முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

யார் இந்த ஜீவானந்தம் இப்படியும் சில தலைவர்களா??



Cultural warrior - Frontline"குடிசை வீட்டில் தங்கியிருப்பதை பார்த்து ஏன் இப்படி தங்கியிருக்கிறீர்கள்?? நீங்கள் எவ்வளவு பெரிய தலைவன் என கேட்டிருக்கிறார் காமராசர். என் மக்கள் இப்படி தானே இருக்கிறார்கள்." என ஜீவா பதில் அளித்துள்ளார்.




ஜீவானந்தம் என்றாலே பொதுவுடமை என்று தான் எல்லாரது நியாபகத்திற்கும் வரும் பொதுவுடைமை தாண்டிய அவரது வாழ்க்கை முறை,தன் மக்களை காக்க போராடிய மனப்போக்கு இப்படிஅவரை பற்றி நிறைய விடயங்களை நாம் பேசிக்கொண்டே போகலாம்.ஒரு மனிதனால் அதுவும் ஒரு ஆகசிறந்த தலைவனால் இப்படியெல்லாம் தமிழகத்தில் வாழ முடியுமா?? என்ற கேள்விக்கு பதில் அளித்துப் போனவர் தான் ஜீவானந்தம்.
ஜீவானந்தம் நாகர்கோயிலை அடுத்த பூதப்பாண்டி என்ற ஊரில் கிராமத்தில் 1907ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21ஆம் தேதி, பட்டத்தார் பிள்ளை - உமையம்மாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார். பெற்றோர் இட்டபெயர் சொரிமுத்து. ஐயனார் என்ற கிராம தெய்வத்தின் பெயர்தான் சொரிமுத்து.தனது பள்ளிக் காலத்தில் இவர் காந்தியடிகள் மீது அளவற்றப் பற்றுக் கொண்டிருந்தார். அவரது சிறுவயதில் காந்தியும் கதரும் என்ற பெயரில் கவிதையும் எழுதினார்.
சிறு வயதிலேயே குடும்பத்தை விட்டு பிரிந்த தன்னுடைய இளமைகாலத்தில் குருகுலத்தில் ஆசிரியராக பணியாற்றினார்.அப்போது காங்கிரஸ் கட்சியில் இருந்த இவர் தனது நண்பராக ஈ வே ரா பெரியாரை ஏற்றுக்கொண்டார்.பெரியாரின் சுயமரியாதை இயக்கத்திலும் இவருக்கு ஈடுபாடு இருந்தது.சாதிய ஒடுக்கு முறைக்கு எதிராக இவர் நடத்தியப் போராட்டங்களால் கைது செய்யப்பட்டார்.
சிறையில் இருந்த அவர் கம்யூனிச கோட்ப்பாடுகள் கொண்ட நூல்களை வாசிக்கத் துவங்கினார்.அப்போது தான் பகத்சிங் தூக்கிலிடப்பட்டார். இந்த சம்பவம் இவரை மிகவும் பாதித்தது. சிறையில் இருந்து கொண்டே பகத்சிங் எழுதிய நான் ஏன் நாத்திகன் ஆனேன் எனும் நூலை தமிழில் மொழிப்பெயர்த்தார்.இதனை பெரியார் வெளியிட்டார்.சிறை வாசம் முடிந்து வெளிவந்த இவர் ஒரு முழு பொதுவுடைமை வாதியாக மாறினார். அவர் பல தொழிலாளர்கள் புரட்சியில் பங்கு பெற்றார்.தனது வாழ்நாளின் மீதிப்பாதியில் அவர் அரசியலில் காங்கிரஸ் கட்சியை எதிர்த்தார்.ஆனால் இவருக்கும் காமராசருக்கும் நல்ல நட்பு இருந்தது. ஒரு முறை ஜீவானந்தம் சரிசெய்த பள்ளி ஒன்றுக்கு திறப்பு விழாவிற்க்கு காமராசர் வந்திருக்கிறார். அப்போது ஜீவானந்ததை சந்திக்க சென்ற முதல்வர், ஜீவா ஒரு குடிசை வீட்டில் தங்கியிருப்பதை பார்த்து
ஏன் இப்படி தங்கியிருக்கிறீர்கள்?? நீங்கள் எவ்வளவு பெரிய தலைவன் என கேட்டிருக்கிறார் காமராசர்.
 என் மக்கள் இப்படி தானே இருக்கிறார்கள். என ஜீவா பதில்    அளித்துள்ளார்.
பள்ளி திறப்பு விழாவிற்கு அவரை அழைத்துவிட்டு விழாவில் காத்திருக்கிறார். ஆனால் இவர் ஒரு மணிநேரம் தாமதமாக வந்திருக்கிறார்.ஏன் தாமதம் என அவரிடம் கேட்டதற்கு என்னிடம் ஒரு சட்டை தான் உள்ளது அதை துவைத்துக் காய வைத்துப் போட்டுவர நேரம் ஆகிற்று.என பதில் அளித்துள்ளார்.
இப்படி மக்களுக்காகவே தன்னை அற்பணித்து வாழ்ந்து வந்த ஒரு சிறந்த மனிதனை ஒரு கட்சியின் தலைவனாக சித்தரித்து ஒதுக்குவது மிகவும் வேதனை தரக்கூடிய விசயமாக கருதப்படுகிறது.
#jeevanantham#communist #tamilnadu #party
https://nermai.net/news/6748/627801d98dd6e952d56df208da0dccff

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2024_ஒரு அலசல்

  2024 - இல் நான் மிகப்பெரிய கெஜ புழு..தியாக இருந்தேன். வரும் வருடத்தில் இன்னும் மிகப்பெரிய கெஜ புழு..தியாக மாற போகிறேன். நான் அவ்வொரு ஆண்டு முடியும் போதும் போன வருடத்தை விட இந்த வருடம் சிறப்பாக புழு..தி இருப்பதாக நினைத்து கொள்வதுண்டு. இல்லையென்றால் சில நேரம் என் கீழ்மை குணங்களை அளவிடுவதுண்டு. நான் போன ஆண்டை விட இந்த ஆண்டு எவ்வளவு கீழ்மை குணம் உள்ளவனாக மாறியிருக்கிறேன். எந்த அளவுக்கு என் அல்ப புத்திகள் அரங்கேறியிருக்கிறது என கணக்கிட்டு பார்ப்பேன். நான் ஒரு மகா சோம்பேறி . இலையை போல் தூக்கி ஆற்றில் போட்டால் மிதந்து மிதந்து போவேன். பாறையில் மோதாமல் போகும் சூட்சமும் தெரியும்.என்னை பெரிய பிடுங்கியாக எப்போதும் நினைப்பதில்லை. ஒரு நல்ல இயக்குனரிடம் பணிபுரிய வாய்ப்பு கிடைத்தது . நிறைய கற்றுக் கொள்ள முடிந்தது.  நாம் சாதாரண கடன் கார குடும்பம் என்பதால் சூ..தை கிழிக்கும் சுமை வேறு நம்மை வேட்டையாடுகிறது. எல்லோரையும் போல் நமக்கு எல்லாம் அவ்வளவு இலகுவாக கிடைப்பதில்லை. ஏதோ நெஞ்சில் உரமிருக்க ஓடுகிறோம். உடல் ரீதியாக நிறைய கோளாறுகள் இருக்கிறது. அப்படி பயந்து கொள்ளும் அளவுக்கு ஒன்றுமில்லை தான் பா...

கெடா விருந்து - சிறுகதை

                     கெடா விருந்து    ப ள்ளிக் கூடத்தில் பெல் அடிக்கும் சத்தம் கேட்டது . உடனே எங்கள் வகுப்பில் படர்ந்திருந்த சலசலப்பு மெல்ல மடிந்து பெரும் அமைதி நிலவியது . நான் கடைசி பெஞ்சுக்கு முன்பிருந்த பெஞ்சில் அமர்ந்திருந்தேன் . எங்கள் வகுப்பில் கடைசி பெஞ்சில் அமர்ந்திருக்கும் ஐந்து மாணவர்கள் மட்டும் அழுக்கு அப்பிய சட்டையை அணிந்திருப்பார்கள் . பொதுவாகவே அரசினர் மாணவர் விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்களை மட்டும் எங்கள் வகுப்பில் ஒரு மாதிரியாகத்தான் பார்ப்போம் . அவர்களை பார்த்தாலே “ சொறி சிரங்கு பிடிச்சவங்களா ? போய் கடைசி பெஞ்சுல உக்காருங்கடா ?” என சமூக அறிவியல் ஆசிரியர்  துரத்துவார் . எங்கள் வகுப்பிலுள்ள ஐந்து பேரில் கோகுல் மட்டும் நன்றாக படிப்பான் . அவனை பார்த்தால் ஆறாவது படிக்கும் மாணவர்களை போல் அல்லாமல் உயரத்தில் சற்று பெரிய பையனாக இருப்பான் . அவனை வகுப்பில் எல்லோரும் கொக்கு என்று தான் பட்ட பெயர் வைத்து அழைப்பார்கள் . தமிழாசிரியர் கூட அவனை “ இவன பாருங்கடா , மந்த குளத்துல நீந்துர அயிர மீனை கொத்துரவான...

All about 2025

 2025 சொல் வதற்கு இனிய ஆண்டாக இல்லா விட்டாலும் , வாழ்வின் அர்த்தங்களை புதிய பாதையில் எனக்கு உணர்த்திய ஆண்டு. கடந்த ஆண்டு முழுக்க , முழுக்க என்னை இழந்து கொண்டிருந்தேன் என நினைக்கும் போதே ஆச்சரியமாக இருக்கிறது. சுய தெளிவும், சிந்தனையும் அற்று மற்றவர்களின் சொல் பேச்சை கெட்டு கடந்து வந்திருக்கிறேன் என கடைசியாக தான் புரிந்தது.  என் தனி தன்மையை நான் உணர தவறிய இந்த ஆண்டில் நிறைய பாடங்கள் கிடைத்தன. உடல் ரீதியாக நிறைய பலவீனங்களை சந்தித்து வந்த ஆண்டும் கூட.  என்னை மிகவும் நேசிப்பவர்களுக்காக என் ஆசையை கொஞ்சம் இறக்கி வைத்து விட்டு வரலாம் என தோன்றிய ஆண்டு தான் இது. என் வாழ்வில் முதல் முதலாக காதல் உதிர்த்த ஆண்டும் இது தான். அந்த காதலில் கிடைத்த குதூகலமும் மன மகிழ்ச்சியும் சொல்லி அடங்காதவை. ஆனால் எதுவும் நிலையானது அல்ல என இயற்கை எனக்கு மெதுவாக தான் உணர்த்தியது. யார் மீது குறை கூறி எந்த வித பயனும் இல்லை. என்னை நான் மாற்றி கொள்வதில் தான் எல்லா தீர்வும் இருக்கிறது என மெதுவாக தான் புரிய ஆரம்பித்தது. கடந்த ஆண்டில் நேர்ந்த சம்பவங்களும், துயரங்களும் நம்மை இன்னும் வலிமையான மனிதனாக மாற்றும் ...