முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

கவிதை -பகத்சிங்

ஜாலியன் வாலாபாத்தின் ரத்த மண்ணை என் கைகளால் நான் சுமந்திருக்கலாம்.. பால்யத்தில் மார்க்சிய மாத்திரைகளை முழுங்கி வளர்ந்திருக்கலாம்... எங்கள் தெருவில் துரைமார்களி...

புணர்குறி

<#> நகத்தின் சிறிய சந்தில் நுழைக்கபட்ட ஊசியாய் இலக்கண மற்ற புணரில் அவளின் யோனிமொட்டில்  தடுத்தல்களை எரித்து தயையின்றி  நுழையும் அந்த பெருத்த அம்பு நகப்பிராண்டல...

பெரி யார் ஏன் கடவுள் எதிர்ப்பாளர் ஆனார் ?

     பெரியாரை வெறும் கடவுள் எதிர்பாளாராகத்தான் இங்கு பெரும்பாலானோர் தெரிந்து வைத்திருக்கிறார்கள்.அதனால் சில மதவாதிகள் அவரை ஏளனமாக பேசுகிறார்கள்.அதற்கெல்லாம் அவர் அஞ்சியவரும் இல்லை.ஈரோட்டில் நல்ல குலத்தில் பிறந்து தன் பால்யத்தில்   நடந்த சில சாதிய தீண்டாமை கொடுமைகளை எதிர்த்து போராட துவங்கிய நீள்தாடி காரர் அவர்.உலக தத்துவாதிகளை படித்த பகுத்தறிவு பெற்ற எவன் என்ன சொன்னாலும் தான் செய்வதை செய்து கொண்டிருந்தவர்.அவரின் பெண் ஏன் அடிமையானாள் எனும் நூலை வாசித்திருந்தால் பெண்களின் மீதான ஆண்களின் புரிதலை உணர முடியும்.அந்த நூல் தமிழுக்கு பெரும் வர பிரசாதம் எனக்கூட சொல்லலாம்.வைக்கம் போராட்டத்தில் தனக்கான தீண்டாமை கொள்கையை முன்னிறுத்தி செயல்பட்டவர்.அவர் பேசும் போதும் "வெங்காயம்" என்ற வார்த்தையும்,எழுதும் போதும் "நிற்க" என்ற வார்த்தையும் அதிகம் உபயோகிப்பதுண்டு.தாழ்த்தப்பட்ட மனுதனுக்காக தன் சிந்தனையை உழைப்பை தூவியதால் மனிதனை உயர்த்தும் ஜென்மமாக இருப்பதால் அவரை பெரியார் என்கிறோம்.தான் வாழ்வின் கடைசி காலத்தில் மூத்திர பையை சுமந்து மேடையில் பேசி பாவப்பட்ட ஜீவன்களுக்காக போராடி...

கவிதை

உங்களை போல எனக்கும் இன்னொரு என் உண்டு.. கோர வதனம் அதனின் இயல்பு… சரீரத்தின் அசைவுகளை வழி மாற்றும் உத்தி அதற்குண்டு… விழிகளின் 180 யை 360 ஆக சுழற்றிவிட்டு சிலாகிக்கும் .. ...

