முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இளஞ்சிவப்பு நிற ரத்தம்- சிறுகதை

 

              இளஞ்சிவப்பு நிற ரத்தம்

       மத்தியான வெயிலில் ரயில் தண்டவாளங்களின் மீது பட்ட சூரிய ஒளி மெல்ல ஊர்ந்து நகர்ந்தது. பிளாட்பாம் நம்பர் 3ல் பீச் ஸ்டேசன் ரயிலுக்காக சில முகங்கள் காத்திருந்தன. ஒவ்வொரு முகங்களிலும் விடுமுறை நாள் முடிந்து தங்கள் அலுவல் பணிக்குச் செல்வதற்கான மனநிலையில் நனைந்த காகிதங்களாய் சுருங்கியிருந்தன. நடை மேடையில் யுவதிகள் கூட்டமொன்று வாயை கோணித்துக்கொண்டு செல்பி எடுக்க ஆயத்தமாக, நடைமேடையில் பாதிக்கு மேலான தலையைத் தொங்கப் போட்டு செல்போனுக்குள் நுழைந்திருந்தனர்.



         நான் அங்கிருந்த இருக்கையில் உட்கார்ந்து கொண்டு  எனக்கு நேர் எதிரே இருந்த சிவப்பு சுடிதாரை நோட்டம் விட்டபடியிருந்தேன். அவள் கழுத்தோரத்தில் மினுக்கிய தழும்பும், லேசாக துரித்துக்கொண்டிருக்கும் எழும்பும் பார்க்க கவர்ச்சியாக இருந்ததெனத் தான் சொல்ல வேண்டும். மேலும் காதோரமாய் காற்றுக்கு ஊறும் கூந்தல்கள் எனை கிரங்கடித்தன.

    “ அப்போது நடை மேடை இரண்டில் வேளச்சேரி செல்லும் ரயில் புறப்படத் தயாராக இருக்கிறது…”  என்ற அறிவிப்பை ஒலித்தது. அதனைக் கேட்டும் கேட்காததும் போல் என் கவனம் முழுவதும் அந்த சிவப்பு சுடிதார் மீது நிறைந்திருந்தது. அவள் அணிந்திருந்த இறுக்கமான லெக்கின்ஸ் அவளது தொடைப் பகுதியை இன்னும் கவர்ச்சியாகத் தூக்கிக் காட்டியது. இதில் கால் மேல் கா போட்டு வேறு உட்கார்ந்திருந்தாள் என்றால் மற்றதை நீங்களே யுகித்துக்கொள்ளுங்களே !

 

     ரயில் கிளம்பும் சத்தம் வேளச்சேரி வண்டி மெல்ல ஊர்ந்து வந்து நின்றது. படிக்கட்டுகள் வழியே மனித பிண்டங்கள் தங்களைத் தூக்கிக் கொண்டு அவசர அவசரமாக வண்டியில் ஏறின.எப்போதும் ரயில் நிலையத்தைப் போகும் இரு வித மெல்லிய சங்கு சத்தம் போல்  கேட்கும் அதைக் கூர்மையாக கவனித்தவாறே சிவப்பு சுடிதார் பக்கம் திரும்பினேன். அவள் கால்களை ஒட்டி ஊனமான பெண்ணொருத்தி தன் உடலைத் தரையில் உரசிக்கொண்டே வந்து நின்றாள். தனது கைகளை உயர்த்தி என் தேவதையிடம் யாசகம் கேட்டாள். ஆனால் அவளோ கண்டுகொள்ளாதது போல் செல்போனை நோண்டினாள். மீண்டும் , மீண்டும் காற்றில் அந்த பெண்ணின் உள்ளங்கைகள் உயர்ந்து ,உயர்ந்து யாசகம் கேட்க அவள் மசிவதாயில்லை. பின் எவ்வித சலிப்பும் இல்லாமல் அந்த பெண்மணி தன் உடலைத் தேய்த்துக்கொண்டே எனை நோக்கி வந்தாள். நான் மீண்டும் அவள் மீது பார்வையைத் திருப்பினேன். முன்பு பார்த்த அதே சிவப்பு சுடிதார், பட்சியான மச்சம், படரும் கூந்தல் ஆனால் ரசிக்கத்தான் மனமில்லை. உங்களுக்கு உண்மையாகச் சொல்ல வேண்டும் என்றால் அப்போது ஒரு புழுவைப் போலத்தான் எனக்குத் தெரிந்தாள்.

