முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

இளஞ்சிவப்பு நிற ரத்தம்- சிறுகதை

                இளஞ்சிவப்பு நிற ரத்தம்        மத்தியான வெயிலில் ரயில் தண்டவாளங்களின் மீது பட்ட சூரிய ஒளி மெல்ல ஊர்ந்து நகர்ந்தது. பிளாட்பாம் நம்பர் 3ல் பீச் ஸ்டேசன் ரயிலுக்காக சில முகங்கள் காத்திருந்தன. ஒவ்வொரு முகங்களிலும் விடுமுறை நாள் முடிந்து தங்கள் அலுவல் பணிக்குச் செல்வதற்கான மனநிலையில் நனைந்த காகிதங்களாய் சுருங்கியிருந்தன. நடை மேடையில் யுவதிகள் கூட்டமொன்று வாயை கோணித்துக்கொண்டு செல்பி எடுக்க ஆயத்தமாக, நடைமேடையில் பாதிக்கு மேலான தலையைத் தொங்கப் போட்டு செல்போனுக்குள் நுழைந்திருந்தனர்.          நான் அங்கிருந்த இருக்கையில் உட்கார்ந்து கொண்டு  எனக்கு நேர் எதிரே இருந்த சிவப்பு சுடிதாரை நோட்டம் விட்டபடியிருந்தேன். அவள் கழுத்தோரத்தில் மினுக்கிய தழும்பும், லேசாக துரித்துக்கொண்டிருக்கும் எழும்பும் பார்க்க கவர்ச்சியாக இருந்ததெனத் ...

கர்ணன் -Movie review

ஏன் பரியேரும் பெருமாள் படத்தில் வந்த பரியனை கொண்டாடியது ஆதிக்க சமூகம் .பரியன் அவர்களிடம் கெஞ்சினான். ஆதிக்க மனோபாவம் உடையவனுக்கு சமூக நீதி கேட்கும் போது கூட கெஞ்ச வேண்டும். அதே கர்ணனாக எதிர்த்து நின்றால் கோவப்பட்டால் அவர்களுக்கு பொறுக்காது. நான் அகிம்சையை நேசிப்பவன் தான். ஆனால் நீ இந்த பூமியில் ஒரு மனுசனை மனிதனே இல்லை நீ வெறும் புழுவுக்கு சமம் எனச் சொல்லும் போது அவனை அதிகார வர்கமே போட்டு மிதிக்கும் போது எப்படி கோபம் வராமல் இருக்கும். எப்படி அந்த புழு நசுக்கும் கால்களிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்வது.ஒரே வழி வன்முறை தான். இதே தான் இலங்கையிலும் நடந்தது. சில சமயம் அகிம்சை மிருக ஜென்மங்களிடம் செல்லுபடி ஆகாது. நீங்கள் செல்லும் பாதையில் ஒரு மரம் சாய்ந்து வழியில் கிடைக்கிறது என வைத்துக் கொள்வோம். அதை உங்களால் எப்படி கடக்க முடியும். அதனிடம் கெஞ்சி மன்றாட முடியாது. பதிலுக்கு கோடாரி எடுத்து தான் ஆக வேண்டும். மரத்தை அப்புறப்படுத்த தான் வேண்டும். அதை தான் கர்ணனும் செய்திருக்கிறார். ஆனால் இந்த படத்தை படிக்காத தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் எப்படி எடுத்து கொள்வார்கள் என்பது தான் கேள்வி?...

தன்பாலீர்ப்பு _ சிறுகதை

“ என்னடி திடீர்னு இப்படி சொல்ற ? “   “அம்மா , நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து எடுத்த முடிவுதாமா… “    “ அடி பாவி மகளே இதுக்காடி உனக்கு செலவு பண்ணி ராணி மாதிரி கட்டி குடுத்தோம். “  இடையில் ரஞ்சனியின் அப்பா   “ ராதா சும்மா கத்தாதடி அவளே இப்ப தான் வந்துருக்கா .. அவளை போய் ஏன் டீ திட்டிட்டு இருக்க … போமா… நீ போயி ரெஃப்ரஸ் ஆகிட்டு ரெஸ்ட் எடும்மா நம்ம அப்பறம் பேசுவோம். “       ரஞ்சனி எதுவும் சொல்லிக்கொள்ளாமல் வேகமாக அறைக்குள் சென்று தாழிட்டுக்கொண்டாள். வீடு முழுதும் பெரும் அமைதி.இன்னோரு அறையில் படித்துக் கொண்டிருந்த ரஞ்சனியின் தம்பி தலையை மட்டும் வெளியே நீட்டி எட்டி பார்த்தான். பெற்றோர் இருவரும் முறைத்து பார்த்துக் கொண்டனர். வாசிங் மிஷீன் சத்தம் சற்று அதிகரித்து கத்த துவங்கி வீட்டின் அமைதியை சீர்குலைத்தது. துவைத்த துணியை மொட்ட மாடிக்கு தூக்கி கொண்டு ராதாவால் ஏற முடியவில்லை. முன்பை விட இப்போது அது பயங்கர கனமானதாக இருந்தது. ஒவ்வொரு படிக்கட்டை கடப்பதற்கும் அவள் மிக சிரமப்பட்டாள்.  “ கல்யாணம் ஆகி இதோடு மூன்று வருடம் ஆகிறது. ஒரு நாள் ...

