பிங்க் நிற காதல்
ஆர்த்திக்கு எப்போதாவது இயற்கையின் மீது பெரும் பற்று வரும். அதுவரை அந்த அறைக்குள்ளேயே அடைந்து கிடப்பாள். இன்டர்நெட்டில் படம் பார்ப்பது, அதை விட்டால் கேம் விளையாடுவது தான் அவளின் பிரதான பொழுதுபோக்கு.
"வயசு 25 ஆகப்போகுது இன்னும் குழந்தை மாதிரி கேம் விளையாடிக்கிட்டு இருக்க ,நீயெல்லாம் புருசன் வீட்டுக்கு போய் என்ன செய்ய போறியோ? "
அம்மா ஒவ்வொரு முறை இப்படி திட்டும் போதும் அவள் நெஞ்சுக்குள் பெரும் பயம் தொற்றிக் கொள்ளும்.நெஞ்சு இரும்பாய் கனத்து இறுக்கமடைவதாய் உணர்வாள். ஒரு ஆணோடு கை கோர்த்து நடக்க வேண்டுமா? அவன் உடலோடு உடலுரசி ஸ்பரிசம் தீண்ட வேண்டுமா? இதனை அவளால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. அதற்கு தற்கொலையே மேல் என நினைத்தாள்.
மிகவும் ஒல்லியான தேகமும்,ரொம்பவும் அழகென சொல்லிவிடக்கூடியவளாய் இல்லாவிட்டாலும் லட்சணமான முகப் பச்சியுள்ள மாநிறத்துக்கு காரிதான் ஆர்த்தி. ஆனால் அந்த கண்கள் எவ்வளவு ஒளியை தரக்கூடியதாக இருக்கிறது. முதல் முதலாக அவளை நேருக்கு ,நேராய் பார்த்து பேசும் யாரும் விழுந்து விடுவார்கள் . இமை படபடப்போடு ஆர்த்தியின் முக பாவனைகளை பார்த்தால் சில சமயம் பெண்கள் கூட கிறங்கி விடுவார்கள்.
கல்லூரியின் ஆரம்ப காலத்தில் தான் அவளுக்கும், மிதுனாவிற்குமான காதல் துவங்கியது. அவள் அருகே அமர்ந்து தோல் உரசிக் கொண்டு அமர்வதென்றால் ஆர்த்திக்கு அவ்வளவு பிரியம்.அவளுக்கு சாதாரணமான பெண்களுக்கு ஆண்களை கண்டால் ஹார்மோன் சுரக்கும் உடலில் ஒரு வித அயற்சி நடக்கும் அது போன்று அவளுக்கு எந்த சகிம்சைகளும் நடக்கவில்லை.அவள் கூட தனக்கு ஏதோ பிரச்சனை இருப்பதாகத்தான் முதலில் நினைத்தாள். ஆனால் கல்லூரி வகுப்பறையில் மிதுனாவின் விழிகளை பார்த்த முதலே ஆர்த்தியின் மனதில் காதல் டிரம்ஸ் வாசிக்க ஆரம்பித்தது. மிதுனாவும், ஆர்த்தியும் நல்ல நண்பர்களாக தான் முதலில் பழகி வந்தனர் .
காலத்தின் பெரும் அலைக்கழிப்பில் , உடலில் உண்டான மாற்றங்களால் வெளியில் சொல்லிக்கொள்ள முடியாத ஆர்த்தியின் மனதில் மிதுனாவின் மீதான காதல் பெருகியது.
கல்லூரி ஹாஸ்டலில் இருள் நிறைந்திருந்த இரவிற்கு மத்தியில் இருவரும் தங்களது மூச்சுக்காற்றின் சப்தத்தை ஒருவருக்கு ஒருவர் உள்வாங்கினர். ஆர்த்தி தான் முதல் முதலில் மிதுனாவிடம் நெருங்கி தன் காதலை சொன்னாள்.
"மிதுனா ,இதை சொல்றதுக்கு முன்னாடி நா நிறைய தடவ யோசிச்சிட்டேன், ஆனா இத சொல்லாம இருக்க கூடாதுனு தா தோணுது . எனக்கு ஆம்பளங்கள பார்த்த எந்த உணர்ச்சியும் வரதில்லை. ஆனா உன்னை பார்த்த நாளிலிருந்து மனசு அவ்வளவு கொண்டாட்டமா இருக்கு, ஒவ்வொரு தடவை நீ கிட்ட வரும் போது நான் ஒரு மேக்ண்ட மாதிரி உன் கிட்ட ஒட்டிக்கிறேன், உன்ன விட்ற கூடாதுனு மனசு ஏங்குது,உனக்கு இதுல விருப்பம் இருந்தா? வா என்ன ஹக் பண்ணிக்கோ " பெரு தயங்கத்தோடு சொல்லி விட்டிருந்த அவள் உதடு துடிக்க ஆரம்பித்தது. மிதுனாவும் அதற்காகத்தான் காத்திருப்பதை போல ஆர்த்தியை இறுக அணைத்தாள். இருவரும் ஸ்பரிசத்தின் வாசனையில் தங்களை நனைத்துக் கொண்டார்கள். உதடுகளோடு உதடுகள் கோர்த்து முத்தம் தீட்டி மகிழ்ந்தார்கள். அதற்கு பின்பு அந்த நான்கு வருடங்களும் இருவருக்குமான காதல் அதிகரித்து கொண்டே போனது. அதே சமயம் காமத்தையும் எப்போதாவது தணித்துக் கொண்டார்கள். ஒரு கட்டத்திற்கு மேல் மிதுனா ஒரு ஆணைக் காதலிக்க ஆரம்பித்திருக்கிறாள் என்ற விசயத்தை அறிந்த ஆர்த்தி வேதனையடைந்தாள்.
