முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கர்ணன் -Movie review

ஏன் பரியேரும் பெருமாள் படத்தில் வந்த பரியனை கொண்டாடியது ஆதிக்க சமூகம் .பரியன் அவர்களிடம் கெஞ்சினான். ஆதிக்க மனோபாவம் உடையவனுக்கு சமூக நீதி கேட்கும் போது கூட கெஞ்ச வேண்டும். அதே கர்ணனாக எதிர்த்து நின்றால் கோவப்பட்டால் அவர்களுக்கு பொறுக்காது. நான் அகிம்சையை நேசிப்பவன் தான். ஆனால் நீ இந்த பூமியில் ஒரு மனுசனை மனிதனே இல்லை நீ வெறும் புழுவுக்கு சமம் எனச் சொல்லும் போது அவனை அதிகார வர்கமே போட்டு மிதிக்கும் போது எப்படி கோபம் வராமல் இருக்கும். எப்படி அந்த புழு நசுக்கும் கால்களிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்வது.ஒரே வழி வன்முறை தான். இதே தான் இலங்கையிலும் நடந்தது. சில சமயம் அகிம்சை மிருக ஜென்மங்களிடம் செல்லுபடி ஆகாது. நீங்கள் செல்லும் பாதையில் ஒரு மரம் சாய்ந்து வழியில் கிடைக்கிறது என வைத்துக் கொள்வோம். அதை உங்களால் எப்படி கடக்க முடியும். அதனிடம் கெஞ்சி மன்றாட முடியாது. பதிலுக்கு கோடாரி எடுத்து தான் ஆக வேண்டும். மரத்தை அப்புறப்படுத்த தான் வேண்டும். அதை தான் கர்ணனும் செய்திருக்கிறார். ஆனால் இந்த படத்தை படிக்காத தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் எப்படி எடுத்து கொள்வார்கள் என்பது தான் கேள்வி?  
சரி அந்த குறியீடுகளை பற்றி நிறைய பேசலாம்.ஆனால் அதை அவர் அவர் பார்வைக்கு புரிந்து கொள்வது தான் புத்திசாலித்தனம். படம் பார்த்து அழுகாத மனுசன் மனுசனாக இருக்க முடியாது. சில சமயம் சில இடங்களை சினிமாவை  டெரண்டினோ ஸ்டையிலில் "Voilance is fun to watch " என எடுத்துக் கொண்டு கடந்து விட வேண்டியதான். தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவெல்லாம் வார்த்தைகளே இல்லை. மாரி செல்வராஜின் எழுத்தே படத்தின் மொத்த பலம். சிறு தெய்வ வழிபாட்டை பற்றி புரிதலை எளிய மக்கள் தங்கள் குடும்பத்தில் இழந்த ஒருத்தரை கடவுளாக்குவார்கள். அது தான் அந்த சிறுதெய்வ வேடத்தில் மாயையாக வரும் சிறுமி . பண்பாட்டு வாழ்வியலை பிரதிபலிப்பதில் உள்ள தெளிவு மெய்சிலிர்க்க வைக்கிறது. இத்தனைக்கும் ஊடாக இசையை வைத்து நம்மை அழவைக்கிறார் சந்தோஷ் நாராயணன். படத்தொகுப்பு அல்டிமேட் செய்கை. சினிமா தொழில்நுட்பத்தில் படம் உச்சகட்ட பாடப்புத்தகம். ஒவ்வொரு காட்சியும் ஒவ்வொரு படிப்பினை. கர்ணன் தருபவனல்ல கேட்பவன்....

கருத்துகள்

  1. படத்தின் கருத்துக்கள் காண்போரை பிரம்மிக்க வைத்துள்ளன. சாதிய பாகுபாடுகளை தெளிவாக உணர்த்தும் அற்புத படைப்பு.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2024_ஒரு அலசல்

