அடுத்தவன் வீட்டில் அடிதடி என்றால் வேடிக்கை பார்த்து ரசிப்பது அந்த ஊர் காரர்களின் பொழுதுபோக்காயிற்று.

அப்படித்தான் ராகவன் வீட்டிலும் ஒன்று நடந்துகொண்டிருந்தது.ராகவன் அப்பா அவனின் துணி மணிகளை தூக்கி வெளியே வீசிக் கொண்டிருந்தார்.
"எவளடா…இழுத்துக்கு வந்து நிக்கிற???பன்னி மேக்கிறவன் மகளாம் எனக்கு மருமகளா???
வெக்காளி ஒழுக்கா ஓடிப்பொயிரு ஏன் மானத்தை வாங்கமா…."கணத்த கோபத்தோடு இப்படி பேசிச்கொண்டே இருக்க ராகவனும் அவனின் காதலியும் தலையை தொங்க போட்டு நின்றிருந்தார்கள்.
கூட்டத்தில் ஒரு பெருசு…"கூப்பிட்டு வாரவேன் காலகாலத்தில வர வேணாமா…இன்னேரத்தில வந்து தூக்கத்தை கெடுக்குறானே…"
"யோவ் மொக்க…உனக்கெல்லாம் வயசாச்சுனு தே பேரு…பெரிய மனுசானா போய் பஞ்சாயத்தை முடிச்சு விடுயா என இன்னோருவன் சொல்ல…"
"அடியேய் …சுளி மகனே..நீயும் அவன் கூட்டாளி தானாட…கோளாற அந்த புள்ளையை
சேத்துவிட்டுட்டு இங்க வந்து ஒன்னும் தெரியாதவனாட்டம் நிக்கிறியா…இருடி உக்கப்பன் கிட்ட போட்டு விட்டு நோனிய பிதுக்க சொல்றேன்.
அப்டீனு உருமாவை கட்டினார் மொக்கை.
இப்படியே கூட்டம் ஆளுக்கொன்னாய் பேசிக் கொண்டிருக்க என்ன செய்வதென தெரியாமல்
ராகவனின் அம்மா தலையை விரித்து போட்டு அழுகிறாள்.
கொஞ்ச நேரத்தில் போலீஸ் வண்டி வந்து நின்றது.சத்தம் கேட்டு வந்திருப்பார்கள் போலிருக்கிறது.
"எவன் வீட்லையாச்சு சண்டையின வந்து நின்னுகிட்டு பொரணி பேசுறது பீத்த பயலுக..
பஞ்சாயத்து பண்ணி பிள்ளைய வீட்டுக்குள்ள அனுப்புறதை விட்டுபுட்டு வேடிக்கை பாக்கிறாங்க பாரு….என்னயா மாப்பிள்ளை பிள்ள மேஜராயா???
ராகவனை பார்த்து போலிஸ் கேட்க
"ஆமா யா???"என்றான் ராகவன்.
"ரிஜிஸ்டர் பண்ணியா???
"பண்ணியாச்சுங்கையா???
அப்பறம் என்ன மயித்துக்கியா ராமரு இப்டி துள்ளிக்கிருக்க…
"ஆனது,ஆகிப் போச்சு புதுசா கல்யாணமானவங்களை
கூப்பிட்டு போயி ஆக வேண்டியத பாப்பயா???"படார் படார் என பேசி விட்டு
போலிஸ் காரர் வாக்கி டாக்கியில் வந்த அறிவிப்பை கேட்டு கொண்டிருந்தார்.
மேலும் கூட்டத்தில் பொரணி வெடிக்கிறது.
"எப்டி இருந்தாலும் அவங்க ஆளுகள எப்படியப்பா
ஏத்துகிறது???இப்படி ஒருவன் சொல்ல
"தூண்டை இடுப்புல கட்டி குப்புட்றேன் சாமினு
சொல்றவேன்லா நம்ம ஆளுகளுக்கு சம்மந்தியா???இன்னோருவன்
"எங்கிட்டாச்சும் போய் பொழச்சுகட்டும் என்னமோ இவன நம்பி வந்துருச்சு..அதுக்கு என்ன செய்வ..."என ஒரு அக்கா இரக்கப்பட..
தன் குடும்பத்தின் மானமே போனதென ராமர் நேஞ்சிள் கை வைத்து இடிந்து போய் உக்காந்தார்.
"ஏம்மா…பொண்ணு,உன்ன வீட்டுக்குள்ள விடலனா சொல்லுமா..உன் மாமனார் மேல ஒரு கம்லேண்ட குடு நா பாத்துக்கிறேன்.மாலையும் கழுத்துமாய் நின்ற அவளை பார்த்து கேட்டார் போலீஸ்.
இவ்வளவு நேரம் அமைதியாக இருந்தவள்
திடிரென..சார் எனக்கு இந்த மாப்பிளைய பிடிக்கல சார்..இந்த காட்டு பயலுகளோடலா வாழ முடியாது.சாவடுச்சாலும் அடுச்சுருவாங்க ….
என சொல்லிக்கொண்டே மாலையை கழற்றி கூட்டத்தின் மீது எறிந்து விட்டு காளிப் பார்வையோடு நடந்தாள்.கூட்டம் அவளுக்கான பாதையை ஒதிக்கி தந்தது.
கருத்துகள்
கருத்துரையிடுக