2024- இல் நான் மிகப்பெரிய கெஜ புழு..தியாக இருந்தேன். வரும் வருடத்தில் இன்னும் மிகப்பெரிய கெஜ புழு..தியாக மாற போகிறேன். நான் அவ்வொரு ஆண்டு முடியும் போதும் போன வருடத்தை விட இந்த வருடம் சிறப்பாக புழு..தி இருப்பதாக நினைத்து கொள்வதுண்டு. இல்லையென்றால் சில நேரம் என் கீழ்மை குணங்களை அளவிடுவதுண்டு. நான் போன ஆண்டை விட இந்த ஆண்டு எவ்வளவு கீழ்மை குணம் உள்ளவனாக மாறியிருக்கிறேன். எந்த அளவுக்கு என் அல்ப புத்திகள் அரங்கேறியிருக்கிறது என கணக்கிட்டு பார்ப்பேன். நான் ஒரு மகா சோம்பேறி . இலையை போல் தூக்கி ஆற்றில் போட்டால் மிதந்து மிதந்து போவேன். பாறையில் மோதாமல் போகும் சூட்சமும் தெரியும்.என்னை பெரிய பிடுங்கியாக எப்போதும் நினைப்பதில்லை. ஒரு நல்ல இயக்குனரிடம் பணிபுரிய வாய்ப்பு கிடைத்தது . நிறைய கற்றுக் கொள்ள முடிந்தது.
நாம் சாதாரண கடன் கார குடும்பம் என்பதால் சூ..தை கிழிக்கும் சுமை வேறு நம்மை வேட்டையாடுகிறது. எல்லோரையும் போல் நமக்கு எல்லாம் அவ்வளவு இலகுவாக கிடைப்பதில்லை. ஏதோ நெஞ்சில் உரமிருக்க ஓடுகிறோம். உடல் ரீதியாக நிறைய கோளாறுகள் இருக்கிறது. அப்படி பயந்து கொள்ளும் அளவுக்கு ஒன்றுமில்லை தான் பார்ப்போம். அசைய முடியாத ஸ்டீஃபன் ஹாக்கிங் பிரபஞ்சத்தை கணக்கிட்டு கொண்டிருக்கும் போது நமக்கென்ன கேடு. இலக்கியத்தை பொறுத்தவரை நக்கி பிழைக்க தெரியவில்லை என சொல்லலாம். இலக்கியம் மட்டுமா எல்லா இடத்திலும் தான். ஒன்று பேசாமல் இருப்பது.இல்லை பேசி கொண்டு இருப்பது. ஒன்று மட்டும் என் அவதானிப்பில் உண்மை. இலக்கியம் வாசித்து கொண்டே இருக்க என் வெகுளித்தனத்தையும், நகைச்சுவை உணர்வையும் தொலைத்திருக்கிறேன். இங்கே ஆண்டின் முடிவில் நம் குறைகளை நாம் பந்தியிட்டு படையல் போட்டால் தான் மனது ஆரும். நான் அவ்வளவாக மனிதர்களோடு சகஜமாக பழக தகுதியில்லாத வஸ்து என்பதால் , எனக்கு நெருக்கமான சில மனிதர்களை சம்பாதித்து இருக்கிறேன். எந்த சூழ்நிலையிலும் மனிதர்களிடம் பொய்யாக மட்டும் நடித்து பேச கூடாதென தெளிவாக இருப்பேன்.
அதனாலோ என்னவோ மனிதர்களை தூரத்தில் இருந்து ரசித்து விட்டு கடந்து விடுவது. இந்த ஆண்டு திட்டங்கள் எல்லாம் எடுக்கும் பழக்கம் இல்லை.வழக்கம் போல என் இருப்புக்கு நானே காரணம் என்ற ஞான தெளிவுடன் இயங்க முயல்வேன். ஒன்றே ஒன்றை மட்டும் சொல்லி கொள்ள விரும்புகிறேன். இந்த ஆண்டின் என் ஆக சிறந்த வழிகாட்டிகளாக ஓஷோவும், ஜே.கே வும் என்னை மென்மைபடுத்தினார்கள். மற்றபடி எப்போதும் போல இந்த ஆண்டும் சூ..தில் சுண்ணாம்பு அடிபட்ட ஆண்டு தான். ஆனால் என்ன கற்றுக்கொள்ள நிறைய சூழல் இருந்தது.
என் குறைகளுக்கு நான் உண்மையாக இருந்து அவற்றிலிருந்து விலக வேண்டும் அவ்வளவு தான் இந்த ஆண்டின் குறிக்கோள்..
கருத்துகள்
கருத்துரையிடுக