முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

“ ஹேராம்” என்ற முழக்கம் ; கோட்சே மகாத்மாவை ஏன் கொன்றார் ?

Twitterati pays homage to Mahatma Gandhi on 68th death anniversary ...ஜனவரி 30, 1948 அன்று இந்திய பூமியின் உன்னத மகாத்மா காந்தி  சுட்டுக் கொல்லப்பட்ட தினம்.
     இந்திய விடுதலைப் போராட்டத்திற்காக தன் வாழ்நாள் முழுவதும் அற்பணித்த மகாத்மாவை ஏன் கொன்றார்கள் ? எதற்கு கொன்றார்கள்? அப்படி சுதந்திரத்தின் மீதான அன்பில் மக்கள் திளைத்துக் கொண்டிருக்கும் போது அவர்களுக்கு மட்டும் ஏன் இந்த வெறுப்பு ?
  பாகிஸ்தானுக்கான காரணம்
      இந்தியா விடுதலை பெறுவதற்கு முன்பிருந்தே இந்து மதத்திற்கும் இஸ்லாமிய மதத்திற்கும்  பல மதக்கலவரங்கள்  ஏற்பட்டுக் கொண்டிருந்தது. இந்துத்துவா அமைப்பின் சார்பில் சிலரும் இஸ்லாமிய அமைப்பின் தலைவரான ஜின்னாவும் நடத்திக்கொண்ட சண்டை கடைசியில் ஜின்னாவை தனிநாடு கேட்க வைத்தது . இந்து மதத்திற்கு முஸ்லிம்களுக்கும் நடைபெற்ற பல மத கலவரங்களில்  பலர் மோதிக்கொண்டார்கள். முஸ்லிம்களுக்கு இந்தியாவில் மரியாதை இல்லை என்றும் ,பெரும்பான்மையான இந்துக்கள் வாழும் நாட்டில் எங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும்  அவர்கள் தனிநாடு வேண்டினர். இப்போது பங்களாதேசமாக  இருக்கும் நாடும் பாகிஸ்தானும் வெள்ளையர்களால் பிரித்து தரப்பட்டது.
 காந்தியின் உண்ணாவிரதம்  
    இந்தியா சுதந்திரம் அடைந்த பின்பு காந்தி மகிழ்ச்சி கொள்ளவில்லை. நாடு பிரிந்ததற்காக பெரிதும் வருத்தப்பட்டார் . மேலும் கொல்கத்தா போன்ற பல இடங்களில் மதக்கலவரங்கள் உண்டாகின .அதனால் அவருக்கு இந்த சுதந்திரம் திருப்தியளிக்கவில்லை . ஆகஸ்ட் 15 இல் நள்ளிரவில் சுதந்திரத்திருநாள் அன்று காந்தி  எந்தவித கொண்டாட்டத்திலும்  ஈடுபடவில்லை.
    கொல்கத்தாவில் நடக்கும் கலவரத்திற்க்காக வருத்தப்பட்டார். மேலும் அந்த கலவரத்தை அடக்க வேண்டுமென்று உண்ணாவிரதம் மேற்கொண்டார் பாகிஸ்தான் இந்தியா விட்டு பிரிந்து இருந்தாலும் அது நம் சகோதர நாடு அதுவும் ஒரு வகையில் இந்தியாதான் என பேசினார்.
    தன் வாழ்நாள் முடியும் முன்பு எப்படியாவது பாகிஸ்தான் சென்ற அந்த மக்களை கண்டு விட வேண்டும் என்ற ஆசை அவருக்கு இருந்தது.  மேலும் நாடு பிரிக்கப்படும் போது பாகிஸ்தானியருக்கு தரப்பட வேண்டிய பணத்தை சரியாக தரவில்லை என ஜின்னா கேட்டிருந்தார். அவர்களுக்காக காந்தி குரல் கொடுத்தது இந்துவா அமைப்புக்கு  பிடிக்கவில்லை.அதனால் அன்றைய இந்துத்துவா அமைப்பு காந்தியைக் கொல்ல பல முயற்சிகள் எடுத்தது. இரண்டு மூன்று முறை அதில் தோற்றும் போனது .
    கடைசியாக 1948 ஒன்றும்  அறியா இளைஞனை  கொண்டு காந்தியை  கொள்ளத் திட்டமிட்டனர் அன்று எல்லா மக்களும் சமம் என்று போராடிய காந்தியின் இருதயத்தில் துப்பாக்கிக் குண்டுகள் துளைக்கப்பட்டன. கோட்சே எனும் இளைஞனின் கை உயர்ந்தது.அன்னலின் குரல்  "ஹே ராம்" என ஒழித்தது.காந்தியை கொன்றுவிட்டு அவன் அங்கயே நின்றான். அது அவரை நாங்கள் தான் கொலை செய்தோம் என சுட்டிக்காட்டுவதற்காக செய்திருக்கலாம்.
  காந்தியின் நினைவலைகள் இப்போதைய பாசிசிய  அரசுக்கு புரியாது அது அவர்களுக்கு கொண்டாட்டமான தினமாக கூட இருக்கலாம். அவர்மேல் சில வெறுப்பு எதிர்ப்புகள் இருந்தாலும் நாட்டிற்காக தன்னையே அர்ப்பணித்த ஒரு தலைவனை அந்த நாட்டு மக்களால்  கொல்லப்படுவது எவ்வளவு பெரிய கொடுமை ? அப்படி மதத்தின் மூலமாக நாட்டை பிரித்துப்  போட்டுக்கொண்டிருக்கும் பாஜக அரசு  காந்தியை போற்றாவிட்டாலும் என்றும்  காந்தியின் நினைவை நாம் போற்றுவோம்.
--சிபி சரவணன் 



