முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஆன்மாவின் கண்ணீர் - சிறுகதை

         கார் இன்னும் எங்கள் ஊரை நெருங்கி விடவில்லை. சாலைகள் ஒரு சீராக இல்லாததால் வண்டி குலுங்கியது. சென்னையில் பயணம் துவங்கிய போது குடித்த தேநீரின் கசப்பு இன்னும் நாவை வறட்சியாக்கியது. சேதி வந்ததும் முதலில் அது என் மனைவியின் மூலமாகவே எனக்குத் தகவல் தெரிய வந்தது. அவள் மிகவும் சலனப்படுவது போல் நடித்துக் கொண்டே என்னிடம் அதைச் சொன்னாள். இதற்கு முன்பாக அவள் கடைசியாக அப்படி நடித்தது எனக்கு ஞாபகம் இல்லை. பேருந்து பயணத்தை விட்டுக் குறையக் காலம் ஆகிவிட்டது. நல்ல வேலையும், வசதியும் கிட்டத்தட்ட என்னைச் சோம்பேறியாக ஆக்கிவிட்டது. பயணத்தினூடே காரின் ஓட்டுநர் அடிக்கடி பின் கண்ணாடியில் என்னைப் பார்த்துக் கொண்டே வந்தான். அவனுக்கும் சேதி தெரியும் என்பதால் என் முகம் எவ்வளவு சுருங்கிப் போய் இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளத்தான் அவன் அவ்வாறு பார்க்கிறான் என எனக்குத் தெரிந்தும் நான் அவனோடு பேச்சு வளர்க்க விரும்பவில்லை. என்னிடம் கடந்த இரண்டு வருடமாக பணிபுரிந்து வரும் அவனுக்கு எனது எல்லா வகையான முகங்களும் தெரியும். பொறணிப் பேச்சில் பெயர் பெற்ற என் மனைவியின் ப...

ஞானச் சுடர் - சிறுகதை

  ஞானச்சுடர்     முத்தையனுக்கு இருளை விட ஒளி என்றால் அவ்வளவு பிரியம் . ஒளியின் கைகளில் தன்னை   புதைத்துக்   கொண்டு உறங்க வேண்டும் . அதுவும் அதிகாலை வெயில் தான் அவனது உறக்கத்திக்கான துவக்க நேரம் . கல்லைக் காடுகளில் காட்டுப்பன்றிகள் புகுந்துவிடாமல் காவலுக்கு இருப்பதே அவனது பிரதான வேலை . ஒளி ஒரு மனிதனின் வாழ்வில் தவிர்க்க முடியாத அங்கம் வகிக்கிறது என்பார்கள் . முத்தையனின் வாழ்வில் அது துளியுமில்லை . சிறுபிராயத்திலேயே அவனது அம்மா   பஸ்   ஓட்டுனரோடு   ஓடிப்போய் விட்ட சேதி இன்னும் ஊர்   வாய்களுக்குக்   கேளிக்கை   ஆகிவிட்ட பின்பு நிம்மதியாக எப்படி   வாழ்வைக்   கழிக்க முடியும் . அதுவும் அந்த அத்துவான இருளில் அவனது நெற்றியில் முத்தம் கொடுத்து விட்டு எப்படி அவளால் அவ்வளவு   எளிதாக   தன்னை   விட்டுப்   போக முடிந்தது என   நினைத்துப்   புலம்புவதுண்டு . அந்த இருளில் பொழுது கூட அவனை அவ்வளவு   ரணமாக   பாதிக்கவில்லை . பகல் இருக்கிறதே எத்தனை வாய்களை அசைத்துப் பார்க்கிறது .   ஓடுகாளி   ...