  2024 - இல் நான் மிகப்பெரிய கெஜ புழு..தியாக இருந்தேன். வரும் வருடத்தில் இன்னும் மிகப்பெரிய கெஜ புழு..தியாக மாற போகிறேன். நான் அவ்வொரு ஆண்டு முடியும் போதும் போன வருடத்தை விட இந்த வருடம் சிறப்பாக புழு..தி இருப்பதாக நினைத்து கொள்வதுண்டு. இல்லையென்றால் சில நேரம் என் கீழ்மை குணங்களை அளவிடுவதுண்டு. நான் போன ஆண்டை விட இந்த ஆண்டு எவ்வளவு கீழ்மை குணம் உள்ளவனாக மாறியிருக்கிறேன். எந்த அளவுக்கு என் அல்ப புத்திகள் அரங்கேறியிருக்கிறது என கணக்கிட்டு பார்ப்பேன். நான் ஒரு மகா சோம்பேறி . இலையை போல் தூக்கி ஆற்றில் போட்டால் மிதந்து மிதந்து போவேன். பாறையில் மோதாமல் போகும் சூட்சமும் தெரியும்.என்னை பெரிய பிடுங்கியாக எப்போதும் நினைப்பதில்லை. ஒரு நல்ல இயக்குனரிடம் பணிபுரிய வாய்ப்பு கிடைத்தது . நிறைய கற்றுக் கொள்ள முடிந்தது.  நாம் சாதாரண கடன் கார குடும்பம் என்பதால் சூ..தை கிழிக்கும் சுமை வேறு நம்மை வேட்டையாடுகிறது. எல்லோரையும் போல் நமக்கு எல்லாம் அவ்வளவு இலகுவாக கிடைப்பதில்லை. ஏதோ நெஞ்சில் உரமிருக்க ஓடுகிறோம். உடல் ரீதியாக நிறைய கோளாறுகள் இருக்கிறது. அப்படி பயந்து கொள்ளும் அளவுக்கு ஒன்றுமில்லை தான் பா...

கெடா விருந்து - சிறுகதை

                     கெடா விருந்து    ப ள்ளிக் கூடத்தில் பெல் அடிக்கும் சத்தம் கேட்டது . உடனே எங்கள் வகுப்பில் படர்ந்திருந்த சலசலப்பு மெல்ல மடிந்து பெரும் அமைதி நிலவியது . நான் கடைசி பெஞ்சுக்கு முன்பிருந்த பெஞ்சில் அமர்ந்திருந்தேன் . எங்கள் வகுப்பில் கடைசி பெஞ்சில் அமர்ந்திருக்கும் ஐந்து மாணவர்கள் மட்டும் அழுக்கு அப்பிய சட்டையை அணிந்திருப்பார்கள் . பொதுவாகவே அரசினர் மாணவர் விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்களை மட்டும் எங்கள் வகுப்பில் ஒரு மாதிரியாகத்தான் பார்ப்போம் . அவர்களை பார்த்தாலே “ சொறி சிரங்கு பிடிச்சவங்களா ? போய் கடைசி பெஞ்சுல உக்காருங்கடா ?” என சமூக அறிவியல் ஆசிரியர்  துரத்துவார் . எங்கள் வகுப்பிலுள்ள ஐந்து பேரில் கோகுல் மட்டும் நன்றாக படிப்பான் . அவனை பார்த்தால் ஆறாவது படிக்கும் மாணவர்களை போல் அல்லாமல் உயரத்தில் சற்று பெரிய பையனாக இருப்பான் . அவனை வகுப்பில் எல்லோரும் கொக்கு என்று தான் பட்ட பெயர் வைத்து அழைப்பார்கள் . தமிழாசிரியர் கூட அவனை “ இவன பாருங்கடா , மந்த குளத்துல நீந்துர அயிர மீனை கொத்துரவான...

All about 2025

 2025 சொல் வதற்கு இனிய ஆண்டாக இல்லா விட்டாலும் , வாழ்வின் அர்த்தங்களை புதிய பாதையில் எனக்கு உணர்த்திய ஆண்டு. கடந்த ஆண்டு முழுக்க , முழுக்க என்னை இழந்து கொண்டிருந்தேன் என நினைக்கும் போதே ஆச்சரியமாக இருக்கிறது. சுய தெளிவும், சிந்தனையும் அற்று மற்றவர்களின் சொல் பேச்சை கெட்டு கடந்து வந்திருக்கிறேன் என கடைசியாக தான் புரிந்தது.  என் தனி தன்மையை நான் உணர தவறிய இந்த ஆண்டில் நிறைய பாடங்கள் கிடைத்தன. உடல் ரீதியாக நிறைய பலவீனங்களை சந்தித்து வந்த ஆண்டும் கூட.  என்னை மிகவும் நேசிப்பவர்களுக்காக என் ஆசையை கொஞ்சம் இறக்கி வைத்து விட்டு வரலாம் என தோன்றிய ஆண்டு தான் இது. என் வாழ்வில் முதல் முதலாக காதல் உதிர்த்த ஆண்டும் இது தான். அந்த காதலில் கிடைத்த குதூகலமும் மன மகிழ்ச்சியும் சொல்லி அடங்காதவை. ஆனால் எதுவும் நிலையானது அல்ல என இயற்கை எனக்கு மெதுவாக தான் உணர்த்தியது. யார் மீது குறை கூறி எந்த வித பயனும் இல்லை. என்னை நான் மாற்றி கொள்வதில் தான் எல்லா தீர்வும் இருக்கிறது என மெதுவாக தான் புரிய ஆரம்பித்தது. கடந்த ஆண்டில் நேர்ந்த சம்பவங்களும், துயரங்களும் நம்மை இன்னும் வலிமையான மனிதனாக மாற்றும் ...