குற்றமும் தண்டனையும்

            குற்றமும் தண்டனையும் மனிதனின் அக மனதை சோதித்து பார்க்கும் ஒரு நாவல்.ரஷ்யாவின் புகழ்பெற்ற எழுத்தாளர் தஸ்கோயோவஸ்கி எழுதியது.சுமார் 600 பக்கங்ஙளை கொண்ட இந்த பெரிய நாவலை நான் படிக்க ஐந்து நாளாயிற்று. கதையின் நாயகன் ரஸ்கொல்நிகோவ் சாதாரண குடும்பத்தில் பிறந்தவன்.       படிப்புக்காக பீட்டர்ஸ்பெர்க் நகரில் தங்கி இருப்பவன்.குடும்ப சூழ்நிலை காரணமாக அவன் படிப்பு தடைகிறது.தனது சுய செலவுக்காக அவனின் உடைமைகளை அடகு வைக்கிறான்.அப்படி அவன் அந்த செயலை செய்யும் அடகுபொருளை வாங்கி வைக்கும் நாசகார கிழவியை அவனுக்கு பிடிக்கவில்லை.மேலும் அங்கு உள்ள பொருளை அவன் திருட வேண்டுமென தோன்றுகிறது.திடிரென ஒரு நாள் அந்த கிழவியை கோடாரியால் கொன்றுவிட்டு மேலும் உடனிருந்த கிழவியின் அப்பாவி தங்கையும் கொன்று நகையை எடுத்து தப்பிக்கிறான்.இந்த கொலைக்கு பின்பான அவன் மனநிலை,தான் செய்தது சரி தான் என அவனுக்குள் அவன் உருவாக்கி வைத்திருக்கும் கொள்கை மேலும் எப்படி இவர்களிடமிருந்து தப்பிப்பது என்பது பற்றிய பல குழம்பிய சிந்தனையோடு மனதை துன்புறுத்திக்கொள்ளும் நாயகனின் கதை ...

சவக்கிடங்கு

பெய் ரூட்டில் நடந்த துப்பாக்கிகளின் இரை பிணங்களவை.. சவ கிடங்கு காவலனின் கால்களெல்லாம் ரத்தம்.. சவ குழிகள் நிறைந்த ஏக்கத்தில் இடமில்லை என்றான் இறுதி சடங்கன்.. ஒரு பிணம் "நான் இஸ்லாம் பிணம்   மந்திரியின் மகனும் கூட   எனக்கே இடமென்றது.. ஒரு பிணம்    "நான் யூதப் பிணம்      உயர் குலத்தோனுக்கு     இடமில்லையா??? ஒரு பிணம்     "நான் கிருத்துவ பிணம்       மெய்படி நானே      உகந்தோனென்றது… ஒரு பிணம்      " நான் அமைச்சரின்        அண்ணன் பதவி       பத்தரம் என்றது.. உடனே அப்பிண்டத்திற்கு சகல நெறியோடு அடக்கம்.. ஏனோ அது அரசாங்க சவகிடங்காம்….      

இந்திய விவசாயத்தின் வரலாறு

விவசாயத்தின் வரலாறு "உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் தொழுதுண்டு பின்செல் பவர்’          விவசாயம் மனித ஜீவிகள் மொத்தமும் இதனை சார்ந்து வாழவேண்டிய கட்டாயத்தில் தான் இருக்கிறது.உயிரினம் பிறந்த முதலில் இருந்தே ஏதோ ஒரு விளைச்சல்களை நம்பி தான் இருந்திருக்கிறது.இதை இந்த காலத்தவர் உணர்ந்தார்கள் என்பது தான் கேள்வி குறியாகவே உள்ளது.          மனிதன் பூமியில் தோன்றிய காலத்திலிருந்தே உணவு,உடை,இருப்பிடம் ஏதோ ஒன்றை சார்ந்து வாழ வேண்டிய கட்டாயத்தில் தான் இருந்தது.அதை வைத்து தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் மூன்று பிரிவாக பிரிக்கிறார்கள். கற்காலம்           இந்த காலத்தில் ஆதி மனிதன் காடும்,அதன் சார்ந்த வாழ்வொன்றை வாழ்ந்து வந்தான்.அவனின் அன்றாட தேவைக்கான உணவை வேட்டையாடியோ அல்லது காடுகளிலிருந்தோ எடுத்து கொண்டான்.அந்த கால கட்டத்தில் இயற்கையே கதியென பசுமையோடு கொஞ்சு குத்தாட்டம் போட்டுகொண்டான்.அவனுக்கென எந்த வித மனப்பாகுபாடுமில்லை.நீ உயர்ந்தவன் நான் உயர்ந்தவன் எனும் பேசிக...