“நான் இறப்பது நிச்சயம். இறந்ததும் வானத்திலிருந்து நமது இலட்சியத்திற்காக உழைப்பேன் ”என்ற தீலிபன் வைத்த கோரிக்கைகள்!!
தமிழீழத்தின் விடுதலைக்காக ஒரு தலைவன் உண்ணா நோன்பிருந்து உயிர் துறந்தான். அவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் பார்த்திபன். இயக்கம் தந்த பெயர் திலீபன். ஆம், பெயரின் மூலம் சாதி, மதம், பிராந்தியம் அறிந்து அதன் மூலம் சிறு பிரிவு ஏற்படா வண்ணம், தமிழ்ப்பெயர் சூட்டிக்கொள்ளும் கட்டுப்பாடும் ஒழுக்கமும் நிறைந்ததொரு இயக்கத்தின், பிராந்திய அரசியல்துறை பொறுப்பாளன். உண்ணா நோன்பு என்றாலே நகைப்புக்குரிய ஒன்றாக மாறிவிட்ட இக்காலச் சூழலில், கொண்ட கொள்கைக்காக சொட்டு நீர் அருந்தாமல் உயிர் துறந்து, உலகத்தின் செவிப்பறைகளில் உண்ணா நோன்பின் மகத்துவத்தை ஓங்கி ஒலிக்க செய்த போராளி.
1980களில் இலங்கை மகாணத்தில் தமிழ் இனத்தவர் தங்களது விடுதலைக்காக
அகிம்சை வழியை துறந்து போராட்டத்தை கையிலெடுத்த காலமது. அப்போது சிங்களர்களுக்கும்
, தமிழர்களுக்கும் அமைதி உடன்படிக்கை செய்து வைக்கிறேன் என இந்திய அரசு இலங்கைக்குள்
அமைதிபடையை அனுப்பியது. அப்போது இலங்கை வந்த இந்திய ராணுவம் தமிழர்களை ஒவ்வொன்றாக அடக்குமுறைக்கு
ஆட்படுத்தியது . இதனை எதிர்த்து திலிபன் காந்தியின் தேசத்தவர்களுக்கு காந்தியின் வழியில்
போராடினால் தான் சரியாக வருமென காந்திய வழியில் உண்ணா நோம்பை செய்ய முடிவெடுத்தார்.
அதுவும் ஒரு துளி நீரை கூட குடிக்காமல் தன் இன்னுயிரை பணயம் வைத்து
திலீபன்
முன்வைத்த
ஐந்து கோரிக்கைகள்
1). மீளக்குடியமர்தல் என்ற பெயரில் இலங்கைத்தீவின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் புதிதாக திட்டமிடப்படும் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்தவேண்டும்.
2). சிறைக் கூடங்களிலும் இராணுவ பொலிஸ் தடுப்பு முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியற் கைதிகள் யாவரும் விடுதலை செய்யப்படவேண்டும்.
3). அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும்.
4). ஊர்காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முற்றாகக் களையப்படவேண்டும்.
5). தமிழர் பிரதேசங்களில் புதிதாக பொலிஸ் நிலையங்களைத் திறப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்பட வேண்டும்.
“கோரிக்கை நிறைவேறும்வரை உண்ணாவிரதம் இருப்பேன். ஒரு சொட்டு தண்ணீர்கூட குடிக்க மாட்டேன். மருத்துவப் பரிசோதனை செய்யக் கூடாது. நான் உணர்வு இழந்தபிறகும் வாயில் தண்ணீர் ஊற்றக் கூடாது. இறக்கும் வரை எந்தவிதமான சிகிச்சையும் அளிக்கக் கூடாது”
இது
தான் உண்ணாவிரததிற்க்கு முன்பாக தீலீபன் வைத்த கோரிக்கை
முதல் நாளில் ஈழ மக்கள் கூடி நின்றிருந்தார்கள். அவர்களது உள்ளம் உணர்ச்சிக் கொந்தளிப்பில் இருந்தது. திலீபன், உண்ணாவிரத மேடைக்குச் சென்றார்.மேடை ஏறும் முன் ஒரு வயதான அம்மா திலீபனுக்கு ஆரத்தி எடுத்து திருநீறு பூசி விடுகிறார்.சரியாக 9.45க்கு திலீபன் மேடையில் அமர்ந்தார் . உண்ணா விரதம் எதற்காக ஆரம்பிக்கப்பட்டது.
கடைசி நாள் திலீபனின் உடல் நிலை மிகவும் மோசமாகி விட்டது. மனிதனுக்கு சராசரியாக இருக்க வேண்டிய நாடித் துடிப்பு நிமிடத்திற்கு 72 . திலீபனின் நாடித் துடிப்பு நிமிடத்திற்கு 52.சாதாரண ரத்த அழுத்த அளவு (120/80) இருக்க வேண்டும். ஆனால் திலீபனின் நாடித் துடிப்பு (80/50). தனது சக்தி முழுவதையும் திரட்டி திலீபன் இரண்டு வரி பேசினார் “நான் இறப்பது நிச்சயம். அப்படி இறந்ததும் வானத்திலிருந்து என் தோழர்களுடன் சேர்ந்து நமது இலட்சியத்திற்காக உழைப்பேன் ” . மக்களின் போராட்டம் அதிகரித்தது பல்வேறு ஊர்களில் மக்கள் அடையாள உண்ணாவிரதத்தில் அமர்ந்தார்கள். 6000 மாணவ மாணவிகள் அழுத கண்களும் சிந்திய மூக்குமாக ஊர்வலமாக வந்து நல்லுர் மைதானத்தை நிறைத்தனர். அந்த இரவு அழுதுகொண்டே விடிந்தது.தொடர்ந்து இரு நூற்றி அறுபத்தி ஐந்து மணி நேரம் ஒரு சொட்டுத் தண்ணீரும் ஒரு பருக்கை உணவும் இல்லாமல் தனது திடமான கோரிக்கையை மட்டும் நெஞ்சில் வைத்திருந்த வீரன் சரியாக காலை 10.58 க்கு வீர மரணம் அடைந்தான்.அதிகாரத்துவம் அவனை சாகவிட்டுவிட்டது. ஆனால் அதுவே பெரும் கிளர்ச்சியாக உருவெடுத்தது. மீண்டும் அந்த மக்களை ஆயுதம் தங்கிய போராட்டத்திற்கு வழி வகுத்தது .

கருத்துகள்
கருத்துரையிடுக