பிச்சைகாரர்கள்
தன் அம்மாவை முதியோர்இல்லம்
சேர்க்க சொல்லி கெஞ்சுபவன்
கடவுளை வணங்கி தன்னை
மட்டும் காப்பற்ற கேட்பவன்
விவசாய தொழிலை
மதிக்காது சோறு கேட்பவன்
தன் உண்மையான தோழியிடம்
காதலிக்க கேட்பவன்
கம்மங்குழை கேவளபடுத்தி
பீட்சா கேட்பவன்
மணலை அள்ளி கட்டிடம் கட்டிவிட்டு
மழை கேட்பவன்
இன்னும் மாமனாரிடம்
வரதட்சணை கேட்பவன்
சாக்கடை சுத்தம் செய்பவனை
குடிசையில் தள்ளி மாடி வீடுகேட்பவன்
இதற்கெல்லாம் மேலாமாக
ஒன்றுமே செய்யாதுஓட்டு கேட்பவன்
இவர்கள் தான் உலகத்தின்
உண்மையான பிச்சைகாரர்கள்....
---------- சிபி
கருத்துகள்
கருத்துரையிடுக