முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது பணித்துறையில் பார்ப்பனர்களின் ஆளுமையும் ஆதிக்கமும்!! தாழ்த்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டின் அவசியமென்ன?

 


 
Ambedkar | #Dr ambethkar #Ambedkar #அபேதகர் #சட்டம் ...

 தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் பார்ப்பனர்களின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. இந்தியாவில் உள்ள பெரிய நிறுவனங்களிலும், பெரிய பெரிய பதவிகளிலும் பார்ப்பனர்களை அதிக ஆதிக்கம் செலுத்துகிறார்கள் .இட ஒதுக்கீடுகளை பற்றி அதிகம் பெறுகிறார்கள் எனும் குற்றச்சாட்டு தாழ்த்தப்பட்டவர்கள் மீது வைக்கப்படுகிறது.ஏன் கேட்க வேண்டும் இது தான் காரணம்.
    இந்தியாவில் மட்டும் மொத்தம்  3600  IAS அதிகாரிகள் இருக்கிறார்கள் .அதில்  2,700 IAS அதிகாரிகள் பார்ப்பனர்களாக இருக்கிறார்கள்.இதில் எங்கே சமத்துவம் நிலைநாட்டுகிறது இந்திய அரசு ?
    நமது இந்தியாவில் 3லிருந்து 5% பார்ப்பனர்கள் இருக்கிறார்கள் .அவர்களால் எப்படி 76% IAS அதிகாரிகள் பதவியை வகிக்க முடிந்தது.  மீதமுள்ள 95% பிற்படுத்தப்பட்ட மட்டும் தாழ்த்தப்பட்டசாதியினர் மொத்தமே 680 பதவிகளை வகிக்கிறார்கள்.
   அடுத்தபடியாக கல்வித்துறையில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் இந்தியாவில் மொத்தம் 114 பேர் இருக்கிறார்கள் அதில் 108 பேர் பார்ப்பனர்களாக இருக்கிறார்கள்.மேலும் நீதித்துறையில் 26 பதவிகளில் 23 பதவிகளை பார்ப்பனர்கள் வகிக்கிறார்கள் இந்தியாவில் உள்ள 24 உயர் நீதிமன்றத்தில் 330 நீதிபதிகள் இருக்கிறார்கள். அதில் 306 பேர் பார்ப்பனர்கள் இதில் எங்கே சமூக நீதி நிலைநாட்டப் படுகிறது?  எப்படி ஏழை எளிய மக்களுக்கு நீதி கிடைக்கப் போகிறது?
   மேலும் நமது தமிழகத்தை எடுத்துக் கொண்டாலே ஊடகத்துறையில் அதிகபட்ச நிர்வாகிகள் ஏதாவது 94% பார்ப்பனர்களே நடத்துகிறார்கள் இதில் எங்கே உண்மையான செய்தி வெளிவரப் போகிறது எங்கே நடுநிலை உண்டாக போகிறது அடுத்தபடியாக கார்பெட் நிர்வாகிகள் 100% பார்ப்பனர்களாக இருக்கிறார்கள் இதில் எப்படி  ஏழை எளிய மக்களுக்கான தொழில்முறை அமையப்போகிறது? அவர்களின் வாழ்வாதாரம் உயர போவதெப்படி ?
    இந்த இட ஒதுக்கீடு விஷயத்தில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் இருவருமே இணைந்து நமது கோரிக்கைகளை கேட்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் அது முடியாத பட்சத்தில் நமக்கான உரிமையை எப்போதும் சாணக்கீரை போல் பல சூட்சமங்கள் செய்யத் தெரிந்த பார்ப்பனர்கள் கையையே சேரும் ஒன்றுபடுவோம் தமிழராய் !!!

#party #india #news #makkal #world #tamilnadu


   https://nermai.net/ne…/7602/d482e1933c4f01ef6c35c293293545df

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2024_ஒரு அலசல்

  2024 - இல் நான் மிகப்பெரிய கெஜ புழு..தியாக இருந்தேன். வரும் வருடத்தில் இன்னும் மிகப்பெரிய கெஜ புழு..தியாக மாற போகிறேன். நான் அவ்வொரு ஆண்டு முடியும் போதும் போன வருடத்தை விட இந்த வருடம் சிறப்பாக புழு..தி இருப்பதாக நினைத்து கொள்வதுண்டு. இல்லையென்றால் சில நேரம் என் கீழ்மை குணங்களை அளவிடுவதுண்டு. நான் போன ஆண்டை விட இந்த ஆண்டு எவ்வளவு கீழ்மை குணம் உள்ளவனாக மாறியிருக்கிறேன். எந்த அளவுக்கு என் அல்ப புத்திகள் அரங்கேறியிருக்கிறது என கணக்கிட்டு பார்ப்பேன். நான் ஒரு மகா சோம்பேறி . இலையை போல் தூக்கி ஆற்றில் போட்டால் மிதந்து மிதந்து போவேன். பாறையில் மோதாமல் போகும் சூட்சமும் தெரியும்.என்னை பெரிய பிடுங்கியாக எப்போதும் நினைப்பதில்லை. ஒரு நல்ல இயக்குனரிடம் பணிபுரிய வாய்ப்பு கிடைத்தது . நிறைய கற்றுக் கொள்ள முடிந்தது.  நாம் சாதாரண கடன் கார குடும்பம் என்பதால் சூ..தை கிழிக்கும் சுமை வேறு நம்மை வேட்டையாடுகிறது. எல்லோரையும் போல் நமக்கு எல்லாம் அவ்வளவு இலகுவாக கிடைப்பதில்லை. ஏதோ நெஞ்சில் உரமிருக்க ஓடுகிறோம். உடல் ரீதியாக நிறைய கோளாறுகள் இருக்கிறது. அப்படி பயந்து கொள்ளும் அளவுக்கு ஒன்றுமில்லை தான் பா...

கெடா விருந்து - சிறுகதை

                     கெடா விருந்து    ப ள்ளிக் கூடத்தில் பெல் அடிக்கும் சத்தம் கேட்டது . உடனே எங்கள் வகுப்பில் படர்ந்திருந்த சலசலப்பு மெல்ல மடிந்து பெரும் அமைதி நிலவியது . நான் கடைசி பெஞ்சுக்கு முன்பிருந்த பெஞ்சில் அமர்ந்திருந்தேன் . எங்கள் வகுப்பில் கடைசி பெஞ்சில் அமர்ந்திருக்கும் ஐந்து மாணவர்கள் மட்டும் அழுக்கு அப்பிய சட்டையை அணிந்திருப்பார்கள் . பொதுவாகவே அரசினர் மாணவர் விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்களை மட்டும் எங்கள் வகுப்பில் ஒரு மாதிரியாகத்தான் பார்ப்போம் . அவர்களை பார்த்தாலே “ சொறி சிரங்கு பிடிச்சவங்களா ? போய் கடைசி பெஞ்சுல உக்காருங்கடா ?” என சமூக அறிவியல் ஆசிரியர்  துரத்துவார் . எங்கள் வகுப்பிலுள்ள ஐந்து பேரில் கோகுல் மட்டும் நன்றாக படிப்பான் . அவனை பார்த்தால் ஆறாவது படிக்கும் மாணவர்களை போல் அல்லாமல் உயரத்தில் சற்று பெரிய பையனாக இருப்பான் . அவனை வகுப்பில் எல்லோரும் கொக்கு என்று தான் பட்ட பெயர் வைத்து அழைப்பார்கள் . தமிழாசிரியர் கூட அவனை “ இவன பாருங்கடா , மந்த குளத்துல நீந்துர அயிர மீனை கொத்துரவான...

All about 2025

 2025 சொல் வதற்கு இனிய ஆண்டாக இல்லா விட்டாலும் , வாழ்வின் அர்த்தங்களை புதிய பாதையில் எனக்கு உணர்த்திய ஆண்டு. கடந்த ஆண்டு முழுக்க , முழுக்க என்னை இழந்து கொண்டிருந்தேன் என நினைக்கும் போதே ஆச்சரியமாக இருக்கிறது. சுய தெளிவும், சிந்தனையும் அற்று மற்றவர்களின் சொல் பேச்சை கெட்டு கடந்து வந்திருக்கிறேன் என கடைசியாக தான் புரிந்தது.  என் தனி தன்மையை நான் உணர தவறிய இந்த ஆண்டில் நிறைய பாடங்கள் கிடைத்தன. உடல் ரீதியாக நிறைய பலவீனங்களை சந்தித்து வந்த ஆண்டும் கூட.  என்னை மிகவும் நேசிப்பவர்களுக்காக என் ஆசையை கொஞ்சம் இறக்கி வைத்து விட்டு வரலாம் என தோன்றிய ஆண்டு தான் இது. என் வாழ்வில் முதல் முதலாக காதல் உதிர்த்த ஆண்டும் இது தான். அந்த காதலில் கிடைத்த குதூகலமும் மன மகிழ்ச்சியும் சொல்லி அடங்காதவை. ஆனால் எதுவும் நிலையானது அல்ல என இயற்கை எனக்கு மெதுவாக தான் உணர்த்தியது. யார் மீது குறை கூறி எந்த வித பயனும் இல்லை. என்னை நான் மாற்றி கொள்வதில் தான் எல்லா தீர்வும் இருக்கிறது என மெதுவாக தான் புரிய ஆரம்பித்தது. கடந்த ஆண்டில் நேர்ந்த சம்பவங்களும், துயரங்களும் நம்மை இன்னும் வலிமையான மனிதனாக மாற்றும் ...