ஏன் இரவை இவ்வளவு வேகமாகப் புணர்ந்து கொண்டிருக்கிறேன். மூளை அதிர யார் சுத்தியால் அடிப்பது. மின் விசிறியின் ஓசை ஏன் அறையின் அமைதியை இப்படி திங்கிறது . பசிக்கு இத்தனை பெயர்கள் வைத்து யார் ஆற்றுகிறார்கள். என்னை நானே கொன்று கொல்ல வேண்டுமென ஆசையாய் இருக்கிறது. மற்ற ஜீவ ராசிகளைப் போல இந்த உலகத்தில் வாழப் பயிற்சி எடுத்துக் கொள்ளாத என்னால் தற்கொலையைத் தவிர வேறெதுவும் சிந்திக்க முடியவில்லை. காலையிலிருந்து அம்மா அழைத்த வண்ணமிருக்கிறாள். அப்பனுக்கு நோய் முற்றி விட்டதாம். "சாகும் முன்பாவது வந்து பார் என்பதே அவளது பேராசையாய் இருந்தது. ஆனால் நான் எப்படிச் செல்வது கையில் சுத்தமாகக் காசேயில்லை. யாரிடமாவது கடன் கேட்கலாமா? அதற்குப் பதிலாகப் பிச்சை எடுத்தால் என்ன? கடன் அந்த வார்த்தை தான் எங்கள் குடும்பத்தை சின்னாபின்னமாக்கியிருக்கிறது .விவசாயத்திலிருந்து, ஆடம்பரம் வரை எல்லாவற்றுக்கும் கடன்,வட்டி கட்டி கட்டியே அப்பன் தேய்ந்து போனான். இதில் குடிப்பழக்கம் வேறு. இத்த...
writter அஞர் நாவல் - வர டீ பதிப்பகம் வெளியீடு https://www.commonfolks.in/books/d/angar