அடுத்தவன் வீட்டில் அடிதடி என்றால் வேடிக்கை பார்த்து ரசிப்பது அந்த ஊர் காரர்களின் பொழுதுபோக்காயிற்று. அப்படித்தான் ராகவன் வீட்டிலும் ஒன்று நடந்துகொண்டிருந்தது.ராகவன் அப்பா அவனின் துணி மணிகளை தூக்கி வெளியே வீசிக் கொண்டிருந்தார். "எவளடா…இழுத்துக்கு வந்து நிக்கிற???பன்னி மேக்கிறவன் மகளாம் எனக்கு மருமகளா??? வெக்காளி ஒழுக்கா ஓடிப்பொயிரு ஏன் மானத்தை வாங்கமா…."கணத்த கோபத்தோடு இப்படி பேசிச்கொண்டே இருக்க ராகவனும் அவனின் காதலியும் தலையை தொங்க போட்டு நின்றிருந்தார்கள். கூட்டத்தில் ஒரு பெருசு…"கூப்பிட்டு வாரவேன் காலகாலத்தில வர வேணாமா…இன்னேரத்தில வந்து தூக்கத்தை கெடுக்குறானே…" "யோவ் மொக்க…உனக்கெல்லாம் வயசாச்சுனு தே பேரு…பெரிய மனுசானா போய் பஞ்சாயத்தை முடிச்சு விடுயா என இன்னோருவன் சொல்ல…" "அடியேய் …சுளி மகனே..நீயும் அவன் கூட்டாளி தானாட…கோளாற அந்த புள்ளையை சேத்துவிட்டுட்டு இங்க வந்து ஒன்னும் தெரியாதவனாட்டம் நிக்கிறியா…இ...
writter அஞர் நாவல் - வர டீ பதிப்பகம் வெளியீடு https://www.commonfolks.in/books/d/angar