writter
அஞர் நாவல் - வர டீ பதிப்பகம் வெளியீடு
https://www.commonfolks.in/books/d/angar
இந்த வலைப்பதிவில் தேடு
செயற்கை உரங்களால் சீரழியும் புண்ணிய பூமி
இங்கே நாம் விவசாயம் செய்து கொண்டிருக்கிறோம்.இந்த உலகத்தின் அவசரநேரத்தில் விவசாயமும் அவசரமாய் வருமானம் பார்க்கவே இந்த காலத்து விவசாயிகள் எண்ணுவதுண்டு. அது அவர்களின் ஆசைஅல்ல அந்த நிலைமைக்கு தள்ளபட்டுள்ளனர் என்பதே உண்மை.பூச்சிகள் செடிகளை தாக்குவதனால் உண்டாகும் பிரச்சனையைதடுக்கவே செயற்கை மருந்துகள் உருவாக்கப்பட்டது. ஆனால் இன்று அதுவே விவசாயத்தை தன் கட்டுபாட்டுக்குள் வைக்கும்அளவிற்கு வளர்ந்துள்ளது.செடி வளர மருந்து,காய் கனிக்க மருந்து,பூ அதிகமாய் விட மருந்து,இதில் இலையை தாக்கும் நோய்க்குமருந்து,களையெடுக்க கூட சோம்பல்தனப்பட்டு மண்ணின் வளத்தை கெடுக்கும் களை கொல்லி மருந்து. இன்னும் எத்தனையோவகைகளால் வெறும் ரசாயனத்தை வைத்தே செய்யும் விவசாயத்தில் விளையும் காயில் சுத்தமான இயற்கை உபாதைகள் மட்டுமா இருக்கபோகிறது. முன்பெல்லாம் மண்ணில் லேசாக கிண்டினாலே மண்புழுக்கள் கிடைக்கும்.இனி யெல்லாம் அதைஅருங்காட்சியகத்தில் காணும் நிலை தான் வரும் போல் இருக்கிறது.படிப்பறிவு இல்லாத ஏழை விவசாயியை அழகாக பேசிவசப்படுத்தி வியாபாரம் செய்து பணம் பார்க்கிறார்கள் செயற்கை மருந்து கடைக்காரர்கள்.வெறும் இயற்கை உரமான மாட்டு கழிவு,ஆட்டுகழிவு, இதை உரமாய் பயன்படுத்தி சிறப்பான மகசூலில் விவசாயம் செய்துவந்தோம். செயற்கை உரக்கடை வியாபாரிகள்இன்றைய விவசாயிகளின் மனநிலையை புரிந்துகொண்டு விசங்களை செடிகளுக்கு விற்று தள்ளுகிறார்கள்.விவசாயத்தில் வரும்வருமானத்தில் நூறில் எம்பது சதவிகிதம் மருந்துக்கே சென்று விடுகிறது என்பதே உண்மை.அன்று கோணிப்பை நிறைய தானியம்வைத்து விதைத்தவன் எல்லாம் இன்று கோமனம் கட்டி நடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.எதை எதையோ தடுக்கும் அரசு இந்த கொடியசெயற்கை உரகொல்லிகளை தடுக்க நடவடிக்கை ஏன் எடுக்ககூடாது. இப்படியே இந்த கொடிய நிலை தொடருமாயின் நம் விவசாயமண்ணுக்கு பதிலாக பாக்டீரியாக்களையே பார்க்கும் நிலை வரும். மண்ணின் வளமே அந்த விவசாயி தலைமுறையின் வாழ்வைமட்டுமல்லாது ஒட்டுமொத்த மனிதர்களின்உயிரை காப்பாற்ற வழி. கடனுக்கு மருந்து வெள்ளாமை பார்த்து அடைத்து விடலாம் என எண்ணி அளவுக்கு அதிகமாக பணத்தைதொலைத்து எந்த நிலத்தை காப்பாற்ற கடன் வாங்கினோமோ அதே கடன் தான் கைப்பற்றும்.ஒவ்வொரு தொழிலையும் இந்தகார்ப்ரெட் சுரண்டி திங்கிறது. இப்போது விவசாயத்தையும் அந்த கணக்கில் எடுத்து கொண்டுள்ளது..நாம் உண்ணும் உணவில் பாதிக்குமேலே ரசாயனம் தான் கலந்து உள்ளது.இதை நாம் உண்ணும் போது நமது உடல் சாவதிற்கு தயாராகிறது.நாம் நேசிக்கும் நம் அடுத்ததலைமுறைக்கு நம்மால் நிலத்தை மட்டும் விட்டு செல்லமுடியும்.நல்ல விவசாய நிலத்தை அல்ல. நீங்கள் இயற்கை முறைவிவசாயம் செய்ய துவங்கும் போது தவிர்க்க முடியாத தோல்விவரும். அவ்வளவு சீக்கிரம் மண் கட்டுபாட்டுக்குள் வராது. பிறகுஇயற்கை முறையில் குறைந்த முதலீட்டில் நிறைய லாபம் வரும்.முடிந்த வரையில் செயற்கை உரங்களை தவிர்த்து நாளையதலைமுறையை காப்பாற்றுவோம்.
2024 - இல் நான் மிகப்பெரிய கெஜ புழு..தியாக இருந்தேன். வரும் வருடத்தில் இன்னும் மிகப்பெரிய கெஜ புழு..தியாக மாற போகிறேன். நான் அவ்வொரு ஆண்டு முடியும் போதும் போன வருடத்தை விட இந்த வருடம் சிறப்பாக புழு..தி இருப்பதாக நினைத்து கொள்வதுண்டு. இல்லையென்றால் சில நேரம் என் கீழ்மை குணங்களை அளவிடுவதுண்டு. நான் போன ஆண்டை விட இந்த ஆண்டு எவ்வளவு கீழ்மை குணம் உள்ளவனாக மாறியிருக்கிறேன். எந்த அளவுக்கு என் அல்ப புத்திகள் அரங்கேறியிருக்கிறது என கணக்கிட்டு பார்ப்பேன். நான் ஒரு மகா சோம்பேறி . இலையை போல் தூக்கி ஆற்றில் போட்டால் மிதந்து மிதந்து போவேன். பாறையில் மோதாமல் போகும் சூட்சமும் தெரியும்.என்னை பெரிய பிடுங்கியாக எப்போதும் நினைப்பதில்லை. ஒரு நல்ல இயக்குனரிடம் பணிபுரிய வாய்ப்பு கிடைத்தது . நிறைய கற்றுக் கொள்ள முடிந்தது. நாம் சாதாரண கடன் கார குடும்பம் என்பதால் சூ..தை கிழிக்கும் சுமை வேறு நம்மை வேட்டையாடுகிறது. எல்லோரையும் போல் நமக்கு எல்லாம் அவ்வளவு இலகுவாக கிடைப்பதில்லை. ஏதோ நெஞ்சில் உரமிருக்க ஓடுகிறோம். உடல் ரீதியாக நிறைய கோளாறுகள் இருக்கிறது. அப்படி பயந்து கொள்ளும் அளவுக்கு ஒன்றுமில்லை தான் பா...
கெடா விருந்து ப ள்ளிக் கூடத்தில் பெல் அடிக்கும் சத்தம் கேட்டது . உடனே எங்கள் வகுப்பில் படர்ந்திருந்த சலசலப்பு மெல்ல மடிந்து பெரும் அமைதி நிலவியது . நான் கடைசி பெஞ்சுக்கு முன்பிருந்த பெஞ்சில் அமர்ந்திருந்தேன் . எங்கள் வகுப்பில் கடைசி பெஞ்சில் அமர்ந்திருக்கும் ஐந்து மாணவர்கள் மட்டும் அழுக்கு அப்பிய சட்டையை அணிந்திருப்பார்கள் . பொதுவாகவே அரசினர் மாணவர் விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்களை மட்டும் எங்கள் வகுப்பில் ஒரு மாதிரியாகத்தான் பார்ப்போம் . அவர்களை பார்த்தாலே “ சொறி சிரங்கு பிடிச்சவங்களா ? போய் கடைசி பெஞ்சுல உக்காருங்கடா ?” என சமூக அறிவியல் ஆசிரியர் துரத்துவார் . எங்கள் வகுப்பிலுள்ள ஐந்து பேரில் கோகுல் மட்டும் நன்றாக படிப்பான் . அவனை பார்த்தால் ஆறாவது படிக்கும் மாணவர்களை போல் அல்லாமல் உயரத்தில் சற்று பெரிய பையனாக இருப்பான் . அவனை வகுப்பில் எல்லோரும் கொக்கு என்று தான் பட்ட பெயர் வைத்து அழைப்பார்கள் . தமிழாசிரியர் கூட அவனை “ இவன பாருங்கடா , மந்த குளத்துல நீந்துர அயிர மீனை கொத்துரவான...
2025 சொல் வதற்கு இனிய ஆண்டாக இல்லா விட்டாலும் , வாழ்வின் அர்த்தங்களை புதிய பாதையில் எனக்கு உணர்த்திய ஆண்டு. கடந்த ஆண்டு முழுக்க , முழுக்க என்னை இழந்து கொண்டிருந்தேன் என நினைக்கும் போதே ஆச்சரியமாக இருக்கிறது. சுய தெளிவும், சிந்தனையும் அற்று மற்றவர்களின் சொல் பேச்சை கெட்டு கடந்து வந்திருக்கிறேன் என கடைசியாக தான் புரிந்தது. என் தனி தன்மையை நான் உணர தவறிய இந்த ஆண்டில் நிறைய பாடங்கள் கிடைத்தன. உடல் ரீதியாக நிறைய பலவீனங்களை சந்தித்து வந்த ஆண்டும் கூட. என்னை மிகவும் நேசிப்பவர்களுக்காக என் ஆசையை கொஞ்சம் இறக்கி வைத்து விட்டு வரலாம் என தோன்றிய ஆண்டு தான் இது. என் வாழ்வில் முதல் முதலாக காதல் உதிர்த்த ஆண்டும் இது தான். அந்த காதலில் கிடைத்த குதூகலமும் மன மகிழ்ச்சியும் சொல்லி அடங்காதவை. ஆனால் எதுவும் நிலையானது அல்ல என இயற்கை எனக்கு மெதுவாக தான் உணர்த்தியது. யார் மீது குறை கூறி எந்த வித பயனும் இல்லை. என்னை நான் மாற்றி கொள்வதில் தான் எல்லா தீர்வும் இருக்கிறது என மெதுவாக தான் புரிய ஆரம்பித்தது. கடந்த ஆண்டில் நேர்ந்த சம்பவங்களும், துயரங்களும் நம்மை இன்னும் வலிமையான மனிதனாக மாற்றும் ...
கருத்துகள்
கருத்துரையிடுக