முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பெரியார் மணியம்மையை திருமணம் செய்தது ஏன் ? திராவிட கட்சி திமுகவானதற்கு இது தான் காரணமா ?

 

செப்டம்பர் 17 தமிழக வரலாற்றில் மிக முக்கியமான நாள் என சொல்லலாம். திராவிட சித்தாந்தம் தமிழகத்தில் கோலூன்றிக் கொண்டிருந்த காலமது. பெரியாரின் நீதிக் கட்சியில் சேர்ந்து பணியாற்றிய அண்ணாவிற்கும், பெரியாருக்கும் இடையே உண்டான கருத்து முரணுக்கு மணியம்மையை பெரியார் திருமணம் செய்து கொண்டது தான் காரணமா? என பலராலும் பலவிதமான கேள்விகள் முன்வைக்கப்படுகிறது. உண்மையில் இவை இரண்டுக்கும் இடையில் நிறைய பின்புலக்காரணங்கள் இருக்கின்றன..





 

மணியம்மையை மணந்த பெரியார்

    பெரியார் தனது காலத்திற்கு பின்பு தனது சொத்துகளை பாதுகாக்க வாரிசு தேவைப்பட்டது. அப்போது அவர் அண்ணனின் மகனான ஈவிகே சம்பத்தை வாரிசாக தேர்ந்தெடுக்க நினைத்தார். ஆனால் அவர் அண்ணாவின் ஆதராவாளராக இருந்ததால் அந்த திட்டத்தை கைவிட்டார். பெரியார் என்ன தான் சுயமரியாதை கொள்கையை கடைபிடித்தாலும் இந்துத்துவ சட்டதிட்டங்களை ஏற்றார். அதற்குள்ளிருந்தே அதனை சீர் செய்ய முடியும் என நம்பினார். மேலும் பெரியாரின் சொத்தென்பதும், திராவிடகழகத்தின் சொத்தென்பதும் வேறில்லை. அதனால் தான் இல்லாத காலத்தில் அந்த சொத்து மக்களின் சீர்திருத்ததிற்கு சரியாக பயன்படுத்த பட வேண்டும் எனில் அதற்கு நம்பிக்கையான ஆள் வேண்டும் என நினைத்தார் , அதனால் தனது வளர்ப்பு மகளான மணியம்மையை அவர் திருமணம் செய்து கொண்டார்.

பெரியாரிடம் அண்ணாவிற்கு உண்டான முரண்

     பெரியாரின் கொள்கையை அண்ணா முழுமையாக ஏற்றுக்கொண்டாலும் ஒரு சில விசயங்களில் இருவரிடமும் முரணிருந்தது. உதாரணமாக திராவிட கழக தொண்டர்கள் அனைவரும் கருப்பு சட்டை அணிய வேண்டும் என பெரியார் கூறியதை அண்ணா ஏற்கவில்லை. வெள்ளை சட்டை, வேட்டி தான் நம் தமிழர்களின் உடை என நிராகரித்தார். மேலும் பெரியாரின் கடுமையான கடவுள் மறுப்பும் அண்ணாவிற்கு பிடிக்கவில்லை. எனவே தான் திரைக்கதை எழுதிய வேலைக்காரி படத்தில் ஒன்றே குலம், ஒருவனே தெய்வம் என எழுதினார். மேலும் இந்தியாவின் சுதந்திர தினத்தை பெரியார் கருப்பு தனிமாக கொண்டாட வேண்டும் என்றார். வெள்ளைகாரர்கள் போய் பார்ப்பனர்கள் கையில் ஆதிக்கம் வந்ததை அவர் விரும்பவில்லை. ஆனால் அண்ணா இரு எதிரிகளில் ஒருவரிடமிருந்து விடுதலை கிடைத்தது நல்லது என முரண்பட்டார், அண்ணா தனியாக திராவிட முரசு என பத்திரிக்கையை துவங்கி அதன் மூலம்  தனது முரண்பட்ட கருத்துகளை அதில் வெளியிட்டு வந்தார்.

மணியம்மை திருமணம் தான் திமுகவிற்கு காரணமா ?

