முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூலை, 2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மாலையும் கழுத்தும் _சிறுகதை

             அடுத்தவன் வீட்டில் அடிதடி என்றால் வேடிக்கை பார்த்து ரசிப்பது அந்த ஊர் காரர்களின் பொழுதுபோக்காயிற்று.         அப்படித்தான் ராகவன் வீட்டிலும் ஒன்று நடந்துகொண்டிருந்தது.ராகவன் அப்பா அவனின் துணி மணிகளை தூக்கி வெளியே வீசிக் கொண்டிருந்தார்.   "எவளடா…இழுத்துக்கு வந்து நிக்கிற???பன்னி மேக்கிறவன் மகளாம் எனக்கு மருமகளா??? வெக்காளி ஒழுக்கா ஓடிப்பொயிரு ஏன் மானத்தை வாங்கமா…."கணத்த கோபத்தோடு இப்படி பேசிச்கொண்டே இருக்க ராகவனும் அவனின் காதலியும் தலையை தொங்க போட்டு நின்றிருந்தார்கள்.     கூட்டத்தில் ஒரு பெருசு…"கூப்பிட்டு வாரவேன் காலகாலத்தில வர வேணாமா…இன்னேரத்தில வந்து தூக்கத்தை கெடுக்குறானே…"     "யோவ் மொக்க…உனக்கெல்லாம் வயசாச்சுனு தே பேரு…பெரிய மனுசானா போய் பஞ்சாயத்தை முடிச்சு விடுயா என இன்னோருவன் சொல்ல…"     "அடியேய் …சுளி மகனே..நீயும் அவன் கூட்டாளி தானாட…கோளாற அந்த புள்ளையை சேத்துவிட்டுட்டு இங்க வந்து ஒன்னும் தெரியாதவனாட்டம் நிக்கிறியா…இ...

சோழ வரலாறு 2

சோழ வம்சத்தில் பாராந்தகனுக்கு பிறகு சுந்தர சோழன் ஆட்சிக்கு வந்தார்.சுந்தர சோழனின் இரண்டு மனைவிகளில் முதல் மனைவிக்கு பிறந்தவன் ஆதித்தகரிகாலன்,இரண்டாவது மனைவிக்கு பிறந்தவர்கள் குந்தகை,அருள்மொழி வர்மன்.நான் முன்னரே சொன்னது போல் இப்போது சோழவம்சத்தை ஆளுவது சுந்தர சோழன்.சுந்தர சோழன் நல் சிவபக்தி உடையவர். அவர் பாண்டிய நாட்டை எதிர்த்து போரிட வேண்டுமென நினைப்பது மட்டும் தான் அவர் வேலை.மத்தபடி எல்லா வேலைகளையும் ஆதித்த கரிகாலன் பாத்துகொள்வான்.போர்களத்தில் இறங்கிவிட்டால் தீரனாக மாறி விடுவான்.வெறிகொண்டு எதிரியை தாக்குவான்.ஒரு முறை பாண்டிய மன்னனை கொன்று அவன் தலையை பழையூரின் கோபுரத்திற்கு முன்பே இருந்த மரத்தில் தொங்கவிட்டார்.அப்படிப்பட்ட வீரனை சில சூட்சம கிருமிகள் கோழைத்தனமாக கொன்றிருக்கிறார்கள்.சதியின் கொடூரம் யாரை விட்டது. தன் வீர மகன் இறப்பை எண்ணி எண்ணி வருந்திய உத்தமசோழனும் கொஞ்ச நாளில் உயிரிழந்தார்.அவரின் இறப்புக்கு பின் சோழ வம்சத்தின் மாபெரும் கதாநாயகன் அருண்மொழி வர்மனெனும் ராஜராஜ சோழன் அரசனானார். அப்போதே சோழவம்சத்திற்கு பொற்காலம் பிறந்துவிட்டது.சிறு வயதிலையே புராணத்தையும் போர் கலையையும் நன்...

