முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

சூழலியல் என்பது மனிதம் சார்ந்தல்ல

  சூழலியல்.          சூழலியல் என்பது மனிதம் சார்ந்தல்ல.அது உலக உயிரிகளின் பாதுக்காப்பு.இயற்கையை மிஞ்சிய வாழ்வியல் தற்கொலைக்கு நிகரானது.அப்படி தன்னை தானே வகுத்துக்கொண்டு இங்கே மனிதன் போராடிக் கொண்டிருக்கிறேன்.வெறுமென பாதாகைகளைத் சுமந்து கொண்டு போராடுவதால் அதற்கு கதவுகள் திறந்துவிடாது.            தனிமனிதனின் தினச் செயல்பாடுகளே சுற்றுச்சூழலை காக்க பெரும் பங்கு வகுக்கின்றன.நகரமயமாக்கலில் விஞ்ஞானத்தில் தான் எல்லாமே என்று எல்லாரும் விஞ்ஞானத்தை தொங்கிக் கொண்டிருக்கிறோம். ஒரு கிராமத்தின் வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சியை தீர்மானிக்கிறது என்கிறோம்.அது முற்றிலும் உண்மை.கிராமங்களில் படித்த இளைஞர்கள் எல்லாரும் பெட்டிப்படுக்கையோடு நகரத்தில் வந்து குவிந்துவிடுகிறோம்.ஒரு குக்கருக்குள் எவ்வளவு சோறை வைத்து வேக வைக்க வேண்டும் என்ற கணக்கு இருக்கிறது அல்லவா.அதை நாம் புரிந்து செயல்படல் வேண்டும்.இயற்கையை அனாதையாக விட்டுவிட்டு நகரத்தில் குவிந்து கொஞ்சமாய் தூய்மையாக இருக்கும் நகரத்தையும் அசுத்தமாக்கிவிடுகிறோம்.எண்ண...

சகி

  நூலின் பெயர் : சகி            பெண்மை என்பது இந்த உலகின் உன்னத உயிரி .ஆண்களின் பார்வையில் அவை வெவ்வேறு விதமாக யுகிக்கபடுகிறது. சிலர் பெண்களை உடலாகவும் சிலர் வேலை செய்யும் இயந்திரமாகும்,சிலர் தெய்வமாகவும் சித்தரிக்கிறார்கள். ஒவ்வொரு ஆணும் அவன் வளர்ந்த விதத்தை பொறுத்து இவை மாறுபடுகிறது. கரிசல் காட்டில் வேலை செய்யும் பெண்கள் முதல் கம்யூட்டரில் வேலைசெய்யும் பெண்கள் வரை உடையில் வேண்டுமானாலும் மாறுதல் ஏற்பட்டிருக்கலாம் ஆனால் ஆண்கள் அவர்களை பார்க்கும் விதத்தில் எந்தவித மாறுதலும் ஏற்படவில்லை. பெண்கள் உள்ளுணர்வை புரிந்து கொள்ளும் ஆண்கள் மிகக் குறைவாகவே உள்ளனர் . அப்படியான ஆண்கள் அறிந்த, அறிந்திராத சில பெண்களின் வலிகளை கவிதை மொழியில் கதை ஆக்குவதே இந்தப் படைப்பின் முயற்சி. கரிசல் மண்ணின் வட்டார மொழியில் கதையை நகர்த்தி இருக்கிறேன். பெண்களோடு பிறக்காத நான் பெண்களை இந்த சமூகம் சித்தரித்த கோணத்தில் தான் கவனித்திருக்கிறேன். ஆனால் இலக்கியமும் சில அனுபவங்களும் அதனை வேறு வகையில் எனக்கு பிரதிபலித்தன. அந்த பிரதிபலிப்பை அவர்களின் உணர்வை இன்னொரு ஆணுக்கு கடத்துவதை இந்த படைப்...

