முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஆகஸ்ட், 2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சவக்கிடங்கு

பெய் ரூட்டில் நடந்த துப்பாக்கிகளின் இரை பிணங்களவை.. சவ கிடங்கு காவலனின் கால்களெல்லாம் ரத்தம்.. சவ குழிகள் நிறைந்த ஏக்கத்தில் இடமில்லை என்றான் இறுதி சடங்கன்.. ஒரு பிணம் "நான் இஸ்லாம் பிணம்   மந்திரியின் மகனும் கூட   எனக்கே இடமென்றது.. ஒரு பிணம்    "நான் யூதப் பிணம்      உயர் குலத்தோனுக்கு     இடமில்லையா??? ஒரு பிணம்     "நான் கிருத்துவ பிணம்       மெய்படி நானே      உகந்தோனென்றது… ஒரு பிணம்      " நான் அமைச்சரின்        அண்ணன் பதவி       பத்தரம் என்றது.. உடனே அப்பிண்டத்திற்கு சகல நெறியோடு அடக்கம்.. ஏனோ அது அரசாங்க சவகிடங்காம்….      

இந்திய விவசாயத்தின் வரலாறு

விவசாயத்தின் வரலாறு "உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் தொழுதுண்டு பின்செல் பவர்’          விவசாயம் மனித ஜீவிகள் மொத்தமும் இதனை சார்ந்து வாழவேண்டிய கட்டாயத்தில் தான் இருக்கிறது.உயிரினம் பிறந்த முதலில் இருந்தே ஏதோ ஒரு விளைச்சல்களை நம்பி தான் இருந்திருக்கிறது.இதை இந்த காலத்தவர் உணர்ந்தார்கள் என்பது தான் கேள்வி குறியாகவே உள்ளது.          மனிதன் பூமியில் தோன்றிய காலத்திலிருந்தே உணவு,உடை,இருப்பிடம் ஏதோ ஒன்றை சார்ந்து வாழ வேண்டிய கட்டாயத்தில் தான் இருந்தது.அதை வைத்து தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் மூன்று பிரிவாக பிரிக்கிறார்கள். கற்காலம்           இந்த காலத்தில் ஆதி மனிதன் காடும்,அதன் சார்ந்த வாழ்வொன்றை வாழ்ந்து வந்தான்.அவனின் அன்றாட தேவைக்கான உணவை வேட்டையாடியோ அல்லது காடுகளிலிருந்தோ எடுத்து கொண்டான்.அந்த கால கட்டத்தில் இயற்கையே கதியென பசுமையோடு கொஞ்சு குத்தாட்டம் போட்டுகொண்டான்.அவனுக்கென எந்த வித மனப்பாகுபாடுமில்லை.நீ உயர்ந்தவன் நான் உயர்ந்தவன் எனும் பேசிக...

புள்ளி

குள நீரின் மேனியொட்டி காற்றுத் தரையில் பரபரப்பாக தும்பி வரையும் கோலத்திற்கு புள்ளியுமில்லை உருவகமுமில்லை மதிப்பெண் கேட்கிறது எப்படி தருவேன் நான்???

நிசப்தம்

அந்த தூயஇருட்டில் நிசப்த்தை பார்த்து பேச ஒரு வாய்ப்பு மொழி கொஞ்சம் விளங்கவில்லை… ஏதோ சலசலப்பு இலக்கணம்.. கூசும் பாசை போலிருக்கிறது... ஆனால் கொஞ்சம் புலப்படுகிறது...

பூனாச்சி புத்தக விமர்சனம்

பூனாச்சி ஒரு வெள்ளாட்டின் கதை அதை நான் பேசித்தான் ஆக வேண்டும்.ஆம் அந்த கதையை எழுதிய பெருமாள் முருகன் ஐய்யாவுக்கு கோடி கும்புடு. மனுசேன் அணுவணுவா ஆடுகளையும் ஆட்டு மந்தையும் கவனுச்சு எழுதிருக்கார்.மேலும் முக்கியமான விசயம் ஆடைகளுக்கு பெயரெல்லாம் வைத்து ஒரு ஆவணத்தை உருவாக்கியுள்ளார் என சொல்லலாம். மந்தையில் ஆடோட்டி சொல்பவர்களிலிருந்து,அதன் புணர்ச்சி முறைகளில் இருந்து ,ஆட்டுக்கு உடை அடைப்பவனுக்கும் இடையான மனிதத்தை அவர்களின் வாழ்வு முறையையும் ஒரு கிராமத்தானாய் இருந்தும் நான் தெரிந்து கொள்ளாதவையை எழுத்தாளர் எனக்கு சொல்லி தந்தார் எனக்கூட சொல்லலாம்.

தீரன் சின்னமலை வாழ்க்கை வரலாறு

இன்றைய ஈரோடு மாவட்டத்தில்காங்கயம் வட்டம் சென்னிமலைஅருகிலுள்ள செ.மேலப்பாளையம்என்னும் சிற்றூரில் ஏப்ரல் 17, 1756 அன்று பிறந்தவர்.அவரின் தந்தையார் பெயர் ரத்னசாமி கவுண்டர்(பயிரன் கூட்டம்), தாயார் பெயர் பெரியாத்தா (ஓதாலன் கூட்டம்). இவரின் இயற்பெயர் தீர்த்தகிரி கவுண்டர். இவர் பழைய கோட்டைப் பட்டக்காரர் மரபு என்று கூற படுகிறது. இதனால் இவர் இளம்பருவத்தில் தீர்த்தகிரிச் சர்க்கரை எனப் பெயர் பெற்றார். தீர்த்தகிரி இளவயதிலேயே மல்யுத்தம், தடிவரிசை, வில்பயிற்சி, வாள்பயிற்சி, சிலம்பாட்டம் போன்ற போர்ப் பயிற்சியை சிவந்தாரையர் என்பார் வழிவந்தவரிடம் கற்றுத் தேர்ந்தார்.கொங்கு நாடு அப்பொழுது மைசூரார் ஆட்சியில் இருந்ததால், கொங்கு நாட்டு வரிப்பணம் சங்ககிரிவழியாக மைசூர் அரசுக்குச் சென்றது. ஒருநாள் வேட்டைக்குச் சென்ற தீர்த்தகிரி மைசூர் அரசுக்குச் செல்லும் வரிப்பணத்தைப் பிடுங்கி ஏழைகட்கு விநியோகித்தார். அப்பொழுது, வரி கொண்டு சென்ற வரி தண்டல்காரரிடம் சென்னிமலைக்கும் சிவன்மலைக்கும் இடையில் ஒரு சின்னமலை பறித்ததாகச் சொல் என்று சொல்லி அனுப்பினார். அதுமுதல் தீர்த்தகிரிக்குச் சின்னமலை என்ற பெயர் வழங்கலாயிற்று என்ற கரு...