   பெரியார் மணியம்மையை மணந்த பிறகு அண்ணா கட்சியின் ஒழுக்கம் சீர்கெட்டுவிட்டதென கட்சியிலிருந்து பிரிந்தார் என்பது அண்ணா தரப்பினரின் வாதம். ஆனால் பெரியார் விடுதலை இதழில் எழுதிய கட்டுரைகளில் சொத்து கிடைக்கவேண்டுமென அவர்களின் ஆசையை நான் தடுத்துவிட்டேன் என அவர்கள் தனியாக போகிறார்கள் என விமர்சிக்கிறார். ஆனால் அண்ணாவிற்கு அரசியல், ஆட்சி மூலமாக தான்  சமூக சீர்த்திருத்ததை கொண்டுவரமுடியும் என நம்பினார். உண்மையில் பெரியாருக்கு ஆட்சியிலிருந்து தான் நன்மை செய்ய வேண்டும் என்பதில் உடன்பாடில்லை.இவ்வாறு பல கருத்து முரண்கள் இருவரிடமும் இருந்தது.மணியம்மையோடு , பெரியார் திருமணம் செய்து கொண்ட அண்ணா கட்சியிருந்து பிரிய வலுவான காரணமாக அது அமைந்தது. இப்படி பார்த்தால் இருவரிடமும் தங்களது கருத்து ரீதியாக முரணிருந்தாலும் பெரியாரின் கொள்கையை அண்ணா ஆட்சிக்கு வந்ததும் சட்டப்படுத்தினார், மேலும் தான் முதலமைச்சராக பதவியேற்றதும் அண்ணா பெரியாரிடம் சென்று ஆசிர்வாதம் பெற்றார். அதற்கு பின் வந்த திராவிட கட்சிகள் கொஞ்சம் கொஞ்சமாக கடவுளை தீவிரமாக எதிர்ப்பதை குறைத்துக்கொண்டனர். அண்ணா கூட நான் பிள்ளையார் சிலையை உடைக்க மாட்டேன், பிள்ளையார் சிலைக்கு தேங்காயும் உடைக்கமாட்டேன் என சொல்வதுண்டு.

  பொதுவாக இன்றைய இணைய சமூகத்தில் பெரியாரை எதிர்க்க இந்த பெரியார்,  மணியம்மை திருமணத்தை கூறி அவரை கேலி செய்வதுண்டு, உண்மையில் அந்த திருமணம் தான் இன்றைக்கு திமுக என கட்சியை உருவாக்கி அதிலிருந்து அதிமுக எனும் கிளை கட்சி உருவாகி தமிழகத்தின் தலையெழுத்தே மாறியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

--சிபி சரவணன்

 

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2024_ஒரு அலசல்

  2024 - இல் நான் மிகப்பெரிய கெஜ புழு..தியாக இருந்தேன். வரும் வருடத்தில் இன்னும் மிகப்பெரிய கெஜ புழு..தியாக மாற போகிறேன். நான் அவ்வொரு ஆண்டு முடியும் போதும் போன வருடத்தை விட இந்த வருடம் சிறப்பாக புழு..தி இருப்பதாக நினைத்து கொள்வதுண்டு. இல்லையென்றால் சில நேரம் என் கீழ்மை குணங்களை அளவிடுவதுண்டு. நான் போன ஆண்டை விட இந்த ஆண்டு எவ்வளவு கீழ்மை குணம் உள்ளவனாக மாறியிருக்கிறேன். எந்த அளவுக்கு என் அல்ப புத்திகள் அரங்கேறியிருக்கிறது என கணக்கிட்டு பார்ப்பேன். நான் ஒரு மகா சோம்பேறி . இலையை போல் தூக்கி ஆற்றில் போட்டால் மிதந்து மிதந்து போவேன். பாறையில் மோதாமல் போகும் சூட்சமும் தெரியும்.என்னை பெரிய பிடுங்கியாக எப்போதும் நினைப்பதில்லை. ஒரு நல்ல இயக்குனரிடம் பணிபுரிய வாய்ப்பு கிடைத்தது . நிறைய கற்றுக் கொள்ள முடிந்தது.  நாம் சாதாரண கடன் கார குடும்பம் என்பதால் சூ..தை கிழிக்கும் சுமை வேறு நம்மை வேட்டையாடுகிறது. எல்லோரையும் போல் நமக்கு எல்லாம் அவ்வளவு இலகுவாக கிடைப்பதில்லை. ஏதோ நெஞ்சில் உரமிருக்க ஓடுகிறோம். உடல் ரீதியாக நிறைய கோளாறுகள் இருக்கிறது. அப்படி பயந்து கொள்ளும் அளவுக்கு ஒன்றுமில்லை தான் பா...

