சூழலியல்.
சூழலியல் என்பது மனிதம் சார்ந்தல்ல.அது உலக உயிரிகளின் பாதுக்காப்பு.இயற்கையை மிஞ்சிய வாழ்வியல் தற்கொலைக்கு நிகரானது.அப்படி தன்னை தானே வகுத்துக்கொண்டு இங்கே மனிதன் போராடிக் கொண்டிருக்கிறேன்.வெறுமென பாதாகைகளைத் சுமந்து கொண்டு போராடுவதால் அதற்கு கதவுகள் திறந்துவிடாது.
தனிமனிதனின் தினச் செயல்பாடுகளே சுற்றுச்சூழலை காக்க பெரும் பங்கு வகுக்கின்றன.நகரமயமாக்கலில் விஞ்ஞானத்தில் தான் எல்லாமே என்று எல்லாரும் விஞ்ஞானத்தை தொங்கிக் கொண்டிருக்கிறோம்.
ஒரு கிராமத்தின் வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சியை தீர்மானிக்கிறது என்கிறோம்.அது முற்றிலும் உண்மை.கிராமங்களில் படித்த இளைஞர்கள் எல்லாரும் பெட்டிப்படுக்கையோடு நகரத்தில் வந்து குவிந்துவிடுகிறோம்.ஒரு குக்கருக்குள் எவ்வளவு சோறை வைத்து வேக வைக்க வேண்டும் என்ற கணக்கு இருக்கிறது அல்லவா.அதை நாம் புரிந்து செயல்படல் வேண்டும்.இயற்கையை அனாதையாக விட்டுவிட்டு நகரத்தில் குவிந்து கொஞ்சமாய் தூய்மையாக இருக்கும் நகரத்தையும் அசுத்தமாக்கிவிடுகிறோம்.எண்ணற்றத் தொழிற்சாலைகளின் கழிவுகள் ஒரு பக்கம் என்றால் மறுபக்கம் வாகனப் புகை.அதிக அளவில் வாகன பயன்பாட்டினால் உண்டாகும் மாசு என்பது ஓசோனுக்கு மட்டுமல்ல,மனிதனின் நுரையீரலுக்கும் நல்லதல்ல.அதைத்தான் செய்து கொண்டிருக்கிறோம்.
அங்கே கிராமங்களில் படிக்காத விவசாயிகளிடம் நிலத்தை பாதிக்ககூடிய அதிக கெமிக்கல் நிறைந்த மருந்துகளை விளைபயிர்களுக்கு தந்து மண்ணைக் கெடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.மண்ணில் உள்ள தாதுஉப்புகளே தாவரத்தின் வளர்ச்சிக்கான சக்தியை கொண்டிருக்கும் போது இந்த செயல்பாடு விளை நிலங்களை பாழாக்கிக் கொண்டிருக்கிறது.பசுமை புரட்சிக்கு பின்பான இந்த மாற்றத்தால் அதிக மகசூலை எதிர்பார்த்து செய்யும் இந்த சதிச்செயல்களால் வளம் என்பதே வாசனையற்று போய்விட்டது.இதனை எல்லாம் தெரிந்த இயற்கை விவசாயத்தைப் பற்றிய அறிவுள்ள இளைஞர்களோ இதோ இந்த நகரத்தில் கார்ப்ரேட் காரர்களின் சொல்லுக்கு தலையாட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
நம் கிராமங்களின் சுற்றுச்சூழல் பாதுகாப்பிலிருந்தே நமக்கான சுத்தமான தேசத்தின் சூற்றுப்புற பாதுகாப்பின் துவக்கப்புள்ளி துவங்கிறது.அதன் பின் நம் அரசாங்கத்தின் சதிச்செயல்களை அப்புறம் போராடிக்கொள்ளலாம்.நம்மை சுற்றி நடக்கும் தீய செயல்களை எதிர்த்து நம்மை காத்துக்கொள்ளலே சுற்றுப்புறத்தையும் காக்கும்
என்பதில் எந்த வித மாற்றுக் கருத்தும் இல்லை என்பதே உண்மை.அதை உணர்ந்து செயல்பாட்டால் மாற்றம் தன்னாலே நடக்க துவங்கிவிடும்.

கருத்துகள்
கருத்துரையிடுக