ஒவ்வொரு இரவும் ஆர்த்தி, மிதுனாவிற்கு கவிதை எழுதும் பழக்கம் கொண்டிருந்தாள். அதனை மிதுனாவிற்கு வாசித்து காட்டி தனது பூரணமான காதலை வெளிப்படுத்துவாள். இப்போதெல்லாம் மிதுனாவிற்கு அந்த கவிதைகளை கேட்பதில் முகச்சுழிப்பு உண்டாகிறது. அவளுக்கு ஆர்த்தியிடம் வெறுமென காமம் மட்டுமே போதுமானதாக இருந்தது. ஆர்த்தியை வெறும் காமத்தை தணித்து கொள்ள உதவும் பொம்மையாக தான் பயன்படுத்தியிருக்கிறாள் எனவும் போகப், போக ஆர்த்திக்கு புரிந்தது.
கல்லூரி படிப்பை முடித்த அடுத்த சில நாட்களில் மிதுனா ,அவளை மொத்தமாக புறங்கணித்தாள்.ஆர்த்தி மிதுனாவின் மீதான காதலை மறக்க முடியாமல் தனது அறையிலே அடைந்து கிடந்தாள். தினமும் மிதுனாவை நினைத்து, நினைத்து ஏதேனும் கவிதைகள் எழுதி அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போடுவாள். மிதுனா கல்யாணத்திற்கு கூட கூப்பிடவில்லை என்ற ஏக்கம் அவளை வருத்தியிருந்தது.
ஆர்த்தியின் அறைக்கு தினமும் ஏதாவது வரன் கேட்டு பல ஆண்களின் புகைப்படங்கள் மேசைக்கு வரும். ஆனால் ஒன்றை கூட இதுவரை பார்த்ததில்லை. எப்போது பார்த்தாலும் இரு பெண்கள் காதலிக்கும் ஒரு கொரியன் சீரியலை போட்டுப் பார்ப்பாள்.அந்த கதாப்பாத்திரங்களை போல் தனக்கும் வாழ்வு மாறாதா? என வேதனையடைவதுண்டு. சில சமயம் அந்த கதாபாத்திரங்களை போலவே முடிவெட்டிகொண்டு, அதே போல உடைகளை உடுத்துவாள்.
காமத்தை கடந்து ஒரு பெண்ணுடனாவது உண்மையான காதலில் திளைத்து விட வேண்டும் என ஆர்த்தி எண்ணும் போதெல்லாம் தனது அப்பாவை நினைத்து கொள்வாள். நான் இப்படிப்பட்ட பெண் என தெரிந்தால் உண்மையில் அவரால் அதனை சகித்து கொள்ள முடியாது. தற்கொலைக்கு கூட தயங்க மாட்டார். தனக்கு வரப்போகும் இணை பெண்ணாக மட்டுமே இருக்க வேண்டும் என உறுதிப்படுத்திக் கொண்டாள். இந்த நாட்களில் இன்ஸ்டாகிராமில் ஒரு அமெரிக்க வாழ் இலங்கை பெண்ணுக்கும், ஆர்த்திக்கும் இடையே காதல் மலர்ந்தது. நேருக்கு நேராக சந்தித்துக் கொள்ளாவிட்டாலும் இணையம் வாயிலாக அவர்கள் எல்லாவற்றையும் பேசினர். தினமும் இரவு நேரங்களில் உறங்காது இருவரும் காதலில் திளைத்தனர். ஒரு நாள் அந்த பெண்
"இங்கே வந்துவிடு,இந்தியாவை போல் அதற்கு இங்கே தடையில்லை.நாம் இருவரும் திருமணம் செய்து கொள்வோம்" என சொல்லியிருந்தாள்.ஆர்த்தியும் அமெரிக்காவிற்கு செல்வற்கான எல்லா ஏற்பாடுகளை முன்னமே மறைமுகமாக செய்திருந்தாள். தான் வீட்டை விட்டு போகும் போது ஒரு கடிதத்தை அப்பாவின் பார்வைக்கு விட்டு விட்டு போக வேண்டும் என அவளுக்கு தோன்றியது.அவள் புறப்படுவதற்கு சில தினங்களுக்கு முன்னறே அந்த கடிதத்தை எழுதிக் கொண்டிருக்கிறாள். ஒரு பிங்க் நிற சாட்டை பாதியாக கிழித்து அதில்