    இப்போது அந்த ஊனமான பெண் எனை நோக்கி வருகிறாள். அவள்  சுடிதார் உடுத்தியிருக்க வேண்டும். அழுக்கேறி உப்பரித்து அவள் சுடிதாரின் முதுகு பகுதியில் வெள்ளை வெள்ளையாய் படிந்திருந்தது.வலது கால் சூம்பிப்போய் முருங்கைகாயை விடச் சன்னமாக மேல் நோக்கித் தூக்கி நின்றது. இடது கால்களே தெரியவில்லை.கைகளால் தான் ஊர்ந்து வந்தாள். கொஞ்சம் பெருத்த உடல்வாகும் , கருப்படித்த கன்னங்களும்,துயரங்களால் இருண்டு போயிருந்த முகமும் என்னை ஒரு மாதிரி உருக்கி எடுத்தது. தரையில் உடலைத் தேய்த்து , தேய்த்து வருவதற்குக் கொஞ்சம்  நாழியானது. என்னால் அந்த உருவத்தைப் பார்க்க முடியவில்லை. தொண்டையில் உருளையாய் கத்திகள் கீறுவதைப் போல் ஒரு உணர்வு. அந்த பெண் இப்போது என் காலருகில் , அதே யாசக பாணி , அதே உள்ளங்கை, ஆனால் அந்த கண்கள் ஏக்கத்தின் வெளிப்பாடற்ற கண்கள்,இருளின் ஒளியில் மினுக்கும் பூனையில் கண்களைப் போல அவ்வளவு பிரகாசம்,நான் ஒரு நிமிடம் சுயத்தை இழந்து அந்த கண்களுக்குள் பயணிக்க ஆரம்பித்து விட்டேன். தொண்டையில் கிழித்துக்கொண்டிருந்த கத்தி அடிவயிற்றில் வந்து வயிற்றைக் கலக்கியது. நான் பதற்றத்தில் பின்பாக்கெட்டில் இருந்த பர்சை எடுக்க தடுமாறினேன். பத்து ரூபாய்த் தாளைக் காற்றில் மிதக்கும் அந்த உள்ளங்கை மீது வைத்ததும் படக்கென மூடிக்கொண்டது. ஆனால் அந்த கைகள் கீழிறங்க வில்லை.அவள் எனை பார்த்து தனது காவி நிறத்தில் கரை படிந்த பற்கள் தெரிய உதடுகள் விரித்துச் சிரித்தாள். மீண்டும் தரையில் கையை ஊன்றி உடலைத் தரையோடு தேய்த்து , தேய்த்து நகர்ந்தாள். அவள் பின்புறத்தில் புட்டத்தைச் சுற்றி அழுக்கும் ,ஈரமுமாய் ஆங்காங்கே ரத்தக் கரைகள் ஊறி இளஞ்சிவப்பு நிறத்திற்கு மாறியிருந்தது. என்னால் அதனை மேற்கொண்டு பார்க்க முடியவில்லை. நீங்களே சொல்லுங்கள் எப்படிப் பார்த்தாலும் எனக்குள் சிறிதேனும் மனிதம் இருக்கும் தானே ?

       எனக்கு நேர் எதிரே ஒரு ஆள் ஒற்றைக் கையால் பொட்டலத்தை பிரித்துக்கொண்டிருந்தார். பாதியளவு மட்டுமே வளர்ந்து நின்றுபோன அவரது இடது கையின் மொட்டுப் பகுதியை அண்டக் கொடுத்து எப்படியோ சாப்பாட்டுப் பொட்டலத்தைப் பிரித்துவிட்டார். மாதக்கணக்கில் மழிக்காத தாடியும் , செம்பட்டை அப்பிய சுருள் முடியும் ஒரு மாதிரி அவரை ரயில் வாசி என யூகிக்க வைத்தது. பாட்டுப் பாடி காசு கேட்பவராக இருக்கலாம் என்பது என் கணிப்பு.

