. கரிசல் மண்ணின் வட்டார மொழியில் கதையை நகர்த்தி இருக்கிறேன். பெண்களோடு பிறக்காத நான் பெண்களை இந்த சமூகம் சித்தரித்த கோணத்தில் தான் கவனித்திருக்கிறேன். ஆனால் இலக்கியமும் சில அனுபவங்களும் அதனை வேறு வகையில் எனக்கு பிரதிபலித்தன. அந்த பிரதிபலிப்பை அவர்களின் உணர்வை இன்னொரு ஆணுக்கு கடத்துவதை இந்த படைப்...