https://nermai.net/news/7528/22b88a3ee8a94da8261157a4a35f0dcc

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2024_ஒரு அலசல்

  2024 - இல் நான் மிகப்பெரிய கெஜ புழு..தியாக இருந்தேன். வரும் வருடத்தில் இன்னும் மிகப்பெரிய கெஜ புழு..தியாக மாற போகிறேன். நான் அவ்வொரு ஆண்டு முடியும் போதும் போன வருடத்தை விட இந்த வருடம் சிறப்பாக புழு..தி இருப்பதாக நினைத்து கொள்வதுண்டு. இல்லையென்றால் சில நேரம் என் கீழ்மை குணங்களை அளவிடுவதுண்டு. நான் போன ஆண்டை விட இந்த ஆண்டு எவ்வளவு கீழ்மை குணம் உள்ளவனாக மாறியிருக்கிறேன். எந்த அளவுக்கு என் அல்ப புத்திகள் அரங்கேறியிருக்கிறது என கணக்கிட்டு பார்ப்பேன். நான் ஒரு மகா சோம்பேறி . இலையை போல் தூக்கி ஆற்றில் போட்டால் மிதந்து மிதந்து போவேன். பாறையில் மோதாமல் போகும் சூட்சமும் தெரியும்.என்னை பெரிய பிடுங்கியாக எப்போதும் நினைப்பதில்லை. ஒரு நல்ல இயக்குனரிடம் பணிபுரிய வாய்ப்பு கிடைத்தது . நிறைய கற்றுக் கொள்ள முடிந்தது.  நாம் சாதாரண கடன் கார குடும்பம் என்பதால் சூ..தை கிழிக்கும் சுமை வேறு நம்மை வேட்டையாடுகிறது. எல்லோரையும் போல் நமக்கு எல்லாம் அவ்வளவு இலகுவாக கிடைப்பதில்லை. ஏதோ நெஞ்சில் உரமிருக்க ஓடுகிறோம். உடல் ரீதியாக நிறைய கோளாறுகள் இருக்கிறது. அப்படி பயந்து கொள்ளும் அளவுக்கு ஒன்றுமில்லை தான் பா...

