ஜாலியன் வாலாபாத்தின்
ரத்த மண்ணை என் கைகளால் நான் சுமந்திருக்கலாம்..
பால்யத்தில் மார்க்சிய
மாத்திரைகளை முழுங்கி
வளர்ந்திருக்கலாம்...
எங்கள் தெருவில்
துரைமார்களின் தொட்டாவால்
தெரித்த குருதியை
மிதித்து நடந்திருக்கலாம்..
நானும் நண்பர்களும்
சேர்ந்து அந்த கர்னலை
சுட்டு சாய்திருக்கலாம்...
வெடிகுண்டுகள் மற்றும்
துப்பாக்கிகளின் வாசத்தோடு
காட்டில் புதைந்திருக்கலாம்..
நான் தான் இந்தியாவின்
முதல் காம்ரேட் என
பீத்திக் கொண்டிருக்கலாம்..
கோதுமை தேசத்தில்
தொப்பிபோட்டு மீசை
முறுக்கித் திரிந்திருக்கலாம்..
நான் ஏன் நாத்திகனானேன்
என நானே புலம்பி
குழம்பி தவித்திருக்கலாம்..
தூக்கு தண்டனை ஒப்பந்ததில்
கையெழுத்திட்ட துரோகியை
தேடியிருக்கலாம்....
தூக்கு மேடைக்கு முன்பு வரை
புத்தகத்தை ஆக்ரோசமாக
புணர்ந்து கொண்டிருக்கலாம்...
கடைசியாக தூக்கில்
கழுத்தை சொருகும் போது
நானில்லாவிட்டாலென்ன
நீங்கள் போதாதா
என தொங்கியிருக்கலாம்..
ஆக நான்
நீங்களாகவோ
நீங்கள் நானாகவோ
சில சில வருட
வித்தியாசத்தில்
போராடியிருக்கலாம்...
27.9.2019
பகத்சிங் பிறந்த நாள்
கருத்துகள்
கருத்துரையிடுக