கெடா விருந்து - சிறுகதை

                     கெடா விருந்து    ப ள்ளிக் கூடத்தில் பெல் அடிக்கும் சத்தம் கேட்டது . உடனே எங்கள் வகுப்பில் படர்ந்திருந்த சலசலப்பு மெல்ல மடிந்து பெரும் அமைதி நிலவியது . நான் கடைசி பெஞ்சுக்கு முன்பிருந்த பெஞ்சில் அமர்ந்திருந்தேன் . எங்கள் வகுப்பில் கடைசி பெஞ்சில் அமர்ந்திருக்கும் ஐந்து மாணவர்கள் மட்டும் அழுக்கு அப்பிய சட்டையை அணிந்திருப்பார்கள் . பொதுவாகவே அரசினர் மாணவர் விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்களை மட்டும் எங்கள் வகுப்பில் ஒரு மாதிரியாகத்தான் பார்ப்போம் . அவர்களை பார்த்தாலே “ சொறி சிரங்கு பிடிச்சவங்களா ? போய் கடைசி பெஞ்சுல உக்காருங்கடா ?” என சமூக அறிவியல் ஆசிரியர்  துரத்துவார் . எங்கள் வகுப்பிலுள்ள ஐந்து பேரில் கோகுல் மட்டும் நன்றாக படிப்பான் . அவனை பார்த்தால் ஆறாவது படிக்கும் மாணவர்களை போல் அல்லாமல் உயரத்தில் சற்று பெரிய பையனாக இருப்பான் . அவனை வகுப்பில் எல்லோரும் கொக்கு என்று தான் பட்ட பெயர் வைத்து அழைப்பார்கள் . தமிழாசிரியர் கூட அவனை “ இவன பாருங்கடா , மந்த குளத்துல நீந்துர அயிர மீனை கொத்துரவான...

All about 2025

 2025 சொல் வதற்கு இனிய ஆண்டாக இல்லா விட்டாலும் , வாழ்வின் அர்த்தங்களை புதிய பாதையில் எனக்கு உணர்த்திய ஆண்டு. கடந்த ஆண்டு முழுக்க , முழுக்க என்னை இழந்து கொண்டிருந்தேன் என நினைக்கும் போதே ஆச்சரியமாக இருக்கிறது. சுய தெளிவும், சிந்தனையும் அற்று மற்றவர்களின் சொல் பேச்சை கெட்டு கடந்து வந்திருக்கிறேன் என கடைசியாக தான் புரிந்தது.  என் தனி தன்மையை நான் உணர தவறிய இந்த ஆண்டில் நிறைய பாடங்கள் கிடைத்தன. உடல் ரீதியாக நிறைய பலவீனங்களை சந்தித்து வந்த ஆண்டும் கூட.  என்னை மிகவும் நேசிப்பவர்களுக்காக என் ஆசையை கொஞ்சம் இறக்கி வைத்து விட்டு வரலாம் என தோன்றிய ஆண்டு தான் இது. என் வாழ்வில் முதல் முதலாக காதல் உதிர்த்த ஆண்டும் இது தான். அந்த காதலில் கிடைத்த குதூகலமும் மன மகிழ்ச்சியும் சொல்லி அடங்காதவை. ஆனால் எதுவும் நிலையானது அல்ல என இயற்கை எனக்கு மெதுவாக தான் உணர்த்தியது. யார் மீது குறை கூறி எந்த வித பயனும் இல்லை. என்னை நான் மாற்றி கொள்வதில் தான் எல்லா தீர்வும் இருக்கிறது என மெதுவாக தான் புரிய ஆரம்பித்தது. கடந்த ஆண்டில் நேர்ந்த சம்பவங்களும், துயரங்களும் நம்மை இன்னும் வலிமையான மனிதனாக மாற்றும் ...