பரிதியின் விழிகளில் உழகும் பெருமகன் பிளந்த நிலச்சதையில் நெளிந்த புழுதனைதேடி நித்திரை நிதம் தொலைத்தான். கட்டியமாட்டின் மலத்துளையில் எட்டிய உரந்தனை கொட்டியே பயிர் விதைத்தான். தூரல் தட்சணை எதிர்பார்த்து கருஞ்சிலையிடம் கைகுவித்தான்.. மிச்சமே சொச்சமாய் விழுந்த சில்லரை மழைத்துளியின் அறிமுக வாசத்திலே அரும்பாய் கதிர் முளைத்தெடுத்தான். எச்சில் பாலில் முளைத்த மெழிந்த எழும்பு கன்றாய் பச்சை பயிரில் முளைத்த மீதி வெள்ளாமைதனை விற்று உயிர் வளர்த்தான்.. ஒட்டி வயிர் சுமந்து சட்டி கூழ் குடித்து நம் நாவில் கொட்டும் ருசி கொடுத்தான் ….
writter அஞர் நாவல் - வர டீ பதிப்பகம் வெளியீடு https://www.commonfolks.in/books/d/angar