          அந்த மாற்றுத் திறனாளி பெண் மீண்டும் எனை நோக்கி ஊர்ந்து வந்தாள். இப்போது வேகமாக , அதிவேகமாக வந்து எனது இருக்கையில் பக்கத்தில் அமர்ந்து கொண்டாள். டீ கடையிலிருந்து ஒரு ஆள் சிரித்துக்கொண்டே அவள் முன்னே டீ கப்பை வைத்துவிட்டுப் போனான். அவள் தனது சூம்பிய கால்களை விரித்து உட்கார்ந்து கொஞ்சம் பெருமூச்சு வாங்கினாள். நான் அவளது தொடைகளைக் கவனிக்கையில் அந்த இடத்தில் துணி நீளமாகக் கிழிக்கப்பட்டு பிறாண்டி எடுத்தது போல் கீறல்கள் இருந்தன. நான் பார்ப்பதைக் கவனித்தவள் வெடுக்கென மீண்டும் கால்களை ஒடுக்கினாள். கேவலமான ஒரு பார்வையில் எனை பார்த்துக்கொண்டே, தனது மேல் உதட்டை திறந்து தேநீரை உறிஞ்சத் துவங்கினாள்.

     “ எப்படி இவ்ளோ பெரிய காயம் அந்த இடத்துல ?” என்னை அறியாமல் உணர்ச்சி பெருக்கில் அவளிடம் கேட்டேன். எந்த வித பதிலும் தராமல் மீண்டும் டீயை குடித்தாள்.

     “ பிளீஸ் சொல்லுங்க ? என்ன ஆச்சு , எதாவது பிரச்சனையா ?

      அவள் எனை முறைப்பது போல் நோட்டமிட்டாள். பின் மீண்டும் டீயை உறிஞ்சிக்கொண்டே எங்கள் எதிரே சாப்பிட்டுக்கொண்டே அந்த ஒத்தக்கை நபரை பார்த்தவாறே

      “ காலு மொடமானாலும் நானும் பொம்பள தான ? என்ன மட்டும் ஆம்பளங்க விடுவாங்களா என்ன? “

      “ யாரு அவனா ? “

     அவள் சிரித்துக்கொண்டே 

     “ யாரா இருந்தா என்ன ? அவனை மாதிரி எத்தனை ஆம்பளங்க ? கிழிஞ்சது , கிழிஞ்சது தான் , காசுப்போட்டியா , ட்ரெயின் ஏறுனியாணு பொழப்ப பாத்துப்போ “ எனச் சொல்லிவிட்டு மீண்டும் தன் சூம்பிய கால்களைப் பின்புறமாக வளைத்துத் தேக்கி ,தேக்கி ஊர்ந்தாள்.அவளின் பின்புறத்தில் இளஞ்சிவப்பு நிற ரத்தம்.

 

சிபி சரவணன்


 

    


கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2024_ஒரு அலசல்

  2024 - இல் நான் மிகப்பெரிய கெஜ புழு..தியாக இருந்தேன். வரும் வருடத்தில் இன்னும் மிகப்பெரிய கெஜ புழு..தியாக மாற போகிறேன். நான் அவ்வொரு ஆண்டு முடியும் போதும் போன வருடத்தை விட இந்த வருடம் சிறப்பாக புழு..தி இருப்பதாக நினைத்து கொள்வதுண்டு. இல்லையென்றால் சில நேரம் என் கீழ்மை குணங்களை அளவிடுவதுண்டு. நான் போன ஆண்டை விட இந்த ஆண்டு எவ்வளவு கீழ்மை குணம் உள்ளவனாக மாறியிருக்கிறேன். எந்த அளவுக்கு என் அல்ப புத்திகள் அரங்கேறியிருக்கிறது என கணக்கிட்டு பார்ப்பேன். நான் ஒரு மகா சோம்பேறி . இலையை போல் தூக்கி ஆற்றில் போட்டால் மிதந்து மிதந்து போவேன். பாறையில் மோதாமல் போகும் சூட்சமும் தெரியும்.என்னை பெரிய பிடுங்கியாக எப்போதும் நினைப்பதில்லை. ஒரு நல்ல இயக்குனரிடம் பணிபுரிய வாய்ப்பு கிடைத்தது . நிறைய கற்றுக் கொள்ள முடிந்தது.  நாம் சாதாரண கடன் கார குடும்பம் என்பதால் சூ..தை கிழிக்கும் சுமை வேறு நம்மை வேட்டையாடுகிறது. எல்லோரையும் போல் நமக்கு எல்லாம் அவ்வளவு இலகுவாக கிடைப்பதில்லை. ஏதோ நெஞ்சில் உரமிருக்க ஓடுகிறோம். உடல் ரீதியாக நிறைய கோளாறுகள் இருக்கிறது. அப்படி பயந்து கொள்ளும் அளவுக்கு ஒன்றுமில்லை தான் பா...

