முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

சினிமா கட்டுரைகள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

the Mirror -திரைக்கதை அமைப்பு

Jafar panahi இயக்கிய the mirror திரைப்படம் 1997ல் வெளியானது. இந்த படம் ஒரு சிறுமியை முக்கிய கதாப்பாத்திரமாக வைத்து எடுக்கப்பட்டது. கதை ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே குழந்தையின் நடிப்பு பார்பவர்களை கவர்ந்துவிடும். பள்ளி முடித்துவிட்டு வீட்டுக்கு போக அம்மாவுக்காக காத்திருக்கும் சிறுமி,நேரம் ஆகியும் அம்மா வரவில்லை என போன் செய்ய விவரமாக சாலையை கடந்து போகிறது. போன் பூத்தில் ஏறி போன் செய்து அம்மா எடுக்காததால் விரக்தியான பெண்ணை பள்ளி ஆசிரியையின் கணவர் பேருந்து நிறுத்தில் இறக்கி விடுகிறார். அங்கு சில நிமிடங்கள் காத்திருந்தும் அம்மா வந்த பாடில்லை எனவே சிறுமியே ஒரு பஸ்ஸில் ஏறி உட்கார்ந்துகொள்கிறாள். அங்கே ஜோசிய கார பெண்ணோருத்தி பெண்களுக்கு ஜோசியம் பார்ப்பதை உற்று கவனிக்கிறாள். வண்டி போகும் போது சாலையில் அம்மாவை போல யாரோ தெரிய மீண்டும் பேருந்திலிருந்து இறங்கி அம்மாவை பார்க்க ஓடுகிறாள். ஆனால் அங்கே அவளில்லை. வெறுமையில் மீண்டும் இறங்கிய பஸ்ஸிலே ஏறி பயணிக்கிறாள். பயணத்தில் பெண்கள் தங்களது வாழ்க்கையில் அன்றாடம் சந்திக்கும் வலிகளை பகிர்ந்து கொள்கிறார்கள். காதலர்கள் இருவர் ஸைட் அடிக்கும் காட்சியை பார்த்...