முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

short stories லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கள்ளு கடை - சிறுகதை

கம்பமெட்டு மலைகளில் சுருள் சுருளாக உள்ள சாலையில் பயணிப்பது ஒரு சுகானந்த அனுபவம். அதுவும் வாழ்வின் பெரும்பகுதியை நகரத்தில் கழிக்கும் என்னை போன்ற நகரத்து வாசிக்கு மலைகள் எப்போதும் புத்துயிர்ப்பை தரக்கூடியவை.  நீண்ட கால நண்பர் ஒருவருக்கு கல்யாணம். அதுவும் மேற்கு தொடர்ச்சி மலைகள் கூடும் இடத்தில் அமைந்துள்ள அழகான வீட்டில் தான் எளிமையாக கல்யாணம் நடக்க போகிறது. நகரத்தில் எங்களோடு அவர் பணிபுரிந்தாலும் அவர் பக்கா கிராமத்து காரர் என அடிக்கடி அவரது சொல்லாடல்கள் காட்டி கொடுத்து விடும்.  மேற்கு தொடர்ச்சி மலையில் அதாவது கம்பம் பகுதியில் இருந்து ஒவ்வொரு கொண்டை ஊசி வளைவாக மலையில் ஏறுவதே ஒரு பேரனுபவத்தை தந்தது. எங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் இரண்டு பேரும், அதே ஊரை மற்ற இரண்டு நண்பர்கள் உதவியால் ஜீப்பில் அழைத்து செல்லப் பட்டோம். அதில் எத்து பல்லும் , நரைத்த முடியும் கொண்ட நல்லாண்டி தோன தொன வென பேசிக் கொண்டே வந்தார். ஒவ்வொரு கொண்டை ஊசி வளைவிலும் பீடியை இழுத்து புகையை ஊதி கொண்டே வந்தார். அவர்கள் எங்களை கம்பத்தில் ஏற்றிய முதலே அவர்கள் முகத்தில் ஒரு பேரானந்தம் விரவி கிடந்தது. மற்றொரு ந...