கெடா விருந்து - சிறுகதை

                     கெடா விருந்து    ப ள்ளிக் கூடத்தில் பெல் அடிக்கும் சத்தம் கேட்டது . உடனே எங்கள் வகுப்பில் படர்ந்திருந்த சலசலப்பு மெல்ல மடிந்து பெரும் அமைதி நிலவியது . நான் கடைசி பெஞ்சுக்கு முன்பிருந்த பெஞ்சில் அமர்ந்திருந்தேன் . எங்கள் வகுப்பில் கடைசி பெஞ்சில் அமர்ந்திருக்கும் ஐந்து மாணவர்கள் மட்டும் அழுக்கு அப்பிய சட்டையை அணிந்திருப்பார்கள் . பொதுவாகவே அரசினர் மாணவர் விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்களை மட்டும் எங்கள் வகுப்பில் ஒரு மாதிரியாகத்தான் பார்ப்போம் . அவர்களை பார்த்தாலே “ சொறி சிரங்கு பிடிச்சவங்களா ? போய் கடைசி பெஞ்சுல உக்காருங்கடா ?” என சமூக அறிவியல் ஆசிரியர்  துரத்துவார் . எங்கள் வகுப்பிலுள்ள ஐந்து பேரில் கோகுல் மட்டும் நன்றாக படிப்பான் . அவனை பார்த்தால் ஆறாவது படிக்கும் மாணவர்களை போல் அல்லாமல் உயரத்தில் சற்று பெரிய பையனாக இருப்பான் . அவனை வகுப்பில் எல்லோரும் கொக்கு என்று தான் பட்ட பெயர் வைத்து அழைப்பார்கள் . தமிழாசிரியர் கூட அவனை “ இவன பாருங்கடா , மந்த குளத்துல நீந்துர அயிர மீனை கொத்துரவான...

All about 2025

 2025 சொல் வதற்கு இனிய ஆண்டாக இல்லா விட்டாலும் , வாழ்வின் அர்த்தங்களை புதிய பாதையில் எனக்கு உணர்த்திய ஆண்டு. கடந்த ஆண்டு முழுக்க , முழுக்க என்னை இழந்து கொண்டிருந்தேன் என நினைக்கும் போதே ஆச்சரியமாக இருக்கிறது. சுய தெளிவும், சிந்தனையும் அற்று மற்றவர்களின் சொல் பேச்சை கெட்டு கடந்து வந்திருக்கிறேன் என கடைசியாக தான் புரிந்தது.  என் தனி தன்மையை நான் உணர தவறிய இந்த ஆண்டில் நிறைய பாடங்கள் கிடைத்தன. உடல் ரீதியாக நிறைய பலவீனங்களை சந்தித்து வந்த ஆண்டும் கூட.  என்னை மிகவும் நேசிப்பவர்களுக்காக என் ஆசையை கொஞ்சம் இறக்கி வைத்து விட்டு வரலாம் என தோன்றிய ஆண்டு தான் இது. என் வாழ்வில் முதல் முதலாக காதல் உதிர்த்த ஆண்டும் இது தான். அந்த காதலில் கிடைத்த குதூகலமும் மன மகிழ்ச்சியும் சொல்லி அடங்காதவை. ஆனால் எதுவும் நிலையானது அல்ல என இயற்கை எனக்கு மெதுவாக தான் உணர்த்தியது. யார் மீது குறை கூறி எந்த வித பயனும் இல்லை. என்னை நான் மாற்றி கொள்வதில் தான் எல்லா தீர்வும் இருக்கிறது என மெதுவாக தான் புரிய ஆரம்பித்தது. கடந்த ஆண்டில் நேர்ந்த சம்பவங்களும், துயரங்களும் நம்மை இன்னும் வலிமையான மனிதனாக மாற்றும் ...