அந்த இருள் அவ்வளவு இலகுவாக இருந்திருக்க வேண்டும் பௌர்ணமி இருளைத் தின்று உடல் கூசும் மெல்லிய ஒளியை எங்கும் பரப்பியது. தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் அதிவேகத்தில் சீறின. பெட்ரோல் பங்கை ஓட்டிய சாலையோரத்தில் முழு சிரிப்போடு மையில் கல்லை போல ஒருத்தி நின்றிருந்தாள். பாவப்பட்டு உருகி வழியும் முகவாகு, கூர்மையான கண்கள் , வகிடெடுத்து சீவிய முடி தோல் மீது சர்பமாய் வீற்றிருக்கும் மல்லிகை பூ. அந்த இருளிலும் சிலுசிலுக்கும் ஜிகினா போட்ட சேலை . முந்தானையை படபடப்போடு நோண்டிக் கொண்டிருக்கும் கைகள். சாலையின் இடதும் வலதும் அவளது கண்கள் மாறி,மாறி பயணப்பட்டன. பயத்தைப் போக்க வாய் நிறைய வெற்றிலை போட்டு மென்று கொண்டே நின்றிருந்தாள். மஞ்சள் கலர் நம்பர் பிளேட் போட்ட வெள்ளைக் காரொன்று மெல்ல ஊர்ந்து வந்து நின்றது.வண்டியிலிருந்தவன் கார் கண்ணாடியை இறக்கி அவளை பார்த்தான்.அவன் விழிகளில் நிறைந்திருந்த தூய்மை அவனை நம்பி வண்டியில் ஏறலாம் என அவளுக்கு தோன் றியது. எதுவும் பேரம் பேசாமல் வண்டியில் ஏறி உட்கார்ந்தாள்.வண்டி மெல்ல ஊர்ந்த...
writter அஞர் நாவல் - வர டீ பதிப்பகம் வெளியீடு https://www.commonfolks.in/books/d/angar