எச்சிலை -சிறுகதை தொகுப்பு

கரிசல் மண் வாழ் மக்களின் வாழ்க்கையை அவர்களின் அன்றாடப்பாடுகளின் விவரணைகளை கதாபாத்திரங்களுக்கு உருவகம் கொடுத்து , கதை மாந்தர்களாக்கு எழுதப்பட்ட கதைகளே இந்த எச்சிலை சிறுகதை தொகுப்பு. 2021 சென்னை புத்தக கண்காட்சியில் ஏ எம் புக் ஹவுஸ் பதிப்பகத்தின் மூலம் இந்த நூல் வெளியாகியிருக்கிறது. நூலைப் பெற தொடர்புக்கு : 6379165176

செம்மண் - குறுநாவல்

ஒரு கிராமத்து பட்டதாரி இளைஞர்கள் தங்கள் வாழ்வில் சந்திக்கும் அவலங்களை, அவர்களின் அன்றாட மனக்குமுறல்களை இங்கே பதிவு செய்திருக்கிறேன். எந்த ஒரு படைப்பாக இருந்தாலும் சரி நம்மை அறியாமலே நம் வாழ்வில் சந்தித்த கதாப்பாத்திரங்கள் நம் படைப்பில் வந்து விழுந்துவிடும். அப்படி நான் பார்த்து பழகிய சில கதாபாத்திரங்களை இங்கே சேர்த்திருக்கிறேன். நூலைப் பெற தொடர்புக்கு :  padaippu publication : 9790821981 / 7871357579 A/C NUMBER: 6650568504 A/C NAME: ILAKKIYA PADAIPPU KUZHUMAM BANK NAME: INDIAN BANK BRANCH: VILLIVAKKAM, CHENNAI IFSC CODE: IDIB000V023.

கடன் -சிறுகதை

   ஏன் இரவை இவ்வளவு  வேகமாகப்  புணர்ந்து கொண்டிருக்கிறேன். மூளை அதிர யார் சுத்தியால் அடிப்பது. மின் விசிறியின் ஓசை ஏன் அறையின் அமைதியை இப்படி  திங்கிறது . பசிக்கு இத்தனை பெயர்கள் வைத்து யார் ஆற்றுகிறார்கள். என்னை நானே கொன்று கொல்ல வேண்டுமென ஆசையாய் இருக்கிறது. மற்ற ஜீவ  ராசிகளைப்  போல இந்த உலகத்தில் வாழப் பயிற்சி  எடுத்துக்  கொள்ளாத என்னால்  தற்கொலையைத்  தவிர வேறெதுவும் சிந்திக்க முடியவில்லை.  காலையிலிருந்து அம்மா அழைத்த வண்ணமிருக்கிறாள். அப்பனுக்கு நோய் முற்றி விட்டதாம். "சாகும் முன்பாவது வந்து பார் என்பதே அவளது பேராசையாய் இருந்தது. ஆனால் நான்  எப்படிச்  செல்வது கையில்  சுத்தமாகக்  காசேயில்லை. யாரிடமாவது கடன் கேட்கலாமா?  அதற்குப்   பதிலாகப்  பிச்சை எடுத்தால் என்ன?   கடன் அந்த வார்த்தை தான் எங்கள் குடும்பத்தை  சின்னாபின்னமாக்கியிருக்கிறது .விவசாயத்திலிருந்து, ஆடம்பரம் வரை எல்லாவற்றுக்கும் கடன்,வட்டி கட்டி கட்டியே அப்பன் தேய்ந்து போனான். இதில் குடிப்பழக்கம் வேறு. இத்த...

பிங்க் நிற காதல்

பிங்க் நிற காதல் ஆர்த்திக்கு எப்போதாவது இயற்கையின் மீது பெரும் பற்று வரும். அதுவரை அந்த அறைக்குள்ளேயே அடைந்து கிடப்பாள். இன்டர்நெட்டில் படம் பார்ப்பது, அதை விட்டால் கேம் விளையாடுவது தான் அவளின் பிரதான பொழுதுபோக்கு. "வயசு 25 ஆகப்போகுது இன்னும் குழந்தை மாதிரி கேம் விளையாடிக்கிட்டு இருக்க ,நீயெல்லாம் புருசன் வீட்டுக்கு போய் என்ன செய்ய போறியோ? " அம்மா ஒவ்வொரு முறை இப்படி திட்டும் போதும் அவள் நெஞ்சுக்குள் பெரும் பயம் தொற்றிக் கொள்ளும்.நெஞ்சு இரும்பாய் கனத்து இறுக்கமடைவதாய் உணர்வாள். ஒரு ஆணோடு கை கோர்த்து நடக்க வேண்டுமா? அவன் உடலோடு உடலுரசி ஸ்பரிசம் தீண்ட வேண்டுமா? இதனை அவளால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. அதற்கு தற்கொலையே மேல் என நினைத்தாள். மிகவும் ஒல்லியான தேகமும்,ரொம்பவும் அழகென சொல்லிவிடக்கூடியவளாய் இல்லாவிட்டாலும் லட்சணமான முகப் பச்சியுள்ள மாநிறத்துக்கு காரிதான் ஆர்த்தி. ஆனால் அந்த கண்கள் எவ்வளவு ஒளியை தரக்கூடியதாக இருக்கிறது. முதல் முதலாக அவளை நேருக்கு ,நேராய் பார்த்து பேசும் யாரும் விழுந்து...