முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

அஞர் நாவல்

  அணிந்துரை இலக்கிய வகைமையில் எனக்குப் பிடித்ததாக நான் நம்பியது கவிதைகளை தான் பிறகு அது எனக்கேற்ற வகைமையில்லை என்றுணரவே பத்தாண்டுகள் தேவைப்பட்டது. புதிதாக ஒரு புதினத்தை கண்டால் எனக்கு ஒரு புதிய உலகுகினுள் நுழைகிற உணர்வே ஏற்படுகிறது. ஒரு நல்ல புதினம் நம் மேல் ஒரு பிடித்த உடை போல உடலோடு ஒன்றிணைந்துவிடுகிறது. சில புதினங்கள் மனதோடு…அந்த வகையில் “அஞர்” என்னை கலங்க வைத்துவிட்டது. தமிழில் புதினமென்ற வடிவில் நிறைய எழுதப்பட்டிருக்கிறது ஆனால் அவையெல்லாம் புதினங்களா என்று கேட்டால் நான் நிச்சயம் சில கணங்களாவது பதிலற்று திகைத்து நிற்பேன். “அஞர்” ஒரு சிறந்த புதினம் இதை சாதித்த சிபி சரவணனுக்கு நம் வாழ்த்துக்கள். தென்மேற்கின் வட்டார மொழியுடன் அந்த நிலத்தின் அழகை கதையோடு பேசுவது உணர்ச்சிமிக்க இந்த நாவலின் மிகப்பெரிய பலம். இந்த புதினத்தை வாசித்து முடித்தவுடன் துயரில் நெஞ்சு அடைத்துக்கொண்டு கண் கலங்கிய பொழுதில் இப்படி தோன்றியது. “பிறகு அங்கிருந்து அத்தனையும் காணாமல் போயிருந்தது. ஆனால் அங்கு கொஞ்சம் வெதுவெதுப்பான தூய காதல் மட்டும் தேங்கியிருந்தது. அது இன்னும் ஆவியாகமலும், அழிந்...

திமில்-கவிதை தொகுப்பு

திமில் கவிதை தொகுப்பில் எழுதப்பட்டிருக்கும் கவிதைகள் அனைத்தும், தன் நிலத்தை தேடி அலையும், பண்பாட்டு அசைவுகளை தூண்டும் பின் நவினத்துவ கவிதைகள் இடம்பெற்றுள்ளன. தொடர்புக்கு  தமிழ்வெளி கலாபன்: 9094005600

மெர்சியின் பாவ மன்னிப்பு- சிறுகதை

                   ம துரை அரசு மருத்துவமனை யில் ச கீ தமாக கூட்டம் அலை மோதியது . பொதுவாக காலை பொழுதுகளில் அரசு பொது மருத்துவமனையில் வயோதிக கூட்டம் வாசலில் காத்து கிடக்கும் . ஒரு ஏழை க்கு அரசின் மருத்துவமனைகள் எத்தனை பயனுள்ள விஷயம் என அப்போது தான் பார்த்தால் தான் தெரியும் . படிப்பறிவு இல்லாத முதியோர்கள் பெற்ற பிள்ளைகளின் கவனிப்பாறற்று முதுமையில் பிறக்கும் நோயை எதிர்கொள்ள வேண்டிய சூழல் நிலவுகிறது . எழுத்தறிவு அ ற்ற அவர்கள் வா ர் டு வார் டாக அலைந்து தங்களது நோய்க்கு ஊக்கமளிக்கின்றனர் .   நோய்வாய்ப்பட்ட முதியவர் நுழைவு சீட்டை பெற்று ரத்த பரிசோதனை போன்ற இதர சோதனை கூடங்கள் நடத்தும் மருத்துவமனையின் வெவ்வேறு   வார்டுக ளை கண்டறிந்து தங்கள் நோய் க்கு சிகிச்சை பெறும் முன் மரித்து விடுகிறார்கள் . எத்தனையோ பெருசுகள் அரசு மருத்துவமனையில் ஓபி சீட் வாங்க முடியாமல் இற ந்து போயிருக்கிறார்க ள் என்பது அறியப்படாத கதை . அன்று மதிய நேரத்தில் அவசர ஊர்திகள் ரிங்கார மிட்டவாறு ஒரு உயிரை தன் மீது சுமந்து கொண்டே வந்தது .   ...