குற்றமும் தண்டனையும் மனிதனின் அக மனதை சோதித்து பார்க்கும் ஒரு நாவல்.ரஷ்யாவின் புகழ்பெற்ற எழுத்தாளர் தஸ்கோயோவஸ்கி எழுதியது.சுமார் 600 பக்கங்ஙளை கொண்ட இந்த பெரிய நாவலை நான் படிக்க ஐந்து நாளாயிற்று. கதையின் நாயகன் ரஸ்கொல்நிகோவ் சாதாரண குடும்பத்தில் பிறந்தவன். படிப்புக்காக பீட்டர்ஸ்பெர்க் நகரில் தங்கி இருப்பவன்.குடும்ப சூழ்நிலை காரணமாக அவன் படிப்பு தடைகிறது.தனது சுய செலவுக்காக அவனின் உடைமைகளை அடகு வைக்கிறான்.அப்படி அவன் அந்த செயலை செய்யும் அடகுபொருளை வாங்கி வைக்கும் நாசகார கிழவியை அவனுக்கு பிடிக்கவில்லை.மேலும் அங்கு உள்ள பொருளை அவன் திருட வேண்டுமென தோன்றுகிறது.திடிரென ஒரு நாள் அந்த கிழவியை கோடாரியால் கொன்றுவிட்டு மேலும் உடனிருந்த கிழவியின் அப்பாவி தங்கையும் கொன்று நகையை எடுத்து தப்பிக்கிறான்.இந்த கொலைக்கு பின்பான அவன் மனநிலை,தான் செய்தது சரி தான் என அவனுக்குள் அவன் உருவாக்கி வைத்திருக்கும் கொள்கை மேலும் எப்படி இவர்களிடமிருந்து தப்பிப்பது என்பது பற்றிய பல குழம்பிய சிந்தனையோடு மனதை துன்புறுத்திக்கொள்ளும் நாயகனின் கதை ...
writter அஞர் நாவல் - வர டீ பதிப்பகம் வெளியீடு https://www.commonfolks.in/books/d/angar