எனக்கு கல்லூரி காலத்திலிருந்தே தமிழர்களின் பண்டைய வரலாறை தெரிந்து கொள்ள வேண்டுமென எப்போதும் ஆர்வமுண்டு.அப்படி தொட்டு தொட்டு நான் படித்து பூரித்து போன பலமன்னர்கள் உள்ளார்கள்.அதில் சோழ வரலாறு என்பது விதி விலக்கா என்ன???தமிழினமே…. மன்னிக்கவும் உலகமே படித்து தெரிந்து கொள்ள வேண்டிய பெரிய சாம்ராஜ்யம் அது.இந்தியாவின் பல்வேறு பகுதியையும் ஆண்ட அவர்களின் ஆட்சிமுறையை பற்றி படிக்கும் போதே இனிக்கிறது.அப்படி எனக்கு தெரிந்த நான் படித்த புத்தகத்தின் மூலமாக ஜெயமோகன் போன்றவர்கள் எழுதிய கட்டுரைகள் மூலமாகவும் தெரிந்து கொண்ட சில துகள்களை உங்களோடு பகிர ஆசைப்படுகிறேன். சோழர்கள் வம்சம் கி. பி ஆண்டுகளுக்கு முன்னறே சோழவம்சம் இருந்ததாக கருதப்படுகிறதுஆனால் அதற்கு சரியான சான்றுகளில்லை.9ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சோழ மன்னன் கரிகால சோழனின் வரலாறுகளே நமக்கு கிடைத்துள்ளது. முதன் முதலில் காவேரி ஆற்றுப்பாய்ச்சலை அடைத்து கல்லணையை கட்டி இன்றும் உலகம் போற்றும் வகையில் அணைகட்டுமான பணிக்கு முன்னோடியா திகழ்கிறார் கரிகாலச்சோழன்.சேர நாட்டையும்,பாண்டிய நாட்டையும் ஒரு காலத்தில் தனது படையால் மிரட்டியவர் தான் கரிகாலச்சோழன். அவருக்கு பிறகு சோழ வம்சம் அவ்வளவாக தலைத்தூக்கவில்லை.ஆங்காங்கே சில சிற்றரசர்கள் மட்டுமே ஆண்டு வந்தார்கள்.அவர்கள் உறையூர்,பழையாறு போன்ற பகுதியில் வாழ்ந்திருக்கிறார்கள். கிபி 830-840 ஆகிய ஆண்டுகளின் பல்லவர்கள் சோழர்களின் பல பகுதியை ஆட்சிசெய்தி ருக்கிறார்கள்.அவர்களில் ஒரு மன்னர் காளப்பிரயர்களின் போர் தொந்தரவை தாங்க முடியாமல் தவித்து கொண்டிருந்தார்.அப்போது விஜயசோழன் சிற்றரசனாய் ஆண்டு வந்தார். அவரை நட்புரவாக்கி கொண்டு அதாவது பல்லவ ஆட்சிக்கு கீழ் நடக்கும் சோழ ஆட்சியை போலவே நடந்தி வந்தார். கி.பி 848 ஆம் ஆண்டு களப்பிரயர்களை எதிர்த்து போரில் வென்ற விஜய சோழன் தனக்கு அடைக்கலம் கொடுத்த பல்லவ சாம்ராஜ்யத்தை எதிர்த்து போரிட்டு வென்று சோழ சாம்ராஜாயத்தை காவேரி பூம்பட்டினத்தில் துவக்கி வைத்தார்.அவரின் ஆட்சியில் பல போர்கள் நடத்தப்பட்டு எதோ சொல்லும் அளவிற்கு சோழப்பேரரசு விரிவானது. அவருக்கு பின்னால் வந்த முதலாம் ஆதித்த சோழன் தன்னால் முடிந்தவரை பிறப்போரில் சோழநாட்டை காப்பாற்றி ஆண்டு வந்தார். கி.பி 907ல் வந்த பாராந்தகச் சோழன் இவரின் ஆட்சியிலையே சோழரின் புலிக்கொடி நாடு விட்டு நாடு பறக்க துவங்கியது. இவருக்கு முதல் எதிரி பாண்டியர்கள் தான்.பாண்டிய மன்னர் ஒருவர் இவரிடம் தோற்க பயந்து இலங்கையில் செங்கோலையும் கீரிடத்தையும் ஈழ மன்னவர்களிடம் குடுத்து விட்டு தனை காப்பாற்றிகொள்ள தப்பித்துவிட்டார்.எவ்வளவோ முயற்ச்சித்தும் கீரிடத்தையும்,செங்கோலையும் பராந்தகனால் கண்டு பிடிக்க முடியவில்லை.முதலாம் பராந்தகன் சோழ மன்னர்களில் தனக்கென தனிப்புகழை சுமந்து நிற்கிறான். சரி அடுத்த மன்னர்களை பற்றியும் அவர்கள் சோழ சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்த செய்த யுக்திகளையும அடுத்த பதிவில் பார்ப்போம்
2024 - இல் நான் மிகப்பெரிய கெஜ புழு..தியாக இருந்தேன். வரும் வருடத்தில் இன்னும் மிகப்பெரிய கெஜ புழு..தியாக மாற போகிறேன். நான் அவ்வொரு ஆண்டு முடியும் போதும் போன வருடத்தை விட இந்த வருடம் சிறப்பாக புழு..தி இருப்பதாக நினைத்து கொள்வதுண்டு. இல்லையென்றால் சில நேரம் என் கீழ்மை குணங்களை அளவிடுவதுண்டு. நான் போன ஆண்டை விட இந்த ஆண்டு எவ்வளவு கீழ்மை குணம் உள்ளவனாக மாறியிருக்கிறேன். எந்த அளவுக்கு என் அல்ப புத்திகள் அரங்கேறியிருக்கிறது என கணக்கிட்டு பார்ப்பேன். நான் ஒரு மகா சோம்பேறி . இலையை போல் தூக்கி ஆற்றில் போட்டால் மிதந்து மிதந்து போவேன். பாறையில் மோதாமல் போகும் சூட்சமும் தெரியும்.என்னை பெரிய பிடுங்கியாக எப்போதும் நினைப்பதில்லை. ஒரு நல்ல இயக்குனரிடம் பணிபுரிய வாய்ப்பு கிடைத்தது . நிறைய கற்றுக் கொள்ள முடிந்தது. நாம் சாதாரண கடன் கார குடும்பம் என்பதால் சூ..தை கிழிக்கும் சுமை வேறு நம்மை வேட்டையாடுகிறது. எல்லோரையும் போல் நமக்கு எல்லாம் அவ்வளவு இலகுவாக கிடைப்பதில்லை. ஏதோ நெஞ்சில் உரமிருக்க ஓடுகிறோம். உடல் ரீதியாக நிறைய கோளாறுகள் இருக்கிறது. அப்படி பயந்து கொள்ளும் அளவுக்கு ஒன்றுமில்லை தான் பா...

கருத்துகள்
கருத்துரையிடுக