கெடா விருந்து - சிறுகதை

                     கெடா விருந்து    ப ள்ளிக் கூடத்தில் பெல் அடிக்கும் சத்தம் கேட்டது . உடனே எங்கள் வகுப்பில் படர்ந்திருந்த சலசலப்பு மெல்ல மடிந்து பெரும் அமைதி நிலவியது . நான் கடைசி பெஞ்சுக்கு முன்பிருந்த பெஞ்சில் அமர்ந்திருந்தேன் . எங்கள் வகுப்பில் கடைசி பெஞ்சில் அமர்ந்திருக்கும் ஐந்து மாணவர்கள் மட்டும் அழுக்கு அப்பிய சட்டையை அணிந்திருப்பார்கள் . பொதுவாகவே அரசினர் மாணவர் விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்களை மட்டும் எங்கள் வகுப்பில் ஒரு மாதிரியாகத்தான் பார்ப்போம் . அவர்களை பார்த்தாலே “ சொறி சிரங்கு பிடிச்சவங்களா ? போய் கடைசி பெஞ்சுல உக்காருங்கடா ?” என சமூக அறிவியல் ஆசிரியர்  துரத்துவார் . எங்கள் வகுப்பிலுள்ள ஐந்து பேரில் கோகுல் மட்டும் நன்றாக படிப்பான் . அவனை பார்த்தால் ஆறாவது படிக்கும் மாணவர்களை போல் அல்லாமல் உயரத்தில் சற்று பெரிய பையனாக இருப்பான் . அவனை வகுப்பில் எல்லோரும் கொக்கு என்று தான் பட்ட பெயர் வைத்து அழைப்பார்கள் . தமிழாசிரியர் கூட அவனை “ இவன பாருங்கடா , மந்த குளத்துல நீந்துர அயிர மீனை கொத்துரவான...

All about 2025

 2025 சொல் வதற்கு இனிய ஆண்டாக இல்லா விட்டாலும் , வாழ்வின் அர்த்தங்களை புதிய பாதையில் எனக்கு உணர்த்திய ஆண்டு. கடந்த ஆண்டு முழுக்க , முழுக்க என்னை இழந்து கொண்டிருந்தேன் என நினைக்கும் போதே ஆச்சரியமாக இருக்கிறது. சுய தெளிவும், சிந்தனையும் அற்று மற்றவர்களின் சொல் பேச்சை கெட்டு கடந்து வந்திருக்கிறேன் என கடைசியாக தான் புரிந்தது.  என் தனி தன்மையை நான் உணர தவறிய இந்த ஆண்டில் நிறைய பாடங்கள் கிடைத்தன. உடல் ரீதியாக நிறைய பலவீனங்களை சந்தித்து வந்த ஆண்டும் கூட.  என்னை மிகவும் நேசிப்பவர்களுக்காக என் ஆசையை கொஞ்சம் இறக்கி வைத்து விட்டு வரலாம் என தோன்றிய ஆண்டு தான் இது. என் வாழ்வில் முதல் முதலாக காதல் உதிர்த்த ஆண்டும் இது தான். அந்த காதலில் கிடைத்த குதூகலமும் மன மகிழ்ச்சியும் சொல்லி அடங்காதவை. ஆனால் எதுவும் நிலையானது அல்ல என இயற்கை எனக்கு மெதுவாக தான் உணர்த்தியது. யார் மீது குறை கூறி எந்த வித பயனும் இல்லை. என்னை நான் மாற்றி கொள்வதில் தான் எல்லா தீர்வும் இருக்கிறது என மெதுவாக தான் புரிய ஆரம்பித்தது. கடந்த ஆண்டில் நேர்ந்த சம்பவங்களும், துயரங்களும் நம்மை இன்னும் வலிமையான மனிதனாக மாற்றும் ...