
நூலின் பெயர் : சகி
பெண்மை என்பது இந்த உலகின் உன்னத உயிரி .ஆண்களின் பார்வையில் அவை வெவ்வேறு விதமாக யுகிக்கபடுகிறது. சிலர் பெண்களை உடலாகவும் சிலர் வேலை செய்யும் இயந்திரமாகும்,சிலர் தெய்வமாகவும் சித்தரிக்கிறார்கள்.
ஒவ்வொரு ஆணும் அவன் வளர்ந்த விதத்தை பொறுத்து இவை மாறுபடுகிறது. கரிசல் காட்டில் வேலை செய்யும் பெண்கள் முதல் கம்யூட்டரில் வேலைசெய்யும் பெண்கள் வரை உடையில் வேண்டுமானாலும் மாறுதல் ஏற்பட்டிருக்கலாம் ஆனால் ஆண்கள் அவர்களை பார்க்கும் விதத்தில் எந்தவித மாறுதலும் ஏற்படவில்லை.பெண்கள் உள்ளுணர்வை புரிந்து கொள்ளும் ஆண்கள் மிகக் குறைவாகவே உள்ளனர் . அப்படியான ஆண்கள் அறிந்த, அறிந்திராத சில பெண்களின் வலிகளை கவிதை மொழியில் கதை ஆக்குவதே இந்தப் படைப்பின் முயற்சி. கரிசல் மண்ணின் வட்டார மொழியில் கதையை நகர்த்தி இருக்கிறேன். பெண்களோடு பிறக்காத நான் பெண்களை இந்த சமூகம் சித்தரித்த கோணத்தில் தான் கவனித்திருக்கிறேன். ஆனால் இலக்கியமும் சில அனுபவங்களும் அதனை வேறு வகையில் எனக்கு பிரதிபலித்தன. அந்த பிரதிபலிப்பை அவர்களின் உணர்வை இன்னொரு ஆணுக்கு கடத்துவதை இந்த படைப்பின் நோக்கம்.
வெளியீடு : அமேசான் கிண்டில்
கருத்துகள்
கருத்துரையிடுக