சூபித்துவமும், இசையும்

             இஸ்லாமிய மதத்தில் துறவை மேற்கொள்ள விரும்புபவர்களுக்காக உருவாக்கப்பட்டதே   சூபித்துவம் எனப்படுகிறது. ஒரு ஆன்மா தன்னை துறந்து ஒரு இறை நிலையை தேடுவது தான் சூபி என்கிறார்கள். இது எல்லா மதத்திற்க்கும் பொதுவான ஒரு நிலை பாடு தான் . எல்லா மதத்திலும் இது மாதிரியான ஒரு துறவு நிலை சார்ந்த சாத்தியகூறுகள் நிறைய உள்ளன. ஆனால் இஸ்லாமியத்தை பொருத்த வரை எந்த வகை கற்பித்தலும் இல்லாமல் தன்னை இழந்து ஒரு வகை சுயத்தை அடைதல் தான் சூபி ஆவாதற்கான முதல் தகுதியாக கருதப்படுகிறது. கிரேக்கர்கள் தான் இந்த தத்துவத்தை உருவாக்கினர் என இஸ்லாமியர்கள் பலர் குற்றம் சாட்டுகின்றனர்.பல மதங்களின் நல்லொழுக்கங்களை வகுத்து ஒரு சேர உருவாக்கப்பட்டது சூபிசம் என்பது அவர்கள் கருத்து. ஒரு சூபி தனது வாழ்நாள் முழுதும் தன் ஆசைகளை துறந்து கடவுளை உணருகிற ஒரு நிலையை அடைகிறான்,சூபிகள் பொதுவாக இசை , நடனம் , கவிதைகள் , கதைகள் என பல வழிகளில் இந்த உலகிற்கு பல நல்ல கருத்துகளை போதிக்கின்றனர். பாரசிக நாட்டின் கவிஞரான ரூமி பல கவிதைகள் மூலம் சூபிசத்தை போதிக்கிறார். அவர் கூறமுற்படும் முக்கியமான தத...

பெருமகன்

பரிதியின் விழிகளில் உழகும் பெருமகன் பிளந்த நிலச்சதையில் நெளிந்த புழுதனைதேடி நித்திரை நிதம் தொலைத்தான். கட்டியமாட்டின் மலத்துளையில் எட்டிய உரந்தனை கொட்டியே பயிர் விதைத்தான். தூரல் தட்சணை எதிர்பார்த்து கருஞ்சிலையிடம் கைகுவித்தான்.. மிச்சமே சொச்சமாய் விழுந்த சில்லரை மழைத்துளியின் அறிமுக வாசத்திலே அரும்பாய் கதிர் முளைத்தெடுத்தான். எச்சில் பாலில் முளைத்த மெழிந்த எழும்பு கன்றாய் பச்சை பயிரில் முளைத்த மீதி வெள்ளாமைதனை விற்று உயிர் வளர்த்தான்.. ஒட்டி வயிர் சுமந்து சட்டி கூழ் குடித்து நம் நாவில் கொட்டும் ருசி கொடுத்தான் ….

“ ஹேராம்” என்ற முழக்கம் ; கோட்சே மகாத்மாவை ஏன் கொன்றார் ?

ஜனவரி 30, 1948  அன்று இந்திய பூமியின் உன்னத மகாத்மா காந்தி  சுட்டுக் கொல்லப்பட்ட தினம்.      இந்திய விடுதலைப் போராட்டத்திற்காக தன் வாழ்நாள் முழுவதும் அற்பணித்த மகாத்மாவை ஏன் கொன்றார்கள் ? எதற்கு கொன்றார்கள்? அப்படி சுதந்திரத்தின் மீதான அன்பில் மக்கள் திளைத்துக் கொண்டிருக்கும் போது அவர்களுக்கு மட்டும் ஏன் இந்த வெறுப்பு ?   பாகிஸ்தானுக்கான காரணம்       இந்தியா விடுதலை பெறுவதற்கு முன்பிருந்தே இந்து மதத்திற்கும் இஸ்லாமிய மதத்திற்கும்  பல மதக்கலவரங்கள்  ஏற்பட்டுக் கொண்டிருந்தது. இந்துத்துவா அமைப்பின் சார்பில் சிலரும் இஸ்லாமிய அமைப்பின் தலைவரான ஜின்னாவும் நடத்திக்கொண்ட சண்டை கடைசியில் ஜின்னாவை தனிநாடு கேட்க வைத்தது . இந்து மதத்திற்கு முஸ்லிம்களுக்கும் நடைபெற்ற பல மத கலவரங்களில்  பலர் மோதிக்கொண்டார்கள். முஸ்லிம்களுக்கு இந்தியாவில் மரியாதை இல்லை என்றும் ,பெரும்பான்மையான இந்துக்கள் வாழும் நாட்டில் எங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும்  அவர்கள் தனிநாடு வேண்டினர். இப்போது பங்களாதேசமாக  இருக்கும் நாடும் பாகிஸ்தானும் வெள்ளையர்கள...