சோழ வரலாறு 1

எனக்கு கல்லூரி காலத்திலிருந்தே தமிழர்களின் பண்டைய வரலாறை தெரிந்து கொள்ள வேண்டுமென எப்போதும் ஆர்வமுண்டு.அப்படி தொட்டு தொட்டு நான் படித்து பூரித்து போன பலமன்னர்கள் உள்ளார்கள்.அதில் சோழ வரலாறு என்பது விதி விலக்கா என்ன???தமிழினமே…. மன்னிக்கவும் உலகமே படித்து தெரிந்து கொள்ள வேண்டிய பெரிய சாம்ராஜ்யம் அது.இந்தியாவின் பல்வேறு பகுதியையும் ஆண்ட அவர்களின் ஆட்சிமுறையை பற்றி படிக்கும் போதே இனிக்கிறது.அப்படி எனக்கு தெரிந்த நான் படித்த புத்தகத்தின் மூலமாக ஜெயமோகன் போன்றவர்கள் எழுதிய கட்டுரைகள் மூலமாகவும் தெரிந்து கொண்ட சில துகள்களை உங்களோடு பகிர ஆசைப்படுகிறேன். சோழர்கள் வம்சம் கி. பி ஆண்டுகளுக்கு முன்னறே சோழவம்சம் இருந்ததாக கருதப்படுகிறதுஆனால் அதற்கு சரியான சான்றுகளில்லை.9ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சோழ மன்னன் கரிகால சோழனின் வரலாறுகளே நமக்கு கிடைத்துள்ளது. முதன் முதலில் காவேரி ஆற்றுப்பாய்ச்சலை அடைத்து கல்லணையை கட்டி இன்றும் உலகம் போற்றும் வகையில் அணைகட்டுமான பணிக்கு முன்னோடியா திகழ்கிறார் கரிகாலச்சோழன்.சேர நாட்டையும்,பாண்டிய நாட்டையும் ஒரு காலத்தில் தனது படை...

செயற்கை உரங்களால் சீரழியும் புண்ணிய பூமி

இங்கே நாம் விவசாயம் செய்து கொண்டிருக்கிறோம்.இந்த உலகத்தின் அவசரநேரத்தில் விவசாயமும் அவசரமாய்  வருமானம் பார்க்கவே இந்த காலத்து விவசாயிகள் எண்ணுவதுண்டு. அது அவர்களின் ஆசைஅல்ல அந்த நிலைமைக்கு தள்ளபட்டுள்ளனர் என்பதே உண்மை.பூச்சிகள் செடிகளை தாக்குவதனால் உண்டாகும் பிரச்சனையைதடுக்கவே செயற்கை மருந்துகள் உருவாக்கப்பட்டது. ஆனால் இன்று அதுவே விவசாயத்தை தன் கட்டுபாட்டுக்குள் வைக்கும்அளவிற்கு வளர்ந்துள்ளது.செடி வளர மருந்து,காய் கனிக்க மருந்து,பூ அதிகமாய் விட மருந்து,இதில் இலையை தாக்கும் நோய்க்குமருந்து,களையெடுக்க கூட சோம்பல்தனப்பட்டு மண்ணின் வளத்தை கெடுக்கும் களை கொல்லி மருந்து. இன்னும் எத்தனையோவகைகளால் வெறும் ரசாயனத்தை வைத்தே செய்யும் விவசாயத்தில் விளையும் க...

கோயில்கள் எதற்காக????

           கோயில்கள் பற்றி எனக்கு எப்போதும் நிறைய சந்தேகங்கள் இருந்ததுண்டு . ஏனென்றால் நான் அவ்வளவாக கோவிலுக்கு போக விரும்பாதவன் தான் . மன்னர்கள் ஏன் இவ்வளவு கோவில்களை கட்டி வைத்திருக்கிறார்கள் . எதற்க்கு அந்த கோவில்களுக்கு இவ்வளவு செலவு போன்ற கேள்விகள் எனக்குண்டு . இதோ அதற்கான பதிலை நானே தேடி கொள்ள வேண்டினேன்.ஆம் அப்படி நான் தெரிந்து பூரித்து போன விஷயங்களை பற்றி தான் இன்று உங்களோடு பேச வந்திருக்கிறேன் . கோயிலின் பொருள்      கோயில் என்பதை   இரண்டாக பிரிக்கலாம் . கோ என்றால் மன்னன் , இல் என்றால் இல்லம் மன்னனின் இல்லம் என்பதே பொருள் . கோவில் என்பது வெறும் தெய்வ வழிபாட்டுக்காக நமது முன்னோர்கள் உருவாக்கவில்லை . ஒரு நாட்டின் கலை , அரசியல் , அரசாங்கம் , தானிய சேமிப்பு , அரசபை , சேமிப்பு கிடங்கு , மக்கள் பாதுகாப்பு   எல்லாமே கோவில்கள் தான் . மன்னர்களின் கோயில்                பொதுவாக ஒர...