முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

பிப்ரவரி, 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

“ ஹேராம்” என்ற முழக்கம் ; கோட்சே மகாத்மாவை ஏன் கொன்றார் ?

ஜனவரி 30, 1948  அன்று இந்திய பூமியின் உன்னத மகாத்மா காந்தி  சுட்டுக் கொல்லப்பட்ட தினம்.      இந்திய விடுதலைப் போராட்டத்திற்காக தன் வாழ்நாள் முழுவதும் அற்பணித்த மகாத்மாவை ஏன் கொன்றார்கள் ? எதற்கு கொன்றார்கள்? அப்படி சுதந்திரத்தின் மீதான அன்பில் மக்கள் திளைத்துக் கொண்டிருக்கும் போது அவர்களுக்கு மட்டும் ஏன் இந்த வெறுப்பு ?   பாகிஸ்தானுக்கான காரணம்       இந்தியா விடுதலை பெறுவதற்கு முன்பிருந்தே இந்து மதத்திற்கும் இஸ்லாமிய மதத்திற்கும்  பல மதக்கலவரங்கள்  ஏற்பட்டுக் கொண்டிருந்தது. இந்துத்துவா அமைப்பின் சார்பில் சிலரும் இஸ்லாமிய அமைப்பின் தலைவரான ஜின்னாவும் நடத்திக்கொண்ட சண்டை கடைசியில் ஜின்னாவை தனிநாடு கேட்க வைத்தது . இந்து மதத்திற்கு முஸ்லிம்களுக்கும் நடைபெற்ற பல மத கலவரங்களில்  பலர் மோதிக்கொண்டார்கள். முஸ்லிம்களுக்கு இந்தியாவில் மரியாதை இல்லை என்றும் ,பெரும்பான்மையான இந்துக்கள் வாழும் நாட்டில் எங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும்  அவர்கள் தனிநாடு வேண்டினர். இப்போது பங்களாதேசமாக  இருக்கும் நாடும் பாகிஸ்தானும் வெள்ளையர்கள...

யார் இந்த ஜீவானந்தம் இப்படியும் சில தலைவர்களா??

"குடிசை வீட்டில் தங்கியிருப்பதை பார்த்து ஏன் இப்படி தங்கியிருக்கிறீர்கள்?? நீங்கள் எவ்வளவு பெரிய தலைவன் என கேட்டிருக்கிறார் காமராசர். என் மக்கள் இப்படி தானே இருக்கிறார்கள்." என ஜீவா பதில் அளித்துள்ளார். ஜீவானந்தம் என்றாலே பொதுவுடமை என்று தான் எல்லாரது நியாபகத்திற்கும் வரும் பொதுவுடைமை தாண்டிய அவரது வாழ்க்கை முறை,தன் மக்களை காக்க போராடிய மனப்போக்கு இப்படிஅவரை பற்றி நிறைய விடயங்களை நாம் பேசிக்கொண்டே போகலாம்.ஒரு மனிதனால் அதுவும் ஒரு ஆகசிறந்த தலைவனால் இப்படியெல்லாம் தமிழகத்தில் வாழ முடியுமா?? என்ற கேள்விக்கு பதில் அளித்துப் போனவர் தான் ஜீவானந்தம். ஜீவானந்தம் நாகர்கோயிலை அடுத்த பூதப்பாண்டி என்ற ஊரில் கிராமத்தில் 1907ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21ஆம் தேதி, பட்டத்தார் பிள்ளை - உமையம்மாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார். பெற்றோர் இட்டபெயர் சொரிமுத்து. ஐயனார் என்ற கிராம தெய்வத்தின் பெயர்தான் சொரிமுத்து.தனது பள்ளிக் காலத்தில் இவர் காந்தியடிகள் மீது அளவற்றப் பற்றுக் கொண்டிருந்தார். அவரது சிறுவயதில் காந்தியும் கதரும் என்ற பெயரில் கவிதையும் எழுதினார். சிறு வயதிலேயே குடும்பத்தை விட்டு பிர...

பொது பணித்துறையில் பார்ப்பனர்களின் ஆளுமையும் ஆதிக்கமும்!! தாழ்த்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டின் அவசியமென்ன?

     தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் பார்ப்பனர்களின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. இந்தியாவில் உள்ள பெரிய நிறுவனங்களிலும், பெரிய பெரிய பதவிகளிலும் பார்ப்பனர்களை அதிக ஆதிக்கம் செலுத்துகிறார்கள் .இட ஒதுக்கீடுகளை பற்றி அதிகம் பெறுகிறார்கள் எனும் குற்றச்சாட்டு தாழ்த்தப்பட்டவர்கள் மீது வைக்கப்படுகிறது.ஏன் கேட்க வேண்டும் இது தான் காரணம்.     இந்தியாவில் மட்டும் மொத்தம்  3600  IAS அதிகாரிகள் இருக்கிறார்கள் .அதில்  2,700 IAS அதிகாரிகள் பார்ப்பனர்களாக இருக்கிறார்கள்.இதில் எங்கே சமத்துவம் நிலைநாட்டுகிறது இந்திய அரசு ?     நமது இந்தியாவில் 3லிருந்து 5% பார்ப்பனர்கள் இருக்கிறார்கள் .அவர்களால் எப்படி 76% IAS அதிகாரிகள் பதவியை வகிக்க முடிந்தது.  மீதமுள்ள 95% பிற்படுத்தப்பட்ட மட்டும் தாழ்த்தப்பட்டசாதியினர் மொத்தமே 680 பதவிகளை வகிக்கிறார்கள்.    அடுத்தபடியாக கல்வித்துறையில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் இந்தியாவில் மொத்தம் 114 பேர் இருக்கிறார்கள் அதில் 108 பேர் பார்ப்பனர்களாக இருக்கிறார்கள்.மேலும் நீதித்துறையில் 26 பதவிகள...