யார் இந்த ஜீவானந்தம் இப்படியும் சில தலைவர்களா??

"குடிசை வீட்டில் தங்கியிருப்பதை பார்த்து ஏன் இப்படி தங்கியிருக்கிறீர்கள்?? நீங்கள் எவ்வளவு பெரிய தலைவன் என கேட்டிருக்கிறார் காமராசர். என் மக்கள் இப்படி தானே இருக்கிறார்கள்." என ஜீவா பதில் அளித்துள்ளார். ஜீவானந்தம் என்றாலே பொதுவுடமை என்று தான் எல்லாரது நியாபகத்திற்கும் வரும் பொதுவுடைமை தாண்டிய அவரது வாழ்க்கை முறை,தன் மக்களை காக்க போராடிய மனப்போக்கு இப்படிஅவரை பற்றி நிறைய விடயங்களை நாம் பேசிக்கொண்டே போகலாம்.ஒரு மனிதனால் அதுவும் ஒரு ஆகசிறந்த தலைவனால் இப்படியெல்லாம் தமிழகத்தில் வாழ முடியுமா?? என்ற கேள்விக்கு பதில் அளித்துப் போனவர் தான் ஜீவானந்தம். ஜீவானந்தம் நாகர்கோயிலை அடுத்த பூதப்பாண்டி என்ற ஊரில் கிராமத்தில் 1907ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21ஆம் தேதி, பட்டத்தார் பிள்ளை - உமையம்மாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார். பெற்றோர் இட்டபெயர் சொரிமுத்து. ஐயனார் என்ற கிராம தெய்வத்தின் பெயர்தான் சொரிமுத்து.தனது பள்ளிக் காலத்தில் இவர் காந்தியடிகள் மீது அளவற்றப் பற்றுக் கொண்டிருந்தார். அவரது சிறுவயதில் காந்தியும் கதரும் என்ற பெயரில் கவிதையும் எழுதினார். சிறு வயதிலேயே குடும்பத்தை விட்டு பிர...

பொது பணித்துறையில் பார்ப்பனர்களின் ஆளுமையும் ஆதிக்கமும்!! தாழ்த்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டின் அவசியமென்ன?

     தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் பார்ப்பனர்களின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. இந்தியாவில் உள்ள பெரிய நிறுவனங்களிலும், பெரிய பெரிய பதவிகளிலும் பார்ப்பனர்களை அதிக ஆதிக்கம் செலுத்துகிறார்கள் .இட ஒதுக்கீடுகளை பற்றி அதிகம் பெறுகிறார்கள் எனும் குற்றச்சாட்டு தாழ்த்தப்பட்டவர்கள் மீது வைக்கப்படுகிறது.ஏன் கேட்க வேண்டும் இது தான் காரணம்.     இந்தியாவில் மட்டும் மொத்தம்  3600  IAS அதிகாரிகள் இருக்கிறார்கள் .அதில்  2,700 IAS அதிகாரிகள் பார்ப்பனர்களாக இருக்கிறார்கள்.இதில் எங்கே சமத்துவம் நிலைநாட்டுகிறது இந்திய அரசு ?     நமது இந்தியாவில் 3லிருந்து 5% பார்ப்பனர்கள் இருக்கிறார்கள் .அவர்களால் எப்படி 76% IAS அதிகாரிகள் பதவியை வகிக்க முடிந்தது.  மீதமுள்ள 95% பிற்படுத்தப்பட்ட மட்டும் தாழ்த்தப்பட்டசாதியினர் மொத்தமே 680 பதவிகளை வகிக்கிறார்கள்.    அடுத்தபடியாக கல்வித்துறையில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் இந்தியாவில் மொத்தம் 114 பேர் இருக்கிறார்கள் அதில் 108 பேர் பார்ப்பனர்களாக இருக்கிறார்கள்.மேலும் நீதித்துறையில் 26 பதவிகள...