இளஞ்சிவப்பு நிற ரத்தம் மத்தியான வெயிலில் ரயில் தண்டவாளங்களின் மீது பட்ட சூரிய ஒளி மெல்ல ஊர்ந்து நகர்ந்தது. பிளாட்பாம் நம்பர் 3ல் பீச் ஸ்டேசன் ரயிலுக்காக சில முகங்கள் காத்திருந்தன. ஒவ்வொரு முகங்களிலும் விடுமுறை நாள் முடிந்து தங்கள் அலுவல் பணிக்குச் செல்வதற்கான மனநிலையில் நனைந்த காகிதங்களாய் சுருங்கியிருந்தன. நடை மேடையில் யுவதிகள் கூட்டமொன்று வாயை கோணித்துக்கொண்டு செல்பி எடுக்க ஆயத்தமாக, நடைமேடையில் பாதிக்கு மேலான தலையைத் தொங்கப் போட்டு செல்போனுக்குள் நுழைந்திருந்தனர். நான் அங்கிருந்த இருக்கையில் உட்கார்ந்து கொண்டு எனக்கு நேர் எதிரே இருந்த சிவப்பு சுடிதாரை நோட்டம் விட்டபடியிருந்தேன். அவள் கழுத்தோரத்தில் மினுக்கிய தழும்பும், லேசாக துரித்துக்கொண்டிருக்கும் எழும்பும் பார்க்க கவர்ச்சியாக இருந்ததெனத் ...
writter அஞர் நாவல் - வர டீ பதிப்பகம் வெளியீடு https://www.commonfolks.in/books/d/angar