முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இலங்கை வானொலியில் பரிசு பெற்ற கவிதை

அவளுக்கு காந்த        கண்களாம் தெரியவில்லை  இறகு        இமைகளாம் தெரியவில்லை  வைர        பற்களாம் தெரியவில்லை  போர் வில்        புருவமாம்  தெரியவில்லை  அவள் வார்த்தையில்         வந்த காதல் மட்டும் தெரிந்தது  உலகம்  என் நெஞ்சில்          உருண்டது அவள் காதலால்  கடவுளே நான்           குருடனாய் பிறந்தது  யார் செய்த தவமோ????            இல்லை யென்றால்  அவள்  அழகைதான்              காதலித்திருப்பேன்  உருவ பொம்மையல்ல              நம் காதல்  உணர்வு பொம்மையடி           நம்  காதல்.....

அம்மா கவிதை

பிச்சைகாரர்கள் தன் அம்மாவை முதியோர்இல்லம்  சேர்க்க சொல்லி கெஞ்சுபவன்  கடவுளை வணங்கி தன்னை  மட்டும் காப்பற்ற கேட்பவன்  விவசாய தொழிலை  மதிக்காது சோறு கேட்பவன்  தன் உண்மையான தோழியிடம்  காதலிக்க கேட்பவன்  கம்மங்குழை கேவளபடுத்தி  பீட்சா கேட்பவன்  மணலை அள்ளி கட்டிடம் கட்டிவிட்டு  மழை கேட்பவன்  இன்னும் மாமனாரிடம்  வரதட்சணை கேட்பவன்  சாக்கடை சுத்தம் செய்பவனை  குடிசையில் தள்ளி மாடி வீடுகேட்பவன்  இதற்கெல்லாம் மேலாமாக  ஒன்றுமே செய்யாதுஓட்டு கேட்பவன்  இவர்கள் தான் உலகத்தின்  உண்மையான பிச்சைகாரர்கள்....  ---------- சிபி