" அப்பா! நீங்கள் அம்மாவை போல் இல்லை.மெத்த படித்தவர். உலகம் அறிந்தவர். ஆனாலும் இந்த கலாச்சார நாடககூட்டத்திலிருந்து உங்களை உங்களால் விடுவித்துக் கொள்ள முடியாது என்பதை நான் அறிவேன். நான் கேட்பதை எல்லாம் வாங்கி தந்த உங்களது விரல்களை பற்றி எனக்கான சுதந்திரத்தை கேட்க எனக்கு தயக்கமாக இருக்கிறது. ஒரு வேலை அது உங்களுக்கு தெரிந்து நீங்கள் தற்கொலை செய்து கொள்ள நான் காரணமாகிவிடக்கூடாது என நினைக்கிறேன்.உங்களை பொருத்த வரை நான் வேறு ஒரு ஜீவனுடன் வாழப்போகிறேன் என்பதாகவே இருக்கட்டும். இதில் பால் பிரிவினை வேண்டாம். இப்போது நான் உங்களிடமிருந்து விடைபெறுகிறேன். ஆனால் எப்போதும் நான் குழந்தையாக இருக்கும் போது என்னை நீங்கள் தூக்கும்போதெல்லாம் வருமே என் மீது ஒட்டியிருக்கும் அந்த பால் வாசனை அதை மட்டும் அவ்வப்போது நினைத்து நுகர மறந்துவிடாதீர்கள். அதில் எப்போதும் உங்களின் ஆர்த்தி நிறைந்திருப்பாள்.”
கடிதத்தை மேசையில் வைத்து விட்டு வீட்டில் யாரும் இல்லாத பொழுதில் ஆர்த்தி வெளியேறிவிட்டாள். ஆனால் அவள் மனம் இன்னும் இந்த கலாச்சார சிக்கல்களுக்குள் சொந்த பந்தங்களின் வார்த்தைகளுக்குள் எப்படி தங்களை தகவமைத்துக்கொள்ள போகிறார்களோ என்ற அச்சமிருந்தது. இருந்தும் இந்த வாழ்வு ஒரே ஒரு முறை தானே தனக்கு வாழக்கிடைத்திருக்கிறது என்ற ஏக்கத்தில் அவள் விமான நிலையத்தை நோக்கி புறப்பட்டாள். வானம் அவளுக்காக அழுதுகொண்டே அனல் பறக்கும் சாலையை குளிர்வித்துக்கொண்டிருந்தது.
2024 - இல் நான் மிகப்பெரிய கெஜ புழு..தியாக இருந்தேன். வரும் வருடத்தில் இன்னும் மிகப்பெரிய கெஜ புழு..தியாக மாற போகிறேன். நான் அவ்வொரு ஆண்டு முடியும் போதும் போன வருடத்தை விட இந்த வருடம் சிறப்பாக புழு..தி இருப்பதாக நினைத்து கொள்வதுண்டு. இல்லையென்றால் சில நேரம் என் கீழ்மை குணங்களை அளவிடுவதுண்டு. நான் போன ஆண்டை விட இந்த ஆண்டு எவ்வளவு கீழ்மை குணம் உள்ளவனாக மாறியிருக்கிறேன். எந்த அளவுக்கு என் அல்ப புத்திகள் அரங்கேறியிருக்கிறது என கணக்கிட்டு பார்ப்பேன். நான் ஒரு மகா சோம்பேறி . இலையை போல் தூக்கி ஆற்றில் போட்டால் மிதந்து மிதந்து போவேன். பாறையில் மோதாமல் போகும் சூட்சமும் தெரியும்.என்னை பெரிய பிடுங்கியாக எப்போதும் நினைப்பதில்லை. ஒரு நல்ல இயக்குனரிடம் பணிபுரிய வாய்ப்பு கிடைத்தது . நிறைய கற்றுக் கொள்ள முடிந்தது. நாம் சாதாரண கடன் கார குடும்பம் என்பதால் சூ..தை கிழிக்கும் சுமை வேறு நம்மை வேட்டையாடுகிறது. எல்லோரையும் போல் நமக்கு எல்லாம் அவ்வளவு இலகுவாக கிடைப்பதில்லை. ஏதோ நெஞ்சில் உரமிருக்க ஓடுகிறோம். உடல் ரீதியாக நிறைய கோளாறுகள் இருக்கிறது. அப்படி பயந்து கொள்ளும் அளவுக்கு ஒன்றுமில்லை தான் பா...

கருத்துகள்
கருத்துரையிடுக