அ டுக்குமாடி குடியிருப்புகளை உரசிய வெயில் காலையை அறிமுகப்படுத்தியது . சித்தனின் கால்கள் வெயிலை உணர்ந்திருக்க கூடும் அதன் மனதை ஒளியூட்டும் பிரபஞ்சத்தை ஓட விட்டுப் பார்த்தான் . வெளியே மக்கும் குப்பை மக்கா குப்பை என பாடல் ஒலிக்க எப்போதும் போல இன்றும் அவன் சுகாதார துறையால் விழித்தான் . தினமும் அந்த பாடலை கேட்டு கேட்டு மனம் பழக்கமாகிவிட்டது . அவனது அறை கொஞ்சம் வசதியான அறை தான் என்றாலும் கூட சுத்தத்தைப் பற்றி என்னவென கேட்கும் நிலையில் தான் வைத்திருந்தான் . சோம்பலை முறித்தவன் எழுந்து பல் துலக்கிக் கொண்டே ஜன்னல் திரைகளை விளக்கிப் பார்த்தான் . வாகனங்கள் அவசர கதியில் ஊர்ந்து கொண்டிருந்தன . முன்னாள் செல்லும் வண்டி போக வழி இல்லாமல் நின்றிருந்தாலும் , ஹாரன் ஓசை மட்டும் ஓயவில்லை . ...
writter அஞர் நாவல் - வர டீ பதிப்பகம் வெளியீடு https://www.commonfolks.in/books/d/angar