
இஸ்லாமிய மதத்தில் துறவை மேற்கொள்ள விரும்புபவர்களுக்காக உருவாக்கப்பட்டதே சூபித்துவம் எனப்படுகிறது. ஒரு ஆன்மா தன்னை துறந்து ஒரு இறை நிலையை தேடுவது தான் சூபி என்கிறார்கள். இது எல்லா மதத்திற்க்கும் பொதுவான ஒரு நிலை பாடு தான் . எல்லா மதத்திலும் இது மாதிரியான ஒரு துறவு நிலை சார்ந்த சாத்தியகூறுகள் நிறைய உள்ளன. ஆனால் இஸ்லாமியத்தை பொருத்த வரை எந்த வகை கற்பித்தலும் இல்லாமல் தன்னை இழந்து ஒரு வகை சுயத்தை அடைதல் தான் சூபி ஆவாதற்கான முதல் தகுதியாக கருதப்படுகிறது.

கிரேக்கர்கள் தான் இந்த தத்துவத்தை உருவாக்கினர் என இஸ்லாமியர்கள் பலர் குற்றம் சாட்டுகின்றனர்.பல மதங்களின் நல்லொழுக்கங்களை வகுத்து ஒரு சேர உருவாக்கப்பட்டது சூபிசம் என்பது அவர்கள் கருத்து. ஒரு சூபி தனது வாழ்நாள் முழுதும் தன் ஆசைகளை துறந்து கடவுளை உணருகிற ஒரு நிலையை அடைகிறான்,சூபிகள் பொதுவாக இசை , நடனம் , கவிதைகள் , கதைகள் என பல வழிகளில் இந்த உலகிற்கு பல நல்ல கருத்துகளை போதிக்கின்றனர். பாரசிக நாட்டின் கவிஞரான ரூமி பல கவிதைகள் மூலம் சூபிசத்தை போதிக்கிறார். அவர் கூறமுற்படும் முக்கியமான தத்துவம் நம்மை துறப்பது , நம் மத அடையாளங்கள், எல்லாவற்றையும் துறந்து அன்பால் அனைவரும் இணைய வேண்டும் என்பதை அவை கூறுகின்றன.
சூபி இசை என்பது நம் ஆன்மாவை தொடக்கூடிய ஒரு பேரன்பான இசை. ஒரு இசையோ , கவிதையோ நம் ஆன்மாவோடு உரசி பல உணர்வு கிளர்ச்சிகளை உண்டாக்கிறது என்றால் அது சூபித்துவம் என்கிறார்கள். உண்மையில் கடவுள், வழிபாடு, மதம் இவை அத்தனையும் கடந்து நம் மனதை பாதிக்க கூடிய இசை வடிவம் எதுவாக இருந்தாலும் அவை அடுத்த தலைமுறைக்கு தக்கவடிவில் கொண்டு சேர்க்கப்பட வேண்டும். மனிதனின் ஆன்மாவை தொட்டு உறவாடக்கூடிய ஒரு இசை ஏன் இப்போது கவனிப்பாரற்று போனது. அதற்கு காரணம் மதம் தான். இஸ்லாமிய மதத்திற்கான இசையாக அவை கணிக்கப்படுகிறது, அவை இஸ்லாமியற்க்கானது நாம் கேட்ககூடாது, என்பது போன்ற பல கருத்துகள் நம்மிடம் விரவி உள்ளது . உண்மையில் இப்படிப்பட்ட இசையை கொண்டாடாமல் இருப்பதற்காக நாம் வெக்கப்பட்டுதான் ஆக வேண்டும்.இந்தியாவின் இசை கலைஞர் ஏ.ஆர். ரகுமான் தன்னால் முடித்த வரை சூபி இசையை சில பாடல்கள் மூலம் பயன்படுத்துகிறார். இன்றும் நாகூர் போன்ற சில முக்கியமான் ஊர்களில் சூபிகள் வாழ்கிறார்கள்.அவர்களின் இசையும் அங்கே பெருமளவில் கேக்கப்பட்டுகொண்டே தான் இருக்கிறது. இசை சாதி மத பேதமன்று மனிதர்களுக்கானது என்பதை நாம் உணர வேண்டும். இசை போதிக்கும் ஒரு உணர்வு தான் முக்கியமானதே ஒழிய அது வந்த மதம் அல்ல என்பதை அறிந்து அவற்றை கேட்டு ரசிப்போம்.
-சிபி சரவணன்
கருத்துகள